For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துணி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா? உடைகள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க இப்படித்தான் துவைக்கணுமாம்...!

வைரஸ் துணி உள்ளிட்ட குறிப்பிட்ட மேற்பரப்புகளில் சில மணிநேரங்கள் அல்லது சில நாட்கள் கூட இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

|

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த தொற்றுநோயால் எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். உலக சுகாதார அமைப்பின் மருத்துவ ஆலோசனைகளின்படி, வைரஸ் பரவுவதைத் தடுக்க உங்கள் கைகளை அடிக்கடி கழுவுவதும், சமூக தூரத்தை கடைப்பிடிப்பதும் முக்கியம்.

How To Wash Your Clothes During the Coronavirus Outbreak?

கொரோனா வைரஸ் துணி உள்ளிட்ட குறிப்பிட்ட மேற்பரப்புகளில் சில மணிநேரங்கள் அல்லது சில நாட்கள் கூட இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம்முடைய தனிப்பட்ட சுகாதாரப் பழக்கத்தை மேம்படுத்த முடிந்தாலும், வைரஸை சுமக்கும் கேரியர்களாக இருக்கக்கூடிய நமது ஆடைகளின் மேற்பரப்புகளைப் பற்றியும் நாம் கவனமாக இருக்க வேண்டும். தொற்றுநோய் பரவும் காலக்கட்டத்தில் ஆடைகளை எப்படி பாதுகாப்பாக துவைக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துணிகள் மூலம் கொரோனா பரவுமா?

துணிகள் மூலம் கொரோனா பரவுமா?

துணிகள் மூலம் வைரஸ் பரவுமா என்ற கேள்விக்கு துரதிர்ஷ்டமாசமாக பதில் ஆம் என்பதுதான். ஆனால் கெட்டதிலும் ஒரு நல்ல விஷயமாக துணி போன்ற மென்மையான பொருட்கள் மூலம் வைரஸ் பரவுவது மிகக் குறைவு என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். தொற்றுநோய் பரவும் போது எப்படி பாதுகாப்பாக சலவை செய்ய வேண்டும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

முடிந்தவரை சீக்கிரமாக துவைக்கவும்

முடிந்தவரை சீக்கிரமாக துவைக்கவும்

நீங்கள் வெளியில் இருந்து வீடு திரும்பியவுடன் கூடிய விரைவில் துணிகளைக் துவையுங்கள். நாடு முழுமையான பூட்டப்பட்ட நிலையில் இருந்தாலும், மக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்குச் செல்லலாம். துணியின் மேற்பரப்புகள் வைரஸைப் பிடிக்கக்கூடும், உங்கள் ஆடைகளை மாற்றிக்கொண்டு வீடு திரும்பிய உடனேயே நீங்கள் அணிந்திருந்தவற்றை துவைக்க வேண்டும். உங்கள் துணிகளை உடனடியாக கழுவ முடியாவிட்டால், அவற்றை உடனடியாக ஒரு தனி சலவை பையில் அல்லது சலவை இயந்திரத்தில் வைக்கவும் - துணிகளைக் கழுவுவதற்கு வெளியே எடுத்தபின் நீங்கள் சரியாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

அதிவேக சுத்தம் செய்யும் செயல்முறை

அதிவேக சுத்தம் செய்யும் செயல்முறை

ஆடைகள், மற்ற கடினமான மேற்பரப்புகளைப் போலன்றி, வைரஸைக் கட்டுப்படுத்தக்கூடிய அடுக்குகளைக் கொண்டுள்ளன. ஈரமான சோப்பில் தேய்ப்பது போன்ற ஒரு அதிவேக செயல்பாட்டில் துணிகளை சரியாக கழுவ வேண்டியது அவசியம். ஆடையின் மேற்பரப்பை சுத்தம் செய்வது மட்டும் போதாது. முடிந்தால், துணிகளைக் துவைப்பதற்கு முன் சோப்பு நீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும், குறிப்பாக நீங்கள் ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் இதனை கண்டிப்பாக செய்ய வேண்டியது அவசியமாகும்.

MOST READ: இந்த ஊட்டச்சத்து உங்களை கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலில் இருந்து காப்பாற்றுமாம் தெரியுமா?

சூடான நீரில் துவைப்பது

சூடான நீரில் துவைப்பது

நோய் கட்டுப்பாட்டு மையத்தின் கூற்றுப்படி, சரியான வெப்பநிலையில் இருக்கும் நீரில் உங்கள் துணிகளைக் கழுவுவது நல்லது. துணிகளை முறையாக கிருமி நீக்கம் செய்ய, தண்ணீரின் வெப்பநிலை 40 முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும் என்று இங்கிலாந்தில் உள்ள சி.டி.சி பரிந்துரைக்கிறது. கடினமான மற்றும் நல்ல தரமான சோப்பு பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. உங்களிடம் ஒரு சலவை இயந்திரம் இல்லையென்றால், உங்கள் துணிகளை கை கழுவினால் அதிக வெப்பநிலை நீர் மிகவும் முக்கியமானது.

ப்ளீச்

ப்ளீச்

ப்ளீச் கடினமான மேற்பரப்புகளுக்கு ஒரு நல்ல கிருமிநாசினியாக கருதப்படுகிறது. இருப்பினும், நீங்கள் துணிகளில் ஒரே தர ப்ளீச்சைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் கடினமான உங்கள் துணிகளை சேதப்படுத்தும் அபாயம் உங்களுக்கு இருக்கும். அதற்கு பதிலாக, துணிகளுக்காக சிறப்பாக தயாரிக்கப்படும் ப்ளீச் வகையைப் பயன்படுத்துங்கள். தொற்றுநோயிலிருந்து கூடுதல் பாதுகாப்புக்காக உங்கள் துணிகளைக் துவைக்கும்போது ஒரு அளவில் சேர்க்கலாம்.

அடிப்படை முன்னெச்சரிக்கைகள்

அடிப்படை முன்னெச்சரிக்கைகள்

இதுதவிர இந்த கடுமையான நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க சில அடிப்படை முன்னெச்சரிக்கைகள் கூறப்பட்டுள்ளன. உங்கள் துணிகளைக் துவைப்பதற்கு முன்பு வீட்டின் எந்த மேற்பரப்பையும் தொடக்கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆடைகளின் அனைத்து அடுக்குகளையும் கழுவ வேண்டிய அவசியமில்லை. வைரஸைக் பரப்பக்கூடிய மேற்பரப்புடன் தொடர்பு கொள்ளக்கூடியவை மட்டுமே துவைக்கப்பட வேண்டும். உங்கள் துணிகளைக் துவைத்த பின் கைகளைக் கழுவுவதும் முக்கியம்.

MOST READ: ரோபோவால் கொடூரமாக கொல்லப்பட்டவர் முதல் நடனமாடியே கும்பலாக இறந்தவர்கள் வரை... உலகின் மோசமான மரணங்கள்

கையுறைகள்

கையுறைகள்

ஒருவேளை நீங்கள் நோய்வாய்ப்பட்டவரின் உடைகளை துவைக்க நேர்ந்தால் ஒவ்வொரு முறையும் துவைக்கும் போது அப்புறப்படுத்தக்கூடிய கையுறைகளை பயன்படுத்துவதை உறுதி செய்துகொள்ளவும். மீண்டும் உபயோகிக்கக்கூடிய கையுறைகளை பயன்படுத்தினால் அவற்றை துணி துவைக்க மட்டும் பயன்படுத்தவும். அவற்றை மற்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது. கையுறைகள் அகற்றப்பட்ட உடனேயே கைகளை கழுவ வேண்டும். அழுக்கு உடைகளை கையாளும் போது கையுறைகள் எதுவும் பயன்படுத்தப்படாவிட்டால், எப்போதும் கைகளை கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Wash Your Clothes During the Coronavirus Outbreak?

Check out the tips on how to wash your clothes during the Coronavirus outbreak.
Story first published: Tuesday, April 7, 2020, 19:11 [IST]
Desktop Bottom Promotion