Latest Updates
-
காரசாரமான ஆந்திரா பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
சனி வக்ர பெயர்ச்சியைத் தொடங்குவதால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட இந்தியாவின் அதிசயக் கோவில் - எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
செட்டிநாடு இறால் தொக்கு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னன்னு சொல்றோம்! -
சனி வக்ர பெயர்ச்சி: ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? -
முள்ளங்கியை இந்த ஸ்டைலில் சாம்பார் செய்யுங்க, பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
ப்ரெட் வாங்க கடைக்கு போறீங்களா? இந்த விஷயங்களை பார்க்கமா வாங்காதீங்க... இல்லனா உங்களுக்குதான் ஆபத்து...!
ப்ரெட் பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி வாங்கப்படும் ஒரு பொருளாகும். அவை எளிதில் கிடைக்கக்கூடியவை மற்றும் பல வழிகளில் பயன்படுத்தக்கூடியவை, மேலும் பல புதிய ரெசிபிக்களை அவற்றை வைத்து முயற்சி செய்யலாம். மேலும், வெவ்வேறு சமையல் குறிப்புகளில் பயன்படுத்த பல்வேறு வகை ப்ரெட்கள் கிடைக்கும். பாரம்பரிய பால் ப்ரெட் மற்றும் பிரவுன் ப்ரெட் முதல் புளிப்பு, பிடா ப்ரெட், ஃபோகாசியா, பிரியோச் மற்றும் பல ப்ரெட் வகைகள் உள்ளன, இதனால் சரியான ப்ரட்டை தேர்வு செய்வது மிகவும் கடினமாகிறது;
துரதிர்ஷ்டவசமாக, அனைத்து ப்ரட்களும் ஒரே மாதிரியாக செய்யப்படுவதில்லை. எனவே சூப்பர் மார்க்கெட்டில், ப்ரெட் வாங்கும் போது பாக்கெட்டுகளில் உள்ள லேபிளைப் பார்ப்பது முக்கியம். இந்த பதிவில் ஒரு பாக்கெட் ப்ரெட்டை வாங்குவதற்கு முன் சரிபார்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சர்க்கரை அளவை சரிபார்க்கவும்
ப்ரெட் தயாரிக்கும் செயல்முறைக்கு ஈஸ்டைச் செயல்படுத்த சிறிது சர்க்கரை தேவை. ஆனால் அது மிகவும் குறைவாக மட்டுமே இருக்க வேண்டும். எனவே நீங்கள் ப்ரெட் வாங்கும் போதெல்லாம், லேபிளில் சேர்க்கப்பட்ட சர்க்கரை உள்ளதா எனச் சரிபார்க்கவும், ஏனெனில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை பெரும்பாலும் அதிகப்படியான சர்க்கரை, கரும்புச்சாறு, தேன் மற்றும் உணவின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க இதுபோன்ற இனிப்புகளைப் பயன்படுத்துகின்றன.
உப்பு அளவை சரிபார்க்கவும்
சர்க்கரையைப் போலவே, ப்ரெட் தயாரிப்பதற்கு உப்பும் தேவை. ஆனால் பெரும்பாலும் பிராண்டுகள் சுவையை அதிகரிக்க தேவையானதை விட அதிக உப்பை சேர்க்கிறது, இது ப்ரெட்டை ஆபத்தானதாக மாற்றுகிறது. ஆய்வுகளின் படி, ஒரு துண்டு ப்ரெட்டில் 100-200mg சோடியத்திற்கு மேல் இருக்கக்கூடாது. எனவே ப்ரெட் வாங்கும் முன் மொத்த உப்பு அளவை சரிபார்க்கவும்.
சேர்க்கப்பட்டுள்ள பொருட்களைச் சோதிக்கவும்
ப்ரவுன் ப்ரெட், கோதுமை ப்ரெட் மற்றும் பல தானிய ப்ரெட்களை ஆரோக்கியமான ப்ரெட்களாக கருதுகிறோம். உண்மையில் அவை ஆரோக்கியமானவை அல்ல. ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி, தொழிற்சாலைகள் பெரும்பாலும் மற்ற வகை மாவுகளுடன் சேர்த்து, அவற்றை சுவையாகவும், செலவு குறைந்ததாகவும் தயாரிக்கின்றன. எனவே "முழு கோதுமை ப்ரெட்" அல்லது பிற ப்ரெட்களை வாங்கும் முன் பாக்கெட்டின் பின்புறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை எப்போதும் சரிபார்க்கவும்.
தேதியை சரிபார்க்கவும்
ப்ரெட் வாங்கும் போது நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் இதுதான். ப்ரெட்டை ப்ரெஷாகவும், மென்மையாகவும் சாப்பிட, ப்ரெட் வாங்கும் முன் அதன் தேதியைச் சரிபார்க்கவும். உணவு வீணாக்கப்படுவதைத் தவிர்க்க ' Use By' மற்றும் 'Best Before' போன்ற சொற்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளவும்.
ஃபைபர் உள்ளடக்கத்தை சரிபார்க்கவும்
ப்ரெட்டின் மிகவும் பிரபலமான கூறுகளில் ஃபைபர் ஒன்றாகும். ஆனால் ப்ரெட் தயாரிக்கும் போது, ப்ரெட் பெரும்பாலும் நார்ச்சத்தை கணிசமாக இழக்கிறது, அதனால் இதை முற்றிலும் ஆரோக்கியமானது என்று கூறிவிட முடியாது. எனவே ப்ரெட்டை வாங்குவதற்கு முன், லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள நார்ச்சத்தின் அளவை எப்போதும் சரிபார்க்கவும்.



Click it and Unblock the Notifications
