Latest Updates
-
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்!
வீட்டுல பிரச்சனை அதிகமா இருக்கா? அப்ப இந்த பறவையின் போட்டோவை இந்த திசையில வையுங்க.. சரியாயிடும்..
Vastu Tips In Tamil: இன்பமும் துன்பமும் நிறைந்தது தான் வாழ்க்கை. ஆனால் ஒருவரது வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சனைகள் மட்டுமே இருக்கிறது மற்றும் எந்த ஒரு காரியத்திலும் தோல்வியை மட்டுமே சந்திக்க நேரிடுகிறது என்றால், அந்நபர் குடியிருக்கும் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியிருக்க வாய்ப்புள்ளது.
வாஸ்துப்படி, ஒருவரது வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருந்தால் தான், இம்மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்நிலையில் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்ற பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பீனிக்ஸ் பறவையின் போட்டோ.

வாஸ்து சாஸ்திரத்தில் பீனிக்ஸ் பறவை மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த பறவையானது புகழ் மற்றும் வளர்ச்சியைக் குறிக்கிறது. எனவே இந்த பறவையின் போட்டோவை வீட்டில் வைத்திருப்பதன் மூலம், வீட்டில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
ஆனால் அதற்கு அந்த பறவையின் போட்டோவை வீட்டில் சரியான திசையில் வைக்க வேண்டும். தவறான திசையில் வைத்தால் எதிர்மறையான பலன்களையே பெறக்கூடும். இப்போது பீனிக்ஸ் பறவையின் போட்டோவிற்கான வாஸ்து விதிகளைக் காண்போம்.
* பீனிக்ஸ் பறவையின் போட்டோவை வீட்டில் சரியான இடத்தில் அல்லது திசையில் வைப்பதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும். வீட்டின் சூழல் இனிமையாக இருக்கும் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், வெற்றியையும் காண வைக்கும்.
* பீன்ஸ் பறவை வளர்ச்சி, புகழ், ஆற்றல் மற்றும் வெற்றியின் காரணியாக கருதப்படுகிறது. நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு வேலையை செய்து, அதில் வெற்றியை காண முடியாமல் அவதிப்பட்டால், பீனிக்ஸ் பறவையின் போட்டோவை வீட்டில் வைத்தால் நல்ல பலனைத் தரும். அதுவும் இந்த பறவையின் போட்டோவை வீட்டின் தெற்கு திசையில் வைக்க வேண்டும். இதனால் முன்னேற்றப் பாதையில் சந்திக்கும் தடைகள் நீங்கும்.
* வாஸ்து சாஸ்திரத்தில் எந்த ஒரு பறவையின் போட்டோவையும் கிழக்கு திசையிலும் வைக்கலாம். ஆனால் தொழிலில் முன்னேற்றத்தையும், வெற்றியையும் காண விரும்பினால் தெற்கு திசையில் வையுங்கள்.
பீனிக்ஸ் பறவை
உண்மையில் பீனிக்ஸ் என்ற பறவை கிடையாது. இது ஒரு கற்பனை பறவையே. ஆனால் வாஸ்துப்படி இது வெற்றி, நேர்மறை மற்றும் செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த பறவையை மாயபட்சி என்றும் அழைப்பர்.
வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு குறிப்பிட்ட பறவைகளின் போட்டோக்கள் மட்டுமே மங்களகரமானதாக கருதப்படுகின்றன. அந்த வகை பறவைகளின் போட்டோக்களை வைத்தால் வீட்டினுள் அற்புதங்கள் நிகழும். ஆனால் சில வகை பறவைகளின் போட்டோக்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. அதில் கழுகு, வௌவால், காகம், ஆந்தை போன்றவை குறிப்பிடத்தக்கவை.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications