Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
உருளைக்கிழங்கு மாதக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
உருளைக் கிழங்கை கெட்டுப்போகாமல் பாதுகாக்க மிக சிரமப்படுகிறீர்களா? அதற்காகவே இங்கே 5 எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உருளைக்கிழங்கை எப்படி நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பது என்று நீங்கள் கவலை பட்டதுண்டா? நீங்கள் சரியான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். உருளைக்கிழங்கு ஒரு அருமையான கிழங்கு. எந்த வகை உணவாக இருந்தாலும், வறுவல், போரியல், கறி, பிரியாணி, பிரட், இனிப்பு என்று எல்லா வகை உணவுகளிலும் உருளைக் கிழங்கை சேர்ப்பதால் அதன் சுவை நிச்சயமாக அதிