Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
வறுமை உங்கள வாட்டி எடுக்குதா? அப்ப அதுக்கு உங்க வீட்டுல இருக்குற இந்த பொருட்கள் தான் காரணம்...
வீடு வாஸ்துப்படி கட்டியிருந்தும் வீட்டில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால், உங்கள் வீட்டில் இருக்கக்கூடாத சில பொருட்கள் உள்ளது என்று அர்த்தம். உடனே அந்த பொருட்கள் என்னவென்பதை அறிந்து, அவற்றை உடனே தூக்கி எறிந்துவிட வேண்டும்.
ஒரு வீட்டில் வாழ்வோர் மகிழ்ச்சியோடும், செழிப்போடும் இருக்க வேண்டுமானால், அந்த வீட்டில் வாஸ்து சரியாக இருக்க வேண்டும். அதோடு வீட்டில் உள்ள பொருட்கள் வாஸ்துப்படி வைத்திருக்க வேண்டும். அப்படியானால் தான் குடும்பம் முன்னேறும். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் நிலவும். ஆனால் எப்போது ஒருவரது வீட்டில் பிரச்சனைகளும், குழப்பங்களும் நிறைந்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் இருக்கிறதோ, அந்த வீட்டில் வாஸ்து தோஷம் உள்ளது என்று அர்த்தம்.

ஒருவேளை வீடு வாஸ்துப்படி கட்டியிருந்தும் வீட்டில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால், உங்கள் வீட்டில் இருக்கக்கூடாத சில பொருட்கள் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே அந்த பொருட்கள் என்னவென்பதை அறிந்து, அவற்றை உடனே தூக்கி எறிந்துவிட வேண்டும். இல்லையெனில், வீட்டில் பிரச்சனைகளுடன் வறுமையும் வாட்டி எடுத்துவிடும். இப்போது வாஸ்துப்படி வீட்டில் இருக்கக்கூடாத சில பொருட்களைக் காண்போம்.

நடராஜர் சிலை
வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் நடராஜர் சிலையை வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது வீட்டில் குழப்பத்தை உண்டாக்கும். அதோடு வீட்டில் சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே தான் வீட்டில் நடராஜர் சிலையை வைத்திருக்கக்கூடாது. உங்கள் வீட்டில் நடராஜர் சிலை இருந்தால், உடனடியாக அதை வீட்டில் இருந்து அகற்றுங்கள்.

போர் படங்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் போர் புரிவது போன்ற புடங்களை வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் இம்மாதிரியான படங்கள் குடும்ப உறுப்பினர்களை மோசமாக பாதிக்குமாம். எனவே போர் படங்களை வீட்டில் வைத்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

முட்கள் நிறைந்த செடி
இன்று பலருக்கும் வீட்டில் செடிகளை வளர்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் அப்படி வீட்டில் வளர்க்கும் போது வாஸ்துப்படி எந்த மாதிரியான செடிகளை வளர்க்கலாம், எதை வளர்க்கக்கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வாஸ்துப்படி, ரோஜா செடிகளைத் தவிர, வீட்டில் முட்கள் நிறைந்த செடிகளை வளர்க்கக்கூடாது. இம்மாதிரியான செடிகள் வீட்டில் எதிர்மறை உருவாக்குகிறது.

எதிர்மறையான படங்கள்
வாஸ்து சாஸ்திரத்தில், கப்பல் மூழ்குவது, வேட்டையாடுவது, கத்திச் சண்டை, பிடிபட்ட யானைகள் அல்லது அழுவது போன்ற படங்களை வைத்திருப்பது தவறு என்று கருதப்படுகிறது. ஏனென்றால் இம்மாதிரியான படங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை தங்க வைத்து, குடும்பத்தின் முன்னேற்றத்தில் தடைகளை உருவாக்கும். ஆகவே வீட்டில் எப்போதும் நேர்மறையான படங்களை வைத்திருக்க முயலுங்கள்.

சூரிய அஸ்தமனம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் சூரியன் உதிக்கும் படியான படத்தை வைத்திருக்கலாம். ஆனால் சூரியன் மறையும் படியான போட்டோவை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. இது குடும்ப முன்னேற்றத்தை தடுக்கும்.



Click it and Unblock the Notifications
