Latest Updates
-
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம்
கடன் சுமை அதிகமா இருக்கா? வாஸ்துப்படி இத செய்யுங்க சீக்கிரம் குறையும்...
Vastu Tips In Tamil: நாம் என்ன தான் கை நிறைய சம்பாதித்தாலும், நமது தேவைகள் அதிகரிப்பதால், வாழ்வின் ஒரு கட்டத்தில் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம். அப்படி தவிர்க்க முடியாமல் கடன் வாங்கிவிட்டு, அந்த கடனை அடைக்க முடியாமல் போவதோடு, மேன்மேலும் கடன் வாங்குவோம்.
இப்படி ஒருவரது கடன் முடிவில்லாமல் அதிகரிக்க, அந்த வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளும் காரணமாக இருக்கலாம். ஆம், ஒருவரது வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால், அது அந்த வீட்டில் உள்ளவரை அதிக கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளும்.

இப்படி கடன் சுமை குறையாமல் அவதிப்படுபவர்கள், உடனே தாங்கள் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளதா என்பதை அறிந்து, அதை சரிசெய்ய முயல வேண்டும். இல்லாவிட்டால், நிலைமை மோசமாகிவிடும். இப்போது கடன் சுமையைக் குறைக்கும் சில வாஸ்து பரிகாரங்களைக் காண்போம்.
* கடனைத் தவிர்க்க, வீட்டின் வடக்கு மற்றும் தெற்கு சுவர்கள் மிகவும் நேராக இருக்க வேண்டும். ஒருவேளை நேராக இல்லாமல் இருந்தால், அதுவே அதிக கடனை வாங்கத் தூண்டும்.
* வீட்டின் வடக்கு சுவர் எப்போதும் சற்று தாழ்வாக இருக்க வேண்டும். வீட்டில் எந்த ஒரு மூலையும் சுருங்கி இருக்கக்கூடாது.
* குடியிருக்கும் வீட்டின் சுவர் தவறாக இருந்தால், அது அந்த வீட்டில் பண பற்றாக்குறையை ஏற்படுத்தும். ஒருவேளை அதிக கடனை வாங்கி, அதை அடைக்க முடியாமல் கவலைப்படுபவர்கள், வீட்டின் வடகிழக்கு கோணத்தை 90 டிகிரிக்கு குறைவாகக் குறைக்கவும்.
* வீட்டின் தென்மேற்கு மற்றும் தெற்கு திசையில் கிணறு, குழாய் அல்லது நிலத்தடி தொட்டி இருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது அந்த வீட்டின் வறுமையை அதிகரிக்கும்.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீடானது வடக்கு பார்த்து சாய்வு அதிகமாக இருந்தால், அந்த வீட்டில் உள்ளோரிடம் சொத்து அதிகமாக சேரும்.
* அதிக கடன் சுமையால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் வீட்டின் கிழக்கு மற்றும் வடக்கு திசையில் எந்த ஒரு கனமான பொருட்களையும் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது கடன் சுமையை அதிகரிப்பதோடு பண இழப்பு மற்றும் வியாபாரத்தில் நஷ்டத்தை உண்டாக்கும்.
* எப்போதும் வீட்டின் மையப் பகுதியில் நிலத்தடி தொட்டியை அமைக்கக்கூடாது. இல்லாவிட்டால், அதுவும் அந்த வீட்டில் கடனை அதிகரிக்கும்.
* வீட்டின் நடுப்பகுதி சற்று உயரமாக இருக்க வேண்டும். தாழ்வாக வைத்தால், அது வீட்டில் உள்ளோருக்கு இடையேறான உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும்.
* வீட்டின் வடக்கு திசையில் உள்ள சுவர் உயரமாக இருந்தால், அதுவே கடனை அதிகரிக்கும். இந்நிலையில் தென்மேற்கு மூலையில் ஒரு பித்தளை அல்லது செம்பு குடத்தில் நீரை நிரப்பி வையுங்கள்.
* கடன் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமானால், வடக்கு அல்லது கிழக்கு திசையில் ஒரு கண்ணாடியை வைப்பது நன்மை தரும். அதுவும் எடை குறைவான மற்றும் பெரிய அளவிலான கண்ணாடியை பொருத்த வேண்டும்.
* வீட்டில் வாஸ்து மோசமாக இருந்தால், அது பொருளாதார பிரச்சனைகளை உருவாக்கும். வாஸ்துப்படி, கழிவறையானது வீட்டின் தென்மேற்கு பகுதியில் இருந்தால், அந்நபர் கடன் தொல்லையால் மூழ்கடிக்கப்படுவார். அதனால் தான் இந்த திசையில் கழிவறையை அமைக்கக்கூடாது.
* கடனில் இருந்து விரைவில் விடுபட விரும்புபவர்கள், வீட்டில் உள்ள செல்வத்தை வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலும் கடனில் இருந்து விடுபடுவதோடு, நல்ல பண பலன்களும் கிடைக்கும்.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பண பிரச்சனைகளை சந்திப்பவர்கள், அதிலிருந்து விடுபட சிறு மாற்றங்களை செய்தால் போதும். அதாவது, வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் ஒரு சிறிய கதவை அமைத்தால், வீட்டில் நல்ல பண வரவு இருக்கும்.
* வாஸ்துப்படி வாங்கிய கடனை விரைவில் அடைக்க வேண்டுமானால், கடன் பணத்தை செவ்வாய் கிழமைகளில் செலுத்த வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கடனை விரைவில் அடைத்து விடலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications