Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
தினந்தோறும் சுத்தம் செய்தால் இல்லம் கோவிலாகும்!

படுக்கையறை சுத்தம்
காலையில் எழுந்ததும் முதலில் படுக்கையறையில் படுக்கையை உதறி மடித்து வைக்கவேண்டும். பின் இரவு படுக்கையில் கழற்றிப் போட்ட துணிகள், சாக்ஸ், புத்தகங்கள் ஆகியவற்றை எடுத்து அதனதன் இடத்தில் வைத்தலே படுக்கையறை சுத்தமாக அழகாகிவிடும். வாரத்திற்கு ஒருமுறையாவது பெட்டை நகர்த்தி உதறிப் போடவேண்டும். அப்பொழுதுதான் பூச்சிகள் எதுவும் குடித்தனம் புகாமல் இருக்கும்.
சமையலறை சுத்தம்
அடுத்ததாக அதிகம் புழங்கும் இடம் சமையலறை. இங்கு எண்ணெய் கறை அதிகம் படியும். எனவே அதற்கென உள்ள சுத்தம் செய்யும் பொருட்களை வைத்து சமையல் முடிந்தவுடன் துடைத்துவிட்டால் பளிச் என்று ஆகிவிடும். தேவையற்ற சாமான்களை சமையல் அறையில் இருந்து அப்புறப்படுத்துங்கள் எதையும் சேர்த்து வைத்தால்தான் குப்பை சேரும்.
பாத்ரூம் சுத்தம்
சுகாதாரம் பேண வேண்டிய மற்றொரு இடம் குளியலறை, கழிவறைகள். இவற்றுக்கென்று உள்ள ஆசிட், கிளீனிங் பொருட்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். இதனால் தொற்றுக் கிரிமிகள் அழிக்கப்பட்டுவிடும். குளியலறையும் சுத்தமாகும்.
வரவேற்பறை சுத்தம்
வரவேற்பறையில் குப்பை சேருவதற்கு பஞ்சம் இருக்காது. ஏனெனில் எல்லா பொருட்களும் அங்கேதான் கடைசியில் குவித்து வைக்கப்படும். நமக்குத் தேவையான பொருட்களை உபயோகப்படுத்திய பின்னர் அதை குப்பைத் தொட்டியில் போடுவதைப் போல தேவையில்லாத கடிதங்கள், பில்கள் போன்றவற்றை உடனடியாக குப்பையில் போடுவது நல்லது இதனால் வீட்டில் குப்பை சேராது எளிதாக சுத்தம் செய்யலாம்.
பளிச் தரைகள்
தரையைப் பெருக்குகிற போது தினந்தோறும் சுவர்கள் இணையும் இடங்களிலும் ஒட்டடை அடித்தால் வலை கட்டிய சுவர்களைக் காணவே முடியாது. பளிச்சென்று இருக்கும். அறைகளை துடைக்க நாம் ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதை விட
பயன்படுத்தாத பழைய ஷாம்பு இருந்தால் அதை வைத்து வீட்டை துடைக்கலாம். வீடு பளிச் என்று ஆகும்.



Click it and Unblock the Notifications
