Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா
மூட்டைப்பூச்சி தொல்லையில் இருந்து விடுபட சில டிப்ஸ்...
வீட்டில் மூட்டைப்பூச்சி இருந்தால், அதனை வெளியேற்றுவது என்பது அவ்வளவு சுலபமல்ல. எப்போது உங்கள் வீட்டில் மூட்டைப்பூச்சி உள்ளதோ, அப்போது முதலில் செய்ய வேண்டியது வீட்டில் உள்ள அனைத்து துணிகளையும் பேக்கிங் சோடா அல்லது வினிகர் பயன்படுத்தி துவைத்து, சுத்தமான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்.
எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!!
அதுமட்டுமின்றி, மூட்டைப்பூச்சியானது படுக்கும் பெட், மரத்தாலான நாற்காலிகள் போன்றவற்றில் தான் குடி கொண்டிருக்கும். அப்படி அவ்விடத்தில் மூட்டைப்பூச்சிகள் இருக்கும் போது, அதனை நசுக்கி கொன்றுவிட்டால், அதன் இரத்த நாற்றத்திலேயே பல்வேறு மூட்டைப்பூச்சிகள் வர ஆரம்பிக்கும். எனவே மூட்டைப்பூச்சிகள் இருந்தால், அதனை நசுக்காமல், ஒருசில பொருட்களைக் கொண்டு கொன்றுவிட்டால், அவை அழிந்துவிடுவதோடு, அவற்றை வீட்டில் இருந்து முற்றிலும் வெளியேற்றிவிடலாம்.
இப்போது மூட்டைப்பூச்சியை அழிக்க உதவும் பொருட்களைப் பார்ப்போமா!!!

வினிகர்
மூட்டைப்பூச்சி உள்ள இடத்தில் வினிகரை தெளித்தால், அதில் உள்ள அமிலத்தன்மையாலும், அதன் வாசனையிலும் மூட்டைப்பூச்சியானது அழிந்துவிடும்.

உப்பு
உப்பு மற்றொரு சிறப்பான பூச்சிக்கொல்லி பொருள். அதற்கு மூட்டைப்பூச்சியின் மேல் கல் உப்பை தூவினால், மூட்டைப்பூச்சியானது இறந்துவிடும்.

வெங்காயச் சாறு
நிறைய பேருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையிலேயே வெங்காயச் சாற்றினை மூட்டைப்பூச்சி உள்ள இடத்தில் தெளித்துவிட்டால், அதன் வாசனையில் மூட்டைப்பூச்சிகள் இறந்துவிடும்.

டீ-ட்ரீ ஆயில்
டீ-ட்ரீ ஆயிலை மூட்டைப்பூச்சி வாழும் இடத்தில் தெளித்தால், அதன் அடர்ந்த வாசனையினால் மூட்டைப்பூச்சிகள் இறந்துவிடுவதோடு, இனிமேல் மூட்டைப்பூச்சி வருவதையும் தடுக்கலாம்.

லாவெண்டர் எண்ணெய்
லாவெண்டர் எண்ணெயும் மூட்டைப்பூச்சியை அழிக்க உதவும் பொருட்களில் ஒன்று. எனவே இதனையும் பயன்படுத்திப் பாருங்கள்.
இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...



Click it and Unblock the Notifications
