Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
Manga poricha kulambu recipe in Tamil: மதியம் சிம்பிளா அதிகம் மெனக்கெடாம சமையலை முடிக்க நினைக்கிறீங்களா? உங்கள் வீட்டில் மாங்காயும், முருங்கைக்காயும் உள்ளதா? அப்படியானால் அந்த காய்களை வைத்து சூப்பரான பொரிச்ச குழம்பு செய்யுங்கள். இந்த பக்குவத்தில் மாங்காய் பொரிச்ச குழம்பு செய்யும் போது, அது சூடான சாதத்துடன் மட்டுமின்றி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

மேலும் இந்த மாங்காய் பொரிச்ச குழம்பு செய்வதற்கு ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை எளிதாக செய்யலாம். முக்கியமாக இந்த குழம்பு நீங்கள் வழக்கமாக செய்வதை விட சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதால், மாங்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். மாங்காயை பச்சையாகவோ அல்லது சாம்பராகவோ சாப்பிட்டே போரடித்தவர்கள் இந்த குழம்பை முயற்சி செய்து பார்க்கலாம்.
உங்களுக்கு சூப்பரான மாங்காய் பொரிச்ச குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாங்காய் பொரிச்ச குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பச்சை மாங்காய் - 1
- முருங்கைக்காய் - 2
- பாசிப்பருப்பு - 3 ஸ்பூன்
- சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
அரைக்க:
- துருவிய தேங்காய் - 4 ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- கடுகு - 1/4 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பிலை - ஒரு கொத்து (நறுக்கியது)
- எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
- பாசிப்பருப்புடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் ஒரு துளி எண்ணெய் சேர்த்து, பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். அதை மசித்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
- இப்போது ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முருங்கைக்காய் துண்டுகளை எடுத்துக்கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து வேகவிடவும். முருங்கைக்காய் பாதி வெந்த நிலையில், நறுக்கிய மாங்காய் துண்டுகளை போட்டு மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
- கலவை கொதிக்கத் தொடங்கியதும், சாம்பார் பொடி, உப்பு மற்றும் வேகவைத்த பாசிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். மாங்காயும் முருங்கைக்காயும் முழுமையாக வேகும் வரை மூடி வைத்து சமைக்கவும்.
- இப்போது ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காயுடன் சிறிது நீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- இந்த விழுதை குழம்புடன் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க விடவும். இந்த குழம்பு மிகவும் கெட்டியாக இருக்கக்கூடாது, எனவே தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.
- பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் கடுகு, சீரகம் மற்றும்கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இந்த தாளிப்பை குழம்பின் மீது ஊற்றி கொட்டி நன்றாக கிளறினால் சுவையான மாங்காய் பொரிச்ச குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications
