Latest Updates
-
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம்
புத்தி என்னும் கோப்பை!!!
ஒரு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் புத்தமத உபசாரத்தைக் கற்க, பிரபலமான ஒரு ஜென் மாஸ்டரை பார்க்க மடாலயத்திற்குச் சென்றார். அவரை குரு அன்புடன் மடாலயத்திற்கு வரவேற்று, அமைதியாக அந்த பேராசிரியரை அமர செய்து, அவருக்கு தேநீரை கோப்பையில் ஊற்றி கொடுப்பதற்கு, அவர் முன் ஒரு கோப்பையை வைத்து, அதில் தேநீரை கோப்பை நிறைந்த பின்னும் ஊற்றி கொண்டே இருந்தார்.
இதைக் கண்ட பேராசிரியர், மாஸ்டர் மேலும் மேலும் ஊற்றி கொண்டிருப்பதை அறியாமல் செய்கிறாரோ என்று நினைத்து "கோப்பை நிறைந்துவிட்டது, அது கோப்பையிலிருந்து வழிகிறது. மேலும் அதில் ஊற்ற இன்னும் இடம் இல்லை" என்று கூறினார்.
அதற்கு குரு "அப்படியெனில் நீங்களும் இந்த கோப்பையை போல் தான். ஆகவே முதலில் உங்கள் புத்தி எனும் கோப்பையை காலி செய்து பின் வாருங்கள், இல்லையேல் எப்படி நான் உங்களுக்கு ஜென் உபசாரத்தை உமக்கு கற்று கொடுக்க இயலும்" என்றார்.
ஆகவே எதையும் உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று நீங்கள் நினைத்தால் எதையும் கற்க முடியாது. மேலும் இந்த கதையில், மாஸ்டர் காரணம் இல்லாமல் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டார். முதலில் பேராசிரியர் கற்க வந்திருக்கிறார். ஆகவே மாஸ்டர் கோப்பை நிரம்பி வழிந்தும் தேநீரை ஊற்றுகிறார் என்றால், அப்போது அந்த பேராசிரியர் அவரிடம் கோப்பை நிறைந்தும் தேநீரை ஊற்றுவதன் காரணம் என்ன? என்று தான் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் வேறு மாதிரி கேட்டதால், அதிகமான அறிவு வைத்திருந்தும், பின்னர் ஏன் அவர் மாஸ்டரிடம் சென்று, மேலும் கற்க வர வேண்டும். அதற்காகத் தான் மாஸ்டர் அவ்வாறு நடந்து கொண்டார். எனவே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்.



Click it and Unblock the Notifications
