Latest Updates
-
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்!
எளிய கேள்வி
வஜ்ர சூத்திரம் என்று அறியப்படும் மஹாயான பௌத்த நெறி சாஸ்திரத்தில் வல்லமை படைத்த துறவி ஒருவர் இருந்தார். பல துறவிகளும், குருமார்களும் ஏன் சாமான்யர்களும் கூட அவரை அணுகி அந்த சாஸ்திரத்தின் அம்சங்களையும் பொருளையும் கேட்டு அறிந்து தெளிந்தனர். அந்த காலகட்டத்தில் புத்தகங்கள் விலை மதிப்பில்லாத பொக்கிஷமாக கருதப்பட்ட்தால் அவரிடம் இருந்த அந்த ஒரே பிரதியை (வஜ்ர சூத்திரம்) அவர் தன்னிடம் இருந்த பையில் பாதுகாத்து வைத்து முதுகில் சுமந்தே திரிந்தார். ஒரு நாள் அவர் ஒரு மலைப்பாதையில் களைத்த நிலையில் ஏறிக்கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தேநீர் மற்றும் ரொட்டி விற்றுக் கொண்டிருந்த கடையை சென்றடைந்தார்.
மிகவும் பசியுடன் இருந்த அந்த துறவியிடம் உணவு வாங்குவதற்கு பணம் ஏதும் இல்லாதிருந்தது. ஆகவே தன் பசியை எப்படியாவது தீர்ப்பதற்கு ஒரு வழியை யோசித்த அவர் அந்த முதிய பெண்மணியை பார்த்து "எனக்கு தேநீரும் ரொட்டியும் தந்தால் நான் உனக்கு விலை மதிப்பற்ற வஜ்ர சூத்திர நூலை தருகிறேன்" என்று வேண்டினார்.
வஜ்ர சூத்திரம் என்று அறியப்படும் சாஸ்திரத்தை பற்றியோ, அந்த நூலை பற்றியோ எதுவுமே கேள்விப்பட்டிராத அந்த கல்வியறிவற்ற முதியவள் துறவியை பார்த்து " துறவியே, நான் ஒரு எளிய கேள்வி கேட்பேன் அதற்கு நீர் பதில் சொன்னாலே போதும் நான் உமக்கு தேநீரும் ரொட்டியும் தருவேன்" என்று சொன்னாள்.
அதையடுத்து அந்த மூதாட்டி தன் கேள்வியை இப்படி கேட்டாள் - " நீர் இந்த ரொட்டியை உண்ணும்போது உங்கள் கடந்த கால மனத்தால் உண்ணுவீர்களா? நிகழ் காலத்தைச் சேர்ந்த மனத்தால் உண்ணுவீர்களா? அல்லது எதிர்கால மனத்தால் உண்ணுவீர்களா?"
முதியவள் கேட்ட அந்த கேள்விக்கு துறவியால் பதில் சொல்ல முடியாததால் வஜ்ர சூத்திர நூலை எடுத்து அதை புரட்டி அதில் பதிலை தேட முயன்றார். இப்படி அந்த கேள்விக்கான பதிலுக்காக அவர் அந்த நூலை வாசித்துக்கொண்டே இருந்ததில் பொழுதும் சாய்ந்து மாலையாகி விட்டது. கடையை மூடி தன் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பிய அந்த முதியவள் துறவியை பார்த்து " நீர் ஒரு அறிவில்லாத துறவி, இந்த ரொட்டிகளை உம் வாயால் சாப்பிடும்!" என்று சொல்லி அந்த துறவியை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு சென்றாள்.



Click it and Unblock the Notifications