Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
இஸ்திரிப் பெட்டி இல்லாமல் துணியை இஸ்திரி செய்ய சில வழிகள்!!!
உங்களிடம் இஸ்திரிப் பெட்டி இல்லையா? ஒரு சட்டையை அயர்ன் செய்ய வேண்மானாலும் கடைகளில் கொடுத்து தான் செய்ய வேண்டிய நிலையா? அதிலும் நீங்கள் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறீர்களா? அப்படியானால், அயர்ன் பாக்ஸ் இல்லாமலேயே சூப்பராக துணியை இஸ்திரி செய்யலாம். அதிலும் மிகவும் ஈஸியான வழியில் இஸ்திரி போட முடியும். அது என்னயென்று கேட்கிறீர்களா?
இங்கு நன்கு கசங்கியுள்ள துணியை இஸ்திரி பெட்டி இல்லாமலேயே எப்படி அயர்ன் செய்வது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

ஹேர் ஸ்ட்ரைட்னர்
உங்களிடம் ஹேர் ஸ்ட்ரைட்னர் இருந்தால், அதனைக் கொண்டும் துணியை அயர்ன் செய்யலாம். ஆனால் அப்படி அயர்ன் செய்யும் போது, அதிகப்படியான வெப்பம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், துணியானது கருகிவிடும்.

படுக்கை
இது காலம் காலமாக பலர் பின்பற்றும் ஒரு முறை. அது என்னவெனில், இரவில் படுக்கும் முன்பு, ஒரு நியூஸ் பேப்பரின் நடுவே அயர்ன் செய்ய வேண்டிய துணியை வைத்து படுக்கும் மெத்தையின் அடியில் இட்டு, காலையில் அதனைப் பயன்படுத்தலாம்.

சொம்பு அல்லது மெட்டல் பாத்திரங்கள்
இவற்றைக் கொண்டும் எளிமையாக துணியை இஸ்திரி செய்யலாம். அதற்கு சுருக்கம் உள்ள துணியில் லேசாக நீரை தெளித்து, பின் சொம்பு அல்லது மெட்டல் பாத்திரத்தில் சுடுநீரை நிரப்பி, சுருக்கம் உள்ள இடத்தில் வைத்து அழுத்தினால் சுருக்கங்கள் மறையும்.

ஈரமான டவல்
சுருக்கம் உள்ள துணியை தரையில் விரித்து, அதன் மேல் நீரில் நனைத்து பிழிந்த டவலை வைத்து, கைகளால் 5-10 நிமிடம் தேய்த்து, பின் சிறிது நேரம் சூரியவெப்பத்தில் உலர வைத்து எடுத்தால், சுருக்கங்கள் போய்விடும்.

சூரியவெப்பம்
துணியில் சுருக்கங்கள் விழாமல் இருக்க வேண்டுமானால், துணியை துவைக்கும் போது நீரில் அலசியப் பின், பிழியாமல் அப்படியே சூரிய வெப்பத்தில் உலரை வைத்து எடுத்தால், சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கலாம். .

ஹேர் ட்ரையர்
துணியில் உள்ள சுருக்கங்களை இஸ்திரி பெட்டி பயன்படுத்தி போக்க வேண்டுமானால், ஹேர் ட்ரையர் இருந்தால் எளிதில் போக்கலாம். அதற்கு சுருக்கம் உள்ள பகுதியில் நீரை தெளித்து, பின் ஹேர் ட்ரையர் பயன்படுத்தி உலர வைத்தால் சுருக்கங்கள் போய்விடும்.

கெட்டில்
நீரை சூடேற்ற உதவும் கெட்டில் உங்களிடம் இருந்தால், அதில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். அப்படி நீர் கொதிக்கும் போது, வெளிவரும் ஆவியில் சுருக்கம் உள்ள துணியை 8-12 இன்ச் தொலைவில் வைத்து எடுத்தால், சுருக்கங்களானது மாயமாக மறைந்துவிடும்.



Click it and Unblock the Notifications
