Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
புனிதம் இல்லை, வெறும் வெறுமை!
சீன பேரரசர் வ்ஹு என்பவர் புத்தமதத்தை உறுதிப்படுத்தும் உன்னத நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அதனால் அவர் புத்தமதக் கோயில்கள் மற்றும் மடாலயங்கள் கட்டுவது, புத்த துறவிகளுக்கு கல்வி மற்றும் மனிதநேய செயல்கள் போன்ற பணிகளை மிகவும் ஆர்வத்துடன் செய்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் பேரரசர் பெரிய புத்த ஆசிரியரான போதி தர்மாவிடம் "என் நற்பணிகளுக்கான தகுதி என்ன?" என்று கேட்டார். போதி தர்மா அதற்கு "இதுவரை ஏதும் இல்லை" என்று அரசர் எதிர்பாராத பதிலைச் சொன்னார்.
பின்பு பேரரசர் அவரிடம் "சரி, உண்மையில் புனித நிலை என்றால் என்ன அர்த்தம்?" என்று கேட்டார். அதற்கு குருவும் "புனிதம் இல்லை, வெறும் வெறுமை" என்று அவரின் கேள்வியை சரி செய்தார். மறுபடியும் பேரரசர் போதி தர்மாவிடம் "பிறகு என்னை யார் வழி நடத்துவது" என்று கேட்க, குரு "எனக்கு தெரியாது" என்று பதில் அளித்தார்.
தான் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதிலைத் தரவில்லை என்று போதிதர்மாவின் மேல் பேரரசர் கோபம் கொண்டதால், போதிதர்மா இராஜ்ஜியம் விட்டு சென்றார்.
பின்னர் பேரரசர் வ்ஹு, இளவரசர் ஷிகோ மற்றும் ஆலோசகருடன், அதனைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் தான் பேரரசருக்கு போதிதர்மாவின் பெருந்தன்மையும், அவரது பதிலுக்கான உண்மையும் அரசருக்கு தெரிய வந்தது. அதனால் அவர் வருத்தம் கொண்டு மீண்டும் போதிதர்மாவை ராஜ்ஜியத்திற்கு வருமாறு தூது அனுப்பினார். அப்போது இளவரசர் சிகோ "இந்த உலகில் உள்ள எல்லா மக்களை அனுப்பினாலும் அவர் இனி திரும்ப மாட்டார்" என்றான்.



Click it and Unblock the Notifications
