Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
நீங்க சாப்பிடும் தர்பூசணி பாதுகாப்பானதா? தர்பூசணியின் இந்த இடத்தை பார்த்தே ஈஸியா தெரிஞ்சிக்கலாம்...!
கோடைகாலம் வந்தாலே சாலையோரங்களில் கண்ணைப் பறிக்கும் இளஞ்சிவப்பு நிறத்தில் விற்கப்படும் தர்பூசணி பழங்களைப் பார்க்கலாம். கொளுத்தும் கோடை காலத்தை சமாளிக்க இனிப்பு மற்றும் நீர்ச்சத்து நிறைந்த இந்த பழத்தை சாப்பிடுவதுதான் சிறந்த வழி. இந்த புத்துணர்ச்சியூட்டும் பழத்திற்கான தேவை அதிகரித்து வருவதால், கலப்படம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. சமீபத்தில் தர்பூசணி பழத்தில் செய்யப்படும் கலப்படம் குறித்த செய்திகள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தர்பூசணி பழங்களை அதிக சிவப்பாகவும், இனிப்பு சுவையுடனும் இருக்க சில வியாபாரிகள் அவற்றில் பாதுகாப்பற்ற கெமிக்கல்களை பயன்படுத்துவதாக செய்திகள் வெளியாகியது. நாம் சாப்பிடும் தர்பூசணி பாதுகாப்பானதா என்பதைச் சரிபார்க்க ஆய்வக சோதனைகள் அல்லது கேஜெட்கள் தேவையில்லை. சில எளிமையான வழிகள் மூலம் வீட்டிலேயே கண்டறிந்து விடலாம். இந்த எளிய சோதனைகள் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சிறப்பாக உதவும். இந்த பதிவில் தர்பூசணி பழத்தில் உள்ள கலப்படத்தை வீட்டிலேயே எப்படி சோதிக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தர்பூசணியின் நிறத்தை சரிபார்க்கவும்
தர்பூசணி பழத்தின் சதைப்பகுதி இயற்கையாகவே, அடர் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக இருக்க வேண்டும், இயற்கைக்கு மாறான முறையில் அதிக பிரகாசமாக இருக்கக்கூடாது. அதன் நிறம் மிகவும் தீவிரமாகவோ அல்லது கிட்டத்தட்ட ஒளிரும் தன்மையாகவோ தோன்றினால், அது ஆபத்தானதாக இருக்கலாம். மலாக்கிட் க்ரீன் அல்லது எரித்ரோசின் போன்ற செயற்கை சாயங்கள் தோற்றத்தை மேம்படுத்தப் பயன்படுத்தப்படலாம். இயற்கையான தர்பூசணி அதன் நிறத்திலும் சில சீரற்ற தன்மைகளைக் கொண்டுள்ளது, நீங்கள் வாங்கும் தர்பூசணி மிகவும் பர்பெக்ட்டானதாக இருந்தால், அதை தவிர்ப்பது நல்லது.
நீர் சோதனை
தர்பூசணியின் சதைப்பகுதியிலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலக்கவும். தண்ணீர் உடனடியாக நிறம் மாறினால் அல்லது சிவப்பு நிறமாக மாறினால், அது சாயமேற்றப்பட்ட பழமாக இருக்கலாம். இயற்கையான தர்பூசணி தண்ணீரில் நிறத்தை கசியவிடாது. இந்த விரைவான சோதனை ரசாயனம் கலந்த பழங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்பான பழத்தை உட்கொள்வதையும் உறுதி செய்கிறது.
பஞ்சுத் துணியை உபயோகிக்கவும்
ஒரு பஞ்சு துணியை எடுத்துக் கொண்டு பந்து போல உருட்டிக் கொள்ளவும். அதை தர்பூசணி பழத்தின் பஞ்சு பகுதியில் வைத்து தேய்க்கவும், அதில் ஏதேனும் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு கறை படிந்தால், அதில் செயற்கை நிறம் சேர்க்கப்பட்டுள்ளது உறுதி. . இயற்கையான தர்பூசணி சாறு தெளிவானது, நிறம் மாறாது. இந்த எளிய வழி எதிர்காலத்தில் உங்கள் வயிறு அல்லது சருமத்தைப் பாதிக்கக்கூடிய ஒன்றை அறியாமல் சாப்பிடுவதிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.
விதைகளைக் கவனிக்கவும்
இயற்கையான தர்பூசணி விதைகள் அவற்றின் வகையைப் பொறுத்து கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். நீங்கள் வாங்கும் தர்பூசணி பழத்தில் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு விதைகள் இருந்தால் அவை பாதுகாப்பானது இல்லை. தர்பூசணியின் சதைப்பகுதி இரசாயனத்தால் சேதப்படுத்தப்படும்போது சில நேரங்களில் செயற்கை வண்ணம் விதைகளுக்குள் ஊடுருவக்கூடும். இது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றினாலும், உண்மையில் இது கலப்படத்தைக் கண்டறியும் எளிதான அறிகுறிகளில் ஒன்றாகும்.
சுவையும், அமைப்பும்
ப்ரெஷான மற்றும் பாதுகாப்பான தர்பூசணி ஜூசியாகவும், இனிப்பாகவும், சற்று தானிய அமைப்புடனும் இருக்க வேண்டும். ஆனால் அதன் சுவை கசப்பாகவோ அல்லது சற்று விரும்பத்தகாததாகவோ உணர்ந்தால், அது பாதுகாப்பானது அல்ல. அதேபோல வழக்கத்திற்கு மாறாக கடினமான அல்லது மிகவும் மென்மையான பகுதியையும் கவனிக்க வேண்டும். மிகவும் மென்மையாகவோ அல்லது மிகவும் உறுதியாகவோ இருப்பது தர்பூசணி ப்ரெஷாக காட்சியளிக்க செயற்கையாக சேர்க்கப்பட்ட ரசாயனத்தின் அறிகுறியாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications
