Latest Updates
-
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா?
பாய்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவதற்கான வழிகள்!!!
வீட்டை பராமரிப்பது என்பது மிகவும் கடிமான ஒன்றாகும். அதிலும் வீட்டில் உள்ள பொருட்களை சிறந்த முறையில் பராமரித்து சுத்தமாக வைப்பது நமது கடமையாகும். இதன் மூலமான அவற்றால் நமக்கு ஏற்படும் நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாத்து நமது குடும்பத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கலாம்.
நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் உங்கள் பாயில் கறை உண்டாகுவதை தவிர்க்க முடியாது. உங்கள் பாய்கள் தான் கறைகள் எளிதில் தேங்கும் இடமாக இருக்கும். உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியமான வாழ்விற்கு இந்த பாய்களை உங்கள் குளியலறையிலும் தரையிலும் விரிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.இந்த பாய்களில் கறைகள் தங்கினால் அவை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல்நலத்தில் பல பிரச்சனைகளை உருவாகுவதற்கு காரணமாக இருக்கும். சுற்றுபுறம் தூய்மையாக இருந்தால் தான் நமது உடல்நலம் சீராக இருக்கும். இதனால் நமது வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதனை செய்வதற்கு சிறிது கவனம் எடுக்க வேண்டும்.
கறை படிந்த பாய்களை சுத்தம் செய்து பாரமரிக்கலாம். இதற்கு சிறிது முயற்சி தேவைப்படும். இன்று கடைகளில் ஏராளமான சுத்தம் செய்யும் டிடர்ஜென்ட் பவுடர்கள் கிடைக்கின்றன. அவற்றை கொண்டு வீட்டிலேயே சுத்தம் செய்யலாம். பாய்களை தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலமாக அதில் படியும் கறைகளை நீக்கிவிடலாம். உங்கள் வீட்டில் தவிழும் குழந்தைகள் இருந்தால் இன்னும் கடினமாகிவிடும். அதனால் குழந்தைகள் இருக்கும் வீட்டில் கூடுதல் கவனம் கொண்டு பராமரிக்க வேண்டும். இவற்றில் இருக்கும் கறைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கக்கூடும். குழந்தை பராமரிப்பு மிகவும் கடினமான ஒன்றாகும். எனினும், இந்த சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தி உங்கள் குடும்பம் ஆரோக்கியாத்துடன் இருக்க வழி செய்யலாம். உங்கள் பாய்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவதற்கான வழிகளை இப்பொழுது படிக்கலாம்.

ப்ளீச்சிங் பவுடர்
உங்கள் பாய்களை ப்ளீச்சிங் பவுடர் கலந்த நீரில் ஊறவைத்து சுத்தம் செய்யலாம். உங்கள் பாய்களை ப்ளீச்சிங் பவுடர் கலந்த நீரில் 4-5 மணிநேரங்கள் ஊறவைக்கவும். இதனை நீங்கள் செய்யும் போது உங்கள் வீட்டை காற்றோட்டமாக வைக்க வேண்டும். சில நேரங்களில் இவற்றின் மூலமாகவும் உங்கள் பாய்களில் படிந்திருக்கும் கரைகளை சுத்தம் செய்ய முடியாமல் போய்விடும். அந்நேரங்களில், கையாலோ அல்லது துணிதுவைக்கும் இயந்திரம் மூலமாகவோ துவைக்க வேண்டும்.

சமையல் சோடா (பேக்கிங் சோடா)
உங்கள் பாய்களை சுத்தம் செய்வதற்கு சமையல் சோடாவையும் உபயோகிக்கலாம். சிறிது சமையல் சோடாவையோ ப்ளீசிங் சோடாவையோ உங்கள் பாய்களில் தெளித்து துவைத்து காயவைத்து உங்கள் பாய்களை பளிச்சென்று மாற்றிவிடலாம். இந்த முறையை உபயோகித்து வாரம் ஒரு முறையாவது உங்கள் பாய்களை சுத்தம் செய்யவேண்டும். இது உங்கள் குடும்பத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

துணிதுவைக்கும் டிடர்ஜென்ட் பவுடர்
இது எல்லோர் வீட்டிலும் இருக்கும் பொதுவான ஒன்றுதான். இதனை உங்கள் துணிகளுக்கு உபயோகித்து வருவீர்கள். இதனை உங்கள் பாய்களை சுத்தம் செய்வதற்கும் உபயோகிக்கலாம். இந்த எளிய முறையை பயன்படுத்தி உங்கள் பாய்களை தூய்மையாக்கலாம். உங்கள் பாய்களை டிடர்ஜென்ட் கலந்த நீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதனை வெளியில் எடுத்து துவைக்கவும். பின்னர் காயவைக்கவும். இதனை வெயிலில் காயவைத்தால் இதில் படிந்திருக்கும் கறைகளை சிறந்த முறையில் நீங்கிவிடும்.

உலர்த்த வேண்டும்
உங்கள் பாய்களை நன்றாக உலரவைப்பதன் மூலமாக அதில் படிந்திருக்கும் கறைகள் நீங்கிவிடும். இது நன்றாக காய்ந்து இருந்தால் இவற்றில் கறை படியும் வாய்ப்புகள் குறைந்து விடும். வரும்முன் காப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதனால், இதனை சுத்தம் செய்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

கைகளால் துவைக்க வேண்டும்
உங்கள் பாய்கள் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டுமென்றால் அவற்றை கைகளால் துவைக்க வேண்டும். துணிதுவைக்கும் இயந்திரத்தை காட்டிலும் கைகளால் துவைப்பதே நல்லது. துணிதுவைக்கும் இயந்திரத்தில் துவைத்தால் அதில் இருக்கும் நாறுகள் பாதிப்படையும். அதனால், இவற்றை கைகளால் துவைப்பதே சிறந்ததாகும்.
உங்கள் பாய்களை சுத்தம் செய்வதற்கான முதல்படி அவற்றை தண்ணீரில் ஊறவைப்பதுதான்.சிறிது நேரத்திற்கு பின்பு உங்கள் கைகளில் உரைகளை அணிந்து கொண்டு துணிதுவைக்கும் சோப்பை உபயோகித்து துவைக்க வேண்டும். ப்ரஷ் கொண்டும் அதில் படிந்திருக்கும் கரைகளையும் அழுக்கையும் நீக்கலாம். அழுக்கு முற்றிலுமாக நீங்கிய பின்பு அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். கடைசியாக துவைத்த பாய்களை வெயிலில் உலர்த்த வேண்டும். நிழலில் சிறிது நேரம் உலர்த்த வேண்டும். அவை காய்ந்த பின்பு அவற்றின் இடத்தில் போடவும். இதனை வாரம் முறையாவது மேற்கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications











