Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
தீபாவளிக்கு உங்கள் சமையலறையை ஈஸியா சுத்தம் பண்றது எப்படினு தெரியுமா?
தீபாவளிக்கு முன்னரும் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும், தீபாவளிக்கு பின்னரும் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக சமையலறையை சுத்தம் செய்வது என்பது பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலையாகும்.
தீபாவளி வருவது குழந்தைகளுக்கு உற்சாகமாக இருந்தாலும் பெண்களை பொறுத்த வரையில் தீபாவளியை வெற்றிகரமாக கடத்துவது என்பது மிகப்பெரிய போராட்டமாகும். ஏனெனில் பெண்களுக்கு தீபாவளி முன்னரும் வேலைப்பளு அதிகமிருக்கும், தீபாவளிக்கு பின்னரும் வேலைப்பளு அதிகமிருக்கும். தீபாவளி கொண்டாட்டத்தில் முக்கிய இடம் வகிப்பது தீபாவளி பலகாரங்கள்தான்.

தீபாவளி பலகாரம் செய்வது முதல் பூஜை செய்வது வரை அனைத்தும் பெண்களின் தலையில் விழுந்து விடுகிறது. தீபாவளிக்கு முன்னரும் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும், தீபாவளிக்கு பின்னரும் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக சமையலறையை சுத்தம் செய்வது என்பது பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலையாகும். சமையலறையை எளிதாக முழுமையாக எப்படி சுத்தம் செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பூச்சி கட்டுப்பாடு
உங்கள் சமையலறையை சுத்தம் செய்வதை பூச்சிகளை விரட்டுவதில் இருந்து தொடங்கவும் ஏனெனில் இதுதான் இருப்பதிலேயே சவாலான ஒன்றாகும். கடைகளில் கிடைக்கும் பூச்சி மருந்துகள் நல்ல பலனை கொடுக்கவில்லையெனில் வேப்ப இலைகளை கொண்டு சமையலறையில் இருக்கும் பூச்சிகளை முழுமையாக விரட்டலாம்.

அலமாரிகளை சுத்தம் செய்தல்
நீங்கள் வெள்ளை வினிகர் மற்றும் சோப்பை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து உங்கள் வீட்டை சுத்தப்படுத்தலாம். இந்த கரைசலில் ஒரு சுத்தமான துணியை ஊறவைத்து, உங்கள் அலமாரிகளை ஒரு பக்கத்தில் இருந்து சுத்தம் செய்ய தொடங்குங்கள். மற்றொரு உலர்ந்த துணியைக் கொண்டு கறைகள் மற்றும் துருக்களை சுத்தம் செய்யவும்.

காலியிடத்தை உருவாக்குதல்
உங்கள் சமையலறையை சுத்தம் செய்வதற்கான முக்கிய பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். நீங்கள் இனி பயன்படுத்தாத எந்தவொரு பொருளையும் அகற்றவும். 3-4 மாதங்களுக்கும் மேலாக கிடந்த பொருட்கள் மற்றும் மசாலாக்களைத் தேடி குப்பைதொட்டியில் போட்டுவிடுங்கள்.

லேபிள்களைப் பயன்படுத்துதல்
உங்கள் சமயலறையில் மசாலா பொருட்களையும், பருப்புகளையும் அடையாளம் காண்பது எவ்வளவு கடினமானது என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? இதற்கு எளிய வழி அந்தந்த பொருட்களில் அதன் பெயரை எழுதி ஒட்டிவிடுவதுதான். இது தீபாவளியின் போது மட்டுமின்றி வருடம் முழுவதிற்கும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

பிரிட்ஜை சுத்தம் செய்தல்
எந்தவொரு தேவையற்ற பொருட்களையும் அகற்ற உங்கள் குளிர்சாதன பெட்டியை வாரந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். நன்றாக சுத்தம் செய்ய வினிகர் மற்றும் வெதுவெதுப்பான நீரைக் கலந்து வீட்டிலேயே கரைசலைத் தயாரிக்கலாம். இதன் பின்னர் இதில் அரை எலுமிச்சை பழத்தை நனைத்து உங்கள் பிரிட்ஜின் அசுத்தமான பகுதியில் தேய்த்தால் நிகழும் மாயத்தை நீங்களே பார்க்கலாம்.

இடத்தை திறம்பட பயன்படுத்துதல்
உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை திறம்பட அடுக்கி வைக்க உங்களின் கற்பனைத்திறனை பயன்படுத்தவும். கப் மற்றும் குவளைகளுக்கு நீங்கள் கொக்கிகள் மற்றும் ஹேங்கர்களைப் பயன்படுத்தலாம். மிகக் குறைந்த இடத்தைப் பயன்படுத்தும் போது அவை அழகாக இருக்கும். அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை மட்டும் உங்கள் சமையலறையில் வைக்கவும், எப்போதாவது பயன்படுத்தும் பொருட்களை அலமாரிகளில் வைக்கவும்.



Click it and Unblock the Notifications