Just In
- 1 hr ago
அடிக்கடி சீக்கிரம் சோர்வடைகிறீர்களா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (17.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கவும்…
- 17 hrs ago
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- 17 hrs ago
ரமலான் நோன்பு இருக்குறவங்க ஆரோக்கியமா இருக்க 'இந்த' விஷயங்கள கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க...!
Don't Miss
- Sports
பறக்க பறக்க.. வேகமாக முடிவெடுத்த தோனி.. அந்த ரிவ்யூ கூட எடுக்கவில்லை.. ஏன் இவ்வளவு பதற்றம்? பின்னணி
- Movies
திடீர் மாரடைப்பு.. சுய நினைவை இழந்த விவேக்.. எக்மோ சிகிச்சை.. இறுதியில் மரணம்.. நடந்தது என்ன?
- News
சிஎஸ்கே உள்ளே.. சிக்கல் நிறைய இருக்கே.. இதையெல்லாம் அனுபவிக்கலாமா, வேண்டாமா.. ஆண்டவா!
- Automobiles
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விதையில்லா தர்பூசணி வீட்டுத்தோட்டத்தில் சாத்தியமா ? இந்த பொருட்கள் போதும்
கோடைகாலம் என்றாலே நமது நினைவுக்கு வருவது தர்பூசணி பழமாகத் தான் இருக்கும். கோடைக் காலத்தில் பரவலாகக் கிடைக்கும் தர்பூசணி மற்ற காலங்களிலும் ஜூஸ் கடைகளிலும், பெரிய பழக்கடைகளிலும் கிடைக்கிறது. ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்பது போல் எண்ணற்ற மருத்துவப் பலன்களை தன்னகத்தே கொண்டு மனதையும் உடலையும் குளிர்வித்தாலும் விலையாலும் ஏழைகளின் மனதை குளிர்விக்கும் ஆற்றல் படைத்தது. ஒரு கிலோ தர்பூசணி 12 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை பரவலாக விற்கப்படுகிறது.
விலைக்குறைவு தான் என்றாலும் மகசூலுக்காக பல்வேறு கெமிக்கல்கள் பயன்படுத்துவதாக செய்திகள் பரவலாக கேட்டு வருகிறோம். இந்த தாவரம் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க முடியுமா என்றால் நிச்சயம் வளர்க்க முடியும். இதற்கான பொருட்செலவு என்பது மிகவும் குறைவு என்பதால் வீட்டுத் தோட்டத்தில் இயற்கையான முறையில் தர்பூசணி வளர்ப்பது எப்படி என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

விதையில்லா தர்பூசணி
விதையில்லா தர்பூசணி வளர்ப்பது சாத்தியமா என்ற கேள்வி பலருக்குள்ளும் இருக்கிறது. அதற்கெல்லாம் தனியாக தொழில்நுட்பம் எல்லாம் இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் கொட்டையில்லாத தர்பூசணி விதைகள் விலையுயர்ந்தது. அதுமட்டுமில்லாமல் அதற்கென பிரத்யேகமாக நிலத்தை சமன் செய்ய வேண்டும்.

தெரிந்து கொள்ளுங்கள்
விதையில்லா தர்பூசணி சுலபமாக வளரும் பயிர் வகைகளில் ஒன்றாகும். ஆனால் மரபணுக்களில் செய்யப்பட்ட மாற்றத்தலில் பழத்திற்குள் விதைகள் இருக்காது. ஆனால் வெள்ளரியைப் போலவே இதில் வெள்ளை நிற விதைகளை உணவாக உண்ணலாம்.

என்ன தேவை
விதையில்லா தர்பூசணியை அமைப்பதற்கு 4 முக்கியமான பொருட்கள் தேவைப்படுகின்றன.
1.விதையில்லா தர்பூசணி விதைகள்
2. விதையுள்ள தர்பூசணியின் விதைகள் (இரு விதைகளையும் வெவ்வேறு நிறத்தில் தேர்ந்தெடுப்பது வேற்படுத்திப் பார்பதற்கு பயனுள்ளதாக இருக்கும்)
3. கரி பானை (அ) முட்டை தோல்
4.உரக்கலவை
விதையில்லா தர்பூசணியை விளைவிப்பதற்கு இரண்டு வகையான விதைகளும் தேவைப்படுகிறது. ஏனெனில் விளைச்சலுக்குத் தேவையான மகரந்தத்தின் திறனை விதையில்லா தர்பூசணியின் விதைகள் பெற்றிருப்பதில்லை. விதையில்லா தர்பூசணியின் விதைகளுக்கு விதையுள்ள தர்பூசணியின் விதைகள் துணை மகரந்தமாக செயல்பட்டு விளைச்சலை உருவாக்குகிறது.

#1 முட்டை ஓடு அல்லது இயற்கையானத் தொட்டிகள்
உரக்கலவைகள் நிரம்பிய கரிப் பானைகளை இயற்கையான பசுமையான சூழலில் வளர்வதற்கான இடத்தில் வைக்க வேண்டும். அந்தப் பானையில் ஈரமான மண்ணால் நிரப்ப வேண்டும்.
அந்தப் பானையை 85 டிகிரி ஃபேரன்ஹீட்டில் 48 மணி நேரத்தில் மண்ணை உலர வைக்க வேண்டும். அதன்பின் அந்தப் பானையில் ஒரு இன்ச்சுக்கும் கீழாக விதைகளை பயிரிட வேண்டும்.

#2 விதை முளைப்பதற்கான டிப்ஸ்
விதைகளை பகலில் 72 முதல் 75 டிகிரி ஃபேரஹீட்டிலும் இரவில் 65 டிகிரிக்கு குறையாமல் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். நாற்றுகள் வெளிவரும் வரை தண்ணீர் ஊற்றாமல் காத்திருக்க வேண்டும். வெளிவந்த பிறகு தண்ணீர் அதிகமாகிவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விதையில்லா தர்பூசணி முளைத்தலுக்கு நிறைய காலங்களை எடுத்துக் கொள்ளும். பாதி வரை நிரப்பப்பட்ட உரக்கலவை விதை முளைத்தல் மற்றும் நாற்றுகள் வளரும் வரை தேவையாற்ற ஆற்றலைத் தரும். அதே சமயத்தில் முதல் இலை மற்றும் இரண்டாம் நிலை இலைகள் வளரும் போது அதற்கு தேவையான உரங்களை நாம் பயிருக்கு அளிக்க வேண்டும்.
நாற்று நன்றாக வளர்வதற்கு நான்கிலிருந்து ஆறு வாரமாவது நேரத்தை எடுத்துக் கொள்ளும்.

#3 நாற்றுகளை கடினப்படுத்துதல்
தோட்டத்தில் தாவரங்களை பரிமாற்றம் செய்வதற்கு 7 நாட்களுக்கு முன்பே அதை தயார் படுத்த வேண்டும். இதற்கு நாற்றுகளை கடினப்படுத்துதல் என்று பெயர்.
விதை நாற்றுகளை பகல் நேரத்தில் காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். அதே சமயம் இரவு நேரங்களில் அறைக்குள் நாற்றுகளை எடுத்து வைக்க வேண்டும் . இந்த சந்தர்பத்தில் மிகக் குறைவான நீரே நாற்றுகளுக்குத் தேவைப்படுகிறது.

#4 மகரந்தத்தை ஊக்குவித்தல்
நாற்றுகளை தயார்படுத்திய பிறகு தோட்ட அமைபிற்கான திட்டங்களை அமையுங்கள். விதையில்லா நாற்றுகளுக்கு நடுவில் ஒவ்வொரு மூன்றாவது வரிசையிலும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் கலவையை நட வேண்டும்.
சிறிய தோட்டத்தில் தர்பூசணியை பயிரிட நினைத்தால் மாற்று பயிர்களை இடையில் நடுவதற்கான திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் அந்த இரண்டு தாவரங்களும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் வகையில் மட்டுமே இருக்க வேண்டும். ஒன்றன் மகரந்தச் சேர்க்கையை மற்றொன்று பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

#5 விதையில்லா தர்பூசணி நடவு மற்றும் வளர்ச்சி
அதிகமான மற்றும் சுவையான தர்பூசணிகளைப் பெறுவதற்கு பின்வரும் முறைகளை முழுமையாக பின்பற்றவும்.
உறைபனி காலத்திற்கு முன்னதாக நாற்றுகளை நடவேண்டும்.
வீரியமுள்ள களிமண்ணில் நான்கு அடி இடைவெளியில் நடவு செய்யுங்கள்.
நீர் பாசனமுறை
பழம் முளைக்கும் முன்பு வரை தினந்தோறும் தண்ணீரைப் பாய்ச்சுங்கள். பழம் தோன்ற ஆரம்பித்தவுடம் நிலம் காயும் தருவாய்க்கு வரும் போது மட்டும் தண்ணீர் பாய்ச்சுங்கள்
உரக்கலவை
தேவைப்படும் அளவுக்கு உரக்கலவையை 5:10:10 என்ற விகிதாச்சாரத்தில் பயன்படுத்த வேண்டும்.
Most Read : பாம்புகளைக் கொல்லாமல் உங்கள் வீடுகளிலிருந்து எளிமையாக அப்புறப்படுத்தும் வழிகள்

அறுவடை
சிறியதாக வளர்வதிலிருந்தே பழத்தை மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும். அப்படி கவனிக்காவிட்டால் பழத்தின் சதைப் பகுதி சுவையற்றதாக மாறிவிடும். ஒரு விரல் நகத்தின் அழுத்தத்தை தாங்குமளவுக்கு பழத்தின் வெளித்தோல் வளர்ந்தால் பழம் அறுவடைக்குத் தயாராகிவிட்டது என்று அர்த்தம் உடனடியாக பழத்தை அறுவடை செய்யலாம்.