For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்னி நட்சத்திரத்தில் உங்கள் வீட்டை செலவே இல்லாமல் எப்படி கூலாக வைத்திருக்கலாம் தெரியுமா?

வீட்டில் ஏசி அமைக்கும் அளவிற்கு அனைவருக்கும் பொருளாதார வசதி இல்லையென்றாலும் சில இயற்கையான வழிகளில் நமது வீட்டில் ஏசி இல்லாமலேயே இயற்கையாக குளிச்சியை அதிகரிக்கலாம்.

|

இந்த வருடம் கோடைகாலம் தொடங்கிய நாள் முதலே வெயில் வாட்டிக்கொண்டு இருக்கிறது, அதிலும் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. சுற்றுசூழல் ஆய்வாளர்களின் கருத்துப்படி இந்த வருடம் வழக்கத்தை விட வெயில் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வீட்டில் ஏசி போடுவது என்பது அனைவராலும் முடியாத ஒன்றாகும்.

How To Keep The House Cool In Summer Naturally

வீட்டில் ஏசி அமைக்கும் அளவிற்கு அனைவருக்கும் பொருளாதார வசதி இல்லையென்றாலும் சில இயற்கையான வழிகளில் நமது வீட்டில் ஏசி இல்லாமலேயே இயற்கையாக குளிச்சியை அதிகரிக்கலாம். இந்த பதிவில் நமது வீட்டை எப்படி இயற்கையாக கூலாக வைத்திருக்கலாம் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈரப்பதத்தை குறைக்கவும்

ஈரப்பதத்தை குறைக்கவும்

நீங்கள் ஈரப்பதமான பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் வியர்வை மெதுவாக ஆவியாகிறது, எனவே குளிரூட்டலை அதிகரிக்க தளர்வான பருத்தி மற்றும் பிற இயற்கை துணிகளை அணிவது நல்லது. ஈரப்பதத்தை குறைப்பது குளிர்ச்சியாக உணரவும் உதவும். மேலும் உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க வேறு வழிகள் உள்ளன.

மரங்களை நட்டு வைக்கவும்

மரங்களை நட்டு வைக்கவும்

இது ஒரு நீண்டகால திட்டமாக இருக்கலாம், ஆனால் இதனால் கிடைக்கும் நன்மைகளும் நீண்ட காலம் இருக்கும். சில ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் உருவாக்கிய இயற்கை நிழலைப் பற்றி பெருமைப்படுவீர்கள். குறிப்பாக கோடைகாலத்தில், சூரியன் உங்கள் வீட்டிலேயே வெப்பமானதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் இடங்களில் அவற்றை நடவும்.

சூரிய ஒளியைக் குறைத்து பிரதிபலிக்கவும்

சூரிய ஒளியைக் குறைத்து பிரதிபலிக்கவும்

உங்கள் வீட்டிற்கு நேரடி சூரிய ஒளி வருவது வெப்பநிலையை அதிகரிக்கும். பிளைண்ட்ஸ், திரைச்சீலைகள் அல்லது பிரதிபலிப்பு சாளர பேனல்களை வைப்பது சூரியனை ஜன்னல்களுக்கு வெளியே வைத்திருப்பதற்கான சில வழிகளாகும். உங்கள் அறையில் சூரிய ஒளி நேரடியாக விழாமல் இருப்பது உங்கள் அறையின் வெப்பநிலையை குறைக்கும்.

MOST READ: மே மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்... அவர்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா?

தேவையில்லாத போது விளக்கை அணைத்து வைக்கவும்

தேவையில்லாத போது விளக்கை அணைத்து வைக்கவும்

ஒளி விளக்குகள் வெப்பத்தை உருவாக்குகின்றன, குறிப்பாக ஒளிரும் போது. அந்த பல்புகளை நீங்கள் மாற்ற முடியாவிட்டால் அதன் பயன்பாட்டை குறைப்பதே நல்லது. சில வீடுகள் மின்சார செலவைக் குறைக்க உதவும் வகையில் சோலார் பேனல்களை நிறுவுகின்றன. விளக்குகளை அதிகம் பயன்படுத்துவது அறையின் வெப்பநிலையை அதிகரிக்கும்.

கதவுகளை கையாளுவது

கதவுகளை கையாளுவது

ஒரு அறை வெளிப்புற வெப்பநிலையை விட குளிராக இருந்தால், கதவை மூடி வைக்கவும். இது நாள் முழுவதும் வெப்பமான பகுதியில் கூட குளிர்ந்த அறை வெப்பநிலையை முடிந்தவரை வைத்திருக்கும்.

வீட்டிற்குள் சமைக்க வேண்டாம்

வீட்டிற்குள் சமைக்க வேண்டாம்

நீங்கள் சமைக்கும்போது சமையலறை நிறைய வெப்பத்தை உருவாக்கித் தக்க வைத்துக் கொள்ளலாம். இதனை தவிர்க்க சிறந்த வழி நாளின் குளிரான நேரத்தில் சமைப்பதுதான். வீட்டின் பின்புறத்தில் சமைப்பது வீட்டின் வெப்பநிலையை குறைப்பதுடன் உங்கள் சமையலையும் சுவாரஸ்யமானதாக்கும்.

MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் ஆபாசப்படங்களுக்கு அடிமையாக இருக்கிறார் என்று அர்த்தம்... உஷாரா இருங்க

பர்னிச்சரில் மென்மையான வெள்ளைத்துணிகளை போடவும்

பர்னிச்சரில் மென்மையான வெள்ளைத்துணிகளை போடவும்

வெள்ளை துணி கவர்கள் உங்கள் பர்னிச்சர்களில் குறைந்த வெப்பத்தைத் தக்கவைக்க உதவும். மேலும் இவை சூரிய ஒளியை பிரதிபலிக்கும். இது சூரிய ஒளியில் இருந்து குறைவான வெப்பத்தை உறிஞ்சுவதால் வீட்டின் பர்னிச்சர்கள் மற்றும் உட்புறம் குளிர்ச்சியாக இருக்கும்.

வீட்டின் இருபுறமும் ஜன்னல்களை திறந்து வைக்கவும்

வீட்டின் இருபுறமும் ஜன்னல்களை திறந்து வைக்கவும்

வீட்டின் இருபுறமும் ஜன்னல்களைத் திறப்பதன் மூலம், முழு கட்டமைப்பிலும் காற்றை சுதந்திரமாக உலவ அனுமதிக்கிறீர்கள். இது குறுக்கு காற்றோட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த செயல்முறை உங்கள் வீட்டில் வெப்பநிலையை குறைக்க உதவுகிறது. இது உண்டாக்கும் குளிர்ச்சி உங்களை ஆச்சரியப்பட வைக்கும்.

மின்விசிறியை எதிர்திசையில் சுற்ற வைக்கவும்

மின்விசிறியை எதிர்திசையில் சுற்ற வைக்கவும்

இது உங்கள் அறையில் இருக்கும் வெப்பநிலையை வெளியேற்ற உதவும். இது உங்களை குளிர்ச்சியாக உணர வைக்கும். பிளேட்களை இப்படி மாற்றியமைப்பது வெப்பத்தை கீழ்நோக்கி அனுப்புவதற்கு பதிலாக மேல்நோக்கி அனுப்பும்.

MOST READ: கொரோனா நோயில் இருந்து குணமானவர்கள் மூலம் மீண்டும் கொரோனா பரவலாம்... கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி..

ஜன்னலின் மீது பாக்ஸ் விசிறியை வைக்கவும்

ஜன்னலின் மீது பாக்ஸ் விசிறியை வைக்கவும்

நீங்கள் இதைச் செய்யும்போது, சூடான காற்றை வெளியே தள்ளுகிறீர்கள். பலரும் அறியாத விஷயம் இதுவாகும். சில நேரங்களில், ஒரு செயற்கை தென்றலை உருவாக்குவதை விட வெப்பத்தை வெளியேற்றுவதற்கு மின்விசிறியை உபயோகிப்பது நல்லது.

எலக்ட்ரானிக் கருவிகளை அன்ப்ளக் செய்யவும்

எலக்ட்ரானிக் கருவிகளை அன்ப்ளக் செய்யவும்

இந்த காலகட்டத்தில் எலக்ட்ரானிக் கருவிகள் அனைத்தும் தனக்குள் வெப்பத்தைக் கொண்டுள்ளன. முடிந்தளவு எலக்ட்ரானிக் கருவிகளை குறைவாக உபயோகிப்பதே வீட்டின் வெப்பநிலையை குறைக்கலாம். ஒரு கருவி பயன்பாட்டில் இல்லாதபோது அதன் ப்ளக்கை கழட்டி விட்டு விடுவது நல்லது.

ஐஸ்கட்டி

ஐஸ்கட்டி

அறையை குளுமையாக்க ஏசி மிகவும் சுலபமான வழியாக இருக்கலாம். ஆனால் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளும், மின்சார கட்டணமும் நமக்கு பெரும் அதிர்ச்சியை கொடுப்பதாக இருக்கும். ஐஸ்கட்டியை வைத்து அறையை குளிர்விக்கலாம் என்பதை பற்றி நீங்கள் சிந்தித்து உள்ளீர்களா? இது நல்ல பலனளிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டது. ஒரு கிண்ணத்தில் சிறிது ஐஸ்கட்டியை எடுத்து, மின்விசிறி முன் வைக்கவும், இது உங்கள் அறையை ஏர்கண்டிஷனர் போல மாற்றும்.

MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் தவறான ஒருவரை திருமணம் செய்துள்ளீர்கள் என்று அர்த்தமாம்... உஷார்!

பாத்ரூம் மற்றும் சமையலறை விசிறியை பயன்படுத்தவும்

பாத்ரூம் மற்றும் சமையலறை விசிறியை பயன்படுத்தவும்

நீராவியை வெளியேற்றுவதற்கு மட்டுமின்றி மற்ற அறைகளில் இருக்கும் வெப்பத்தை வெளியேற்றவும் பாத்ரூம் மற்றும் சமையலறையில் இருக்கும் விசிறிகள் பயன்படுகிறது. ஏசியை பயன்படுத்தாத நாட்களில் இவ்வாறு செய்யும்போது உங்கள் வீட்டின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களை உணரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Keep The House Cool In Summer Naturally

Read to know how to keep house cool in summer naturally
Story first published: Monday, May 4, 2020, 13:04 [IST]
Desktop Bottom Promotion