Latest Updates
-
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 14, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம் -
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம்
வீட்டுல கெட்ட நாற்றம் வருதா? இதோ சூப்பர் டிப்ஸ்...

அதிலும் எங்கேனும் ஊருக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்தால், அப்போது வரும் துர்நாற்றத்தைத் தாங்க முடியாது. ஆகவே அத்தகைய எந்த ஒரு நாற்றமும் வீட்டிலிருந்து வராமல் இருக்க ஒரு சில சூப்பர் டிப்ஸ் இருக்கிறது. இது என்னவென்று படித்து தெரிந்து வீட்டை நறுமணத்துடன், சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
* தினமும் வீட்டில் சேரும் குப்பைகளை அவ்வப்போது தூக்கிப் போட்டு விட வேண்டும். ஒரு நாள் அவற்றை மறந்தாலும், பின் வீடே நாற்றத்தில் மூழ்கிவிடும்.
* வீட்டில் பயன்படுத்தும் குப்பைத் தொட்டிகள் எப்போது மூடியிருக்க வேண்டும். அதிலும் அந்த தொட்டிகள் கிச்சன், பாத் ரூம் அல்லது ஹால் என்று எங்கு இருக்கிறது என்பது முக்கியமில்லை, அது மூடியிருக்கிறதா என்பது தான் முக்கியம். இல்லையெனில் அதிலிருந்து நாற்றம் வரும்.
* அணியும் உடைகளை எப்போதும் அழுக்குப் பை அல்லது கூடையில் போட வேண்டும். அதிலும் மூடி போட்டதாகவோ அல்லது ஜிப் உள்ளதாகவோ இருக்க வேண்டும். இல்லையெனில் துணியில் இருந்து வரும் வியர்வை வாசனை, வீட்டிலேயே சுற்றிக் கொண்டிருக்கும்.
* வீட்டில் சமைக்கும் உணவுகளை திறந்த படியே வைக்க கூடாது. எப்போது சமைத்தாலும், அந்த உணவுகளை மறக்காமல் மூடி வைக்க வேண்டும். இல்லையெனில் சமைக்கும் போது, வீட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் காற்றை வெளியேற்றும் எக்ஸாஸ்ட் ஃபேன் போட்டு விட வேண்டும்.
* பாத்ரூம் எப்போதும் அதிக ஈரத்துடனோ அல்லது நீர் தேக்கத்துடனோ இருந்தால், அது நாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே அப்போது அதனை மாப் வைத்து துடைத்து விட்டு, பின் ஏதேனும் ஏர் ஃப்ரஸ்னரை அடித்துவிட வேண்டும்.
* சமைத்து முடித்ததும் மறக்காமல் சமயலறையை துடைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த பொருட்களின் வாசனைக்கு பூச்சிகள் வந்துவிடும். பின் அந்த பூச்சிகள் வீட்டிலேயே தங்கிவிடும். பின் அதனால் நாற்றம் அதிகம் வரும்.
* வீட்டை துடைக்கும் போது, நீரில் பினாயில் அல்லது மற்ற நீர்மத்தை கலந்து துடைப்பதைவிட, ஏதேனும் வாசனை மிகுந்த எலுமிச்சை வாசனை உள்ளதை வாங்கி, ஊற்றி பயன்படுத்தினால், சூப்பராக இருக்கும்.
* எப்போதும் வீட்டில் இருக்கும் பாத்ரூமை பயன்படுத்தியதும், மூடி விட வேண்டும். இதனால் கழிவறையிலிருந்து வரும் நாற்றம் வீட்டில் பரவுவதைத் தடுக்கலாம்.
* வீட்டில் உள்ள நாற்றத்தை போக்க சிறந்த வழி என்னவென்றால், வீட்டில் சூரிய வெளிச்சம் படுவது தான். ஏனெனில் அந்த வெளிச்சம் வீட்டில் படுவதால், எந்த ஒரு நாற்றமும் வீட்டில் இருக்காது. மேலும் வீட்டில் உள்ள ஜன்னல்களை காலை வேளையில் திறந்து வைப்பது நல்லது.
இவற்றையெல்லாம் பின்பற்றி வந்தால், வீட்டிலிருந்து வரும் துர்நாற்றத்தை தடுக்கலாம். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
