For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாசலில் சாணம் தெளிங்க... சாம்பிராணி புகை போடுங்க - கொரோனா வைரஸ் எட்டிக்கூட பார்க்காது..

|

சாம்பிராணி புகை அல்லது தூபத்தை வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ வீடுகளுக்கு உள்ளேயும், வீட்டைச் சுற்றியும் காட்டுவதன் மூலம் எந்த வித கெட்ட சக்திகளும் வீட்டிற்குள் அண்டாது அதோடு கொரோனோ வைரஸ் எட்டிக்கூட பார்க்காது. நம்முடைய முன்னோர்கள் எதையும் காரணமில்லாமல் செய்திருக்க மாட்டார்கள். காலையில் வீட்டு வாசலில் சாணி தெளிப்பதும் மாலை நேரங்களில் விளக்கேற்றி வைத்து சாம்பிராணி தூபம் போடுவதும் ஒரு காரணத்தோடுதான் செய்தார்கள்.

MOST READ: 40 வயதிற்கு மேலானவர்களை அதிகம் குறி வைக்கும் கொரோனா வைரஸ்.. ஏன்? அதைத் தடுப்பது எப்படி?

கிருமிகளும், தீய சக்திகளும் வீட்டிற்குள் வர விடாமல் செய்யவே இந்த நல்ல செயல்களை வழி வழியாக செய்து வந்தனர். கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டிற்குள் சாம்பிராணி தூபம் போட வேண்டும். சாம்பிராணி தூபம் என்பது வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள மாசுகளையும், கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமிகளையும் வீட்டுக்குள் அண்ட விடாது என்பதால் தான். அதோடு அசுத்தமான காற்றையும் சுத்தப்படுத்திவிடும் என்பதும் ஒரு காரணமாகும்.

MOST READ: கொரோனா வைரஸ் உடலின் எந்த உறுப்புக்களை பாதித்து உயிரைப் பறிக்கிறது தெரியுமா?

சாம்பிராணி தூபம் காட்டுவதை முழுக்க முழுக்க நோய்த் தடுப்பு மருந்தாக மட்டுமே நாம் பார்க்க வேண்டும். அதை எந்த ஒரு மதத்தோடும் சம்பந்தப்படுத்தி பார்க்கக்கூடாது. சாம்பிராணி தூபம் காட்டும்போது, அதை நாம் நேரடியாக மூக்கால் சுவாசிக்க கூடாது. அப்படி சுவாசித்தால் மூச்சுத் திணறலும் சுவாசக்கோளாறும் ஏற்படும். எனவே மிகுந்த எச்சரிக்கையோடு சாம்பிராணி தூபம் காட்டவேண்டியது அவசியமாகும்.

MOST READ: வரலாற்றில் 200 மில்லியன் மக்களை கொன்று குவித்த உலகின் மிகவும் கொடூரமான தொற்றுநோய் எது தெரியுமா?

இன்றைய தேதியில் உலகம் நாடுகள் பெரும்பாலானவற்றில் பரவி ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை பலி வாங்கியதோடு, சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை தாக்கி அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது கொரோனா என்னும் கொடூர வைரஸ். தொட்டால் தொடரும் அரக்கனாக மாறி இன்னும் எத்தனையோ பேர்களை காவு வாங்க துடித்துக்கொண்டு உள்ளது. இருந்தாலும் கொரோனா வைரஸ் கிருமியை முற்றிலும் அழிக்கக்கூடிய வகையில் இதுவரையில் எந்தவிதமான மருந்தும் கண்டுபிடிக்கவில்லை.

MOST READ: கொரோனா வைரஸிற்கான முதல் தடுப்பூசி பரிசோதனையை தொடங்கியது அமெரிக்கா..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம்

கொரோனா வைரஸ் மட்டுமில்லாது இன்னும் எத்தனை உயிர்க்கொல்லி வைரஸ் வந்தாலும் சரி, இந்தியாவில் அதற்குரிய இயற்கை மருத்துவம் எனப்படும் நாட்டு மருத்துவமும், பாட்டி வைத்தியமும் தான் நமக்கு கைகொடுக்கும் என்பதோடு காப்பாற்றும் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. நாம் அதை முன்னெச்சரிக்கையாக நினைத்து முறையோடு பயன்படுத்தி வந்தால் எந்த வைரஸும் நம்மைக் கண்டு தெறித்து ஓடிவிடும். ஆனால், பாட்டி வைத்தியாமாவது மண்ணாவது என்று கிண்டலடிப்பதோடு நிறுத்திக்கொள்கின்றனர். அதை செய்துதான் பார்ப்போமே என்று முயற்சி செய்து பார்ப்பது கூட கிடையாது. ஐ வில் டேக் இங்கிலீஷ் மெடிசன் ஒன்லி என்று பந்தா காட்டுவார்கள்.

கிராம மருத்துவ முறைகள்

கிராம மருத்துவ முறைகள்

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த நாட்டு மருத்துவ முறைகளும், பாட்டி வைத்திய முறைகளும், வழிவழியாக பின்பற்றி வரும் மருத்துவ முறைகள் தான். அந்த மருத்துவ முறைகள் அனைத்திலும் அறிவியல் ஒளிந்திருக்கும். வீட்டின் முன்பாக காலையில் எழுந்து சாணம் தெளித்து கோலம் போட்டார்கள். வீட்டிற்குள் விளக்கேற்றி சாம்பிராணி தூபம் போட்டார்கள். ஆனால், அதை மத நம்பிக்கையோடு பயன்படுத்தி வந்தார்கள். அப்போது தான் பயபக்தியோடு அந்த மருந்துகளை பயன்படுத்துவார்கள் என்பது தான் உண்மையான காரணம். இன்றைக்கும் எத்தனையோ கிராமங்களில் அந்த மருந்துகளையும் பழக்க வழக்கத்தையும் தான் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். அதனால் தான் எந்த கொரோனா வைரஸும் கிராமத்து மக்களை தாக்காமல் பின்வாங்கி ஓட்டம் பிடிக்கின்றது.

சாம்பிராணி தூபம்

சாம்பிராணி தூபம்

அப்படி கிராமத்து மக்கள் இன்றைக்கும் தொடர்ந்து விடாமல் பின்பற்றி வரும் ஒரு மருத்துவ முறை தான் சாம்பிராணி போடும் பழக்கம். சாம்பிராணி புகை அல்லது தூபத்தை வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ வீடுகளுக்கு உள்ளேயும், வீட்டைச் சுற்றியும் காட்டி வருவார்கள். இதன் காரணம், சாம்பிராணி தூபம் என்பது வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள மாசுகளையும், கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமிகளையும் வீட்டுக்குள் அண்ட விடாது என்பதால் தான். அதோடு அசுத்தமான காற்றையும் சுத்தப்படுத்திவிடும் என்பதும் ஒரு காரணமாகும்.

சாம்பிராணியின் மகிமை

சாம்பிராணியின் மகிமை

குறிப்பாக குழந்தை பெற்ற தாய்மார்கள் குளித்து முடித்த உடனேயேயும் குழந்தையை குளிப்பாட்டி முடித்த உடனேயும், தாய்க்கும் குழந்தைக்கும் சாம்பிராணி தூபம் காட்டுவதுண்டு. இதற்கு காரணம் எந்தவித நோயும் குழந்தையையும் தாயையும் அண்டாமல் பாதுகாக்கும் என்பதால் தான். அதேபோல், கடைவீதிகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ஒரு முஸ்லீம் பெரியவர் ஒருவர் ஒவ்வொரு கடையாக ஏறியிறங்கி சாம்பிராணி தூபம் காட்டுவார். குறிப்பாக பணம் புழங்கும் கல்லா பெட்டிக்கு அதிக அளவில் சாம்பிராணி தூபம் காட்டுவார்.

நோய்க்கிருமிகளின் உறைவிடம்

நோய்க்கிருமிகளின் உறைவிடம்

கல்லா பெட்டியில் சாம்பிராணி போடுவதற்கு காரணம், பணம் என்பது எத்தனையோ கைகள் மாறி மாறி வந்து நம்மிடம் வந்து சேர்ந்திருக்கும். அந்த பணத்தில் கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ நோய்க்கிருமிகளும் மறைந்திருக்கும். சாம்பிராணி தூபம் காட்டப்படுவதால் நோய்க்கிருமிகள் இறந்துவிடும் என்பதும் முக்கிய காரணமாகும். சாம்பிராணி தூபம் காட்டுவதை மதத்தோடு சம்பந்தப்படுத்தக்கூடாது. அதை நோய்த் தடுப்பு மருந்தாக மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். சாம்பிராணி தூபம் காட்டும்போது, அதை நாம் நேரடியாக மூக்கால் சுவாசிக்க கூடாது. அப்படி சுவாசித்தால் மூச்சுத் திணறலும் சுவாசக்கோளாறும் ஏற்படும். எனவே மிகுந்த எச்சரிக்கையோடு சாம்பிராணி தூபம் காட்டவேண்டியது அவசியமாகும்.

