ஹோட்டல் மாதிரி மொறுமொறுனு சுவையான தோசை வீட்லயே சாப்பிடணுமா? தோசை சுடும்போது இந்த தவறுகளை பண்ணாதீங்க...!

சாப்பிடும் சாப்பாட்டை ரசித்து ருசித்து உண்ண பலர் விரும்புவார்கள். அவர்களுக்கு அதற்கு ஏற்றார் போல அருமையான உணவுகள் வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னாள் இட்லி, தோசை போன்றவை பண்டிகை கால உணவுகளாக இருந்தன. நவீன கால மாற்றத்தால் நமக்கு கிடைத்த கிரைண்டரின் உதவியால், வேலைக்கு செல்லும் பெண்கள் வாரம் ஒரு முறை இவற்றை சமைத்தார்கள்.

தற்போதைய நவீன காலத்தின் விலை மலிவாக கிடைக்கும் பிரிட்ஜ்-ன் உதவியால், எல்லா நாட்களிலும் தோசை கிடைக்கும் நிலை வந்துவிட்டது. தினம் வீட்டில் செய்தாலும், பெரும்பாலும் கடைகளில் ஆர்டர் செய்யும் உணவு தோசை தான். இதற்கு காரணம் தோசை தயாரிக்கும் முறை தான். இங்கு நாம் வீட்டில் தோசை செய்யும் போது நாம் செய்யும் தவறுகளை பார்க்கலாம்.

Mistakes Should Avoid While Prepare Dosa At Home in Tamil

தோசை கல்லில் சரியாக எண்ணெய் தடவாதது

தோசை கல்லை கிரீஸ் செய்ய எண்ணெய், வெண்ணெய் அல்லது நெய்யை உபயோகிக்கவும். போதுமான அளவு எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து தோசை கல்லின் முழு மேற்பரப்பிலும் நன்றாக தடவும். எண்ணெயை தடவுவதற்கு முன் தோசை கல்லை சூடாக்க வேண்டும். தோசை ஊற்றுவதற்கு முன் கடைகளில் தோசை கல்லில் கொஞ்சம் தண்ணீர் தெளிப்பதை நாம் பார்த்திருப்போம்.

தண்ணீர் கொதித்து விரைவாக ஆவியாகிவிட்டால், தோசை கல் தோசை ஊற்ற தயாராக இருக்கிறது என்று அர்த்தம். வீட்டிலும் இதை கவனமாக முயற்சி செய்ய வேண்டும். மற்றொரு தந்திரம் என்னவென்றால், அரை வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை நறுக்கி தோசை கல்லில் தேய்த்தால் நன்றாக தோசை வார்க்கலாம். மாவை பரப்பியவுடன் தோசையின் ஓரங்களில் அதிக எண்ணெய்/வெண்ணெய் சேர்க்க மறக்காதீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு தோசைக்கும் இதைத் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்.

ஈரமான தவாவைப் பயன்படுத்துதல்

தோசைக் கல்லை சூடாக்கி, கிரீஸ் செய்யத் தொடங்கும் முன் நன்றாக உலர்ந்திருப்பதைக் உறுதி செய்து கொள்ளுங்கள். தோசை கல்லை உலர்த்தி துடைக்காமல், பழைய உணவுத் துகள்களை அகற்றி விட்டு மீண்டும் பயன்படுத்த வேண்டும். அப்படி துடைக்காமல் தோசை ஊற்றினால் ஒட்டிக்கொண்டு சரியாக வராது. தோசை தவாவுடன் ஒட்டிக்கொண்டால், மாவைப் பயன்படுத்தி அதை சரிசெய்ய முயற்சி செய்யவும். இந்த நுட்பம் மிகவும் எளிமையானது.

சிறிது கோதுமை அல்லது மைதாவை எடுத்து, தோசை கல்லின் முழு மேற்பரப்பிலும் மெதுவாக தேய்க்கவும். கல்லின் முழு பரப்பிலும் முழுவதுமாக மாவை பூசுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். தோசைக் கல்லை திருப்பி அதிகப்படியான மாவை கீழே கொட்டி விடவும். இப்போது ஒட்டியிருக்கும் மாவைத் துடைக்க உலர்ந்த துணியைப் பயன்படுத்தவும். இது கல்லில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி, தோசையை ஒட்டாமல் காப்பாற்றும்.

குளிர்ந்த மாவைப் பயன்படுத்துதல்

வீட்டில் தோசை மாவை தயாரித்தாலோ அல்லது வெளியில் இருந்து வாங்கினாலோ, பின்னர் பயன்படுத்துவதற்கு என்று மீதம் இருக்கும் மாவை குளிர்சாதன பெட்டியில் வைத்து சேமிப்பீர்கள். குறிப்பாக தட்பவெப்பம் அதிகமாக இருக்கும் போது மாவு புளித்து போகாமல் இருக்க மாவை பிரிட்ஜ்-ல் வைப்பதை தவிர வேறு வழியில்லை. இருப்பினும், குளிர்ந்த மாவை குளிர்சாதன பெட்டியில் இருந்து அகற்றிய உடனேயே பயன்படுத்த வேண்டாம். அப்படி செய்தால், தோசை கல்லில் மாவை ஊற்றும் போது பிரச்சனை ஏற்படும்.

குளிர்ச்சியாக இருக்கும் மாவு தோசை கல்லில் ஒட்டிக் கொள்வது, தோசை வார்க்க சரியாக வராமல் பிரண்டு கட்டியான தோசையை உண்டாக்குவது என பல பிரச்சனைகளை கொடுக்கும். எனவே, தோசைகளைச் செய்யத் தொடங்குவதற்கு முன், மாவை 15-20 நிமிடங்கள் அல்லது அறை வெப்பநிலைக்கு வரும் வரை வெளியில் வைக்கவும்.

தாமதமாக மாவை சேர்ப்பது

தோசை சூப்பராக வர தோசை கல்லின் வெப்பநிலை சரியாக இருக்க வேண்டும். மேலே கூறியபடி, மிகவும் குளிராக இருக்கும் மாவைப் பயன்படுத்துவது நல்ல யோசனையல்ல. இதேபோல், தோசை கல்லின் வெப்பநிலை தோசை வார்க்க சரியான அளவில் உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.

மாவைச் சேர்ப்பதற்கு முன் தோசை கல் மிகவும் சூடாகிவிட்டால், அது சரியான வடிவில் வராது. மாறாக, சிறிதளவு மாவைச் சேர்த்த உடனேயே அது வேக தொடங்கும். இது தடிமனான, சீரற்ற தோசையை உண்டாக்கும். எனவே தோசை கல் சரியான வெப்பநிலையில் இருப்பதை கவனிக்க வேண்டும்.

மாவில் தண்ணீர் அதிகம் சேர்ப்பது

நீங்கள் மாவு தயாரிக்கும் போது அல்லது மீதமுள்ள மாவைப் பயன்படுத்தும் போது இந்த தவறு ஏற்படலாம். நீர் தோசை போன்ற சில வகையான தோசைகளுக்கு மாவு வழக்கத்தை விட அடர்த்தி குறைவாக இருக்க வேண்டும். இருப்பினும், வழக்கமான தோசைகளை சிறிது அடர்த்தி அதிகம் இருக்கும் மாவைப் பயன்படுத்தி செய்ய வேண்டும். இதில் நாம் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சனை, மிகவும் கெட்டியாகி இருக்கும் பிரிட்ஜ்-ல் வைக்கப்பட்ட மாவு.

தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கவும். இந்த மாவில் தண்ணீர் சற்று உறை நிலையில் இருக்கும், சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலப்பது மாவில் தண்ணீரின் அளவு அதிகரிப்பதை தடுக்க உதவும். தோசை மாவில் தண்ணீர் அதிகமாக இருந்தால், பிறகு தோசை சரியாக வராது.

சிலர் இது போன்ற குறிப்புகளை பயன்படுத்தி ஹோட்டல் பாணியில் அற்புதமாக செய்வார்கள். சிலருக்கு இந்த நுணுக்கங்கள் தெரியதால் சரி வர தோசை வராது. உங்களுக்கு இதில் பிரச்சனை இருந்திருந்தால், இனி நீங்களும் தோசை நிபுணர்தான்.

Desktop Bottom Promotion