விஷப்பூச்சிகள் அண்டாது

விஷப்பூச்சிகள் அண்டாது

சாம்பிராணி என்பது பிரங்கின்சென்ஸ் (Frankincense) எனப்படும் ஒரு மரத்திலிருந்து வடியும் பிசின் போன்ற ஒரு திரவமாகும். இது நன்றாக இறுகி கட்டியாக மாறி எளிதில் எரியும் தன்மையுள்ள சாம்பிராணி அல்லது குங்கிலியமாக மாறிவிடும். வீடுகளில் அடிக்கடி சாம்பிராணி தூபம் காட்டினால் பூச்சிகள், பாம்புகள் என நச்சுக்கிருமிகள் அண்டாது. சாம்பிராணி உடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைத்து உடலில் ஏற்பட்டுள்ள கட்டிகள், வீக்கங்கள் நீங்கிவிடும்.

சுத்தமான சாம்பிராணி

சுத்தமான சாம்பிராணி

சாம்பிராணி என்பது தற்போது சூப்பர் மார்கெட்களில் விற்கும் கம்ப்யூட்டர் சாம்பிராணி கிடையாது. தூய்மையான சாம்பிராணி என்பது நாட்டு மருந்துகடைகளிலும், மளிகைக் கடைகளிலும் தான் கிடைக்கும். அதைத்தான் வாங்கி பயன்படுத்த வேண்டும். அப்போது தான் முழுமையான பயன் கிடைக்கும்.

தெய்வ சக்தி நிலைத்திருக்கும்

தெய்வ சக்தி நிலைத்திருக்கும்

சாம்பிராணி உடன் காய்ந்த வேப்பிலை, நொச்சி இலையை சேர்த்து புகையிட்டால் கொசுக்கள் ஓடிப்போகும். சாம்பிராணி உடன் ஊமத்தை இலையை வெண்ணெயில் அரைத்து காயத்தில் தடவினால், எரிச்சல் நீங்கி காயம் விரைவில் குணமாகும். சாம்பிராணி உடன் அகில் என்னும் நறுமணப் பவுடரை சேர்த்து தூபமிட்டால் குழந்தை பேறு உண்டாகும். சாம்பிராணி உடன் மருதாணி விதைகளை போட்டு தூபமிட்டால் சூனியக் கோளாறுகள் நீங்கும். சாம்பிராணி உடன் தூதுவளை இலைகளை போட்டு தூபமிட்டால் வீட்டில் தெய்வசக்தி நிலைத்திருக்கும்.

எதிரிகள் பயம் விலகும்

எதிரிகள் பயம் விலகும்

சாம்பிராணி உடன் சந்தனத்தை போட்டு தூபமிட்டால் வீட்டில் லட்சுமி கடாட்ஷம் நிலைத்திருக்கும். அதே போல் சாம்பிராணி உடன் அருகம்புல் பொடியை சேர்த்து தூபமிட்டால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். மேலும் வேட்டி வேரை சேர்த்து சாம்பிராண தூபமிட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். சாம்பிராணி உடன் வேப்பிலையை சேர்த்து தூபமிட்டால் சகலவித நோய்களில் இருந்தும் உடனடி நிவாரணம் கிட்டும். சாம்பிராணி உடன் வெண்கடுகை சேர்த்து தூபமிட்டால் எதிரிகள் பயம் விலகும்.

சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்

சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்

சாம்பிராணி உடன் ஜவ்வாது சேர்த்து தூபமிட்டால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். சாம்பிராணி உடன் வேப்பம்பட்டையை சேர்த்து தூபமிட்டால் பில்லி சூன்யம் போன்றவை விலகி ஓடிவிடும். சாம்பிராணி உடன் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் ஓட்டம் பிடிப்பார்கள். சாம்பிராணி உடன் காய்ந்த துளசி இலையை போட்டு தூபமிட்டால் காரியத்தடையும் திருமணத் தடையும் நீங்கும். கரிசலாங்கண்ணி பொடியை சாம்பிராணி உடன் சேர்த்து தூபமிட்டால் மகான்களின் ஆசி கிடைக்கும். நன்னாரி வேரை சாம்பிராணி உடன் சேர்த்து தூபமிட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

மஞ்சளும் வேப்பிலையும்

மஞ்சளும் வேப்பிலையும்

இப்பொழுதும் மாலை வேலைகளில் மஞ்சளை கரைத்து தெளித்து விடுங்கள். வீட்டு வாசலில் வேப்பிலை கட்டி விடுங்கள். திருவிழாக்களில் பெரும் கூட்டம் கூடும். கிருமி தாக்குதல் ஏற்படாமல் இருக்கத்தான் மஞ்சள் நீர் விளையாடும் பழக்கத்தை ஏற்படுத்தி வைத்தனர். நம்முடைய முன்னோர்கள் எதையும் சும்மா சொல்லிவிட்டு போகவில்லை என்பதை இன்றைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Best Ways To Kill Coronavirus In Your Home

Your kitchen cabinet may already be stocked with cleaning agents that can kill coronavirus. We need to look at sambrani incense as a complete immunization.
Story first published: Wednesday, March 18, 2020, 16:24 [IST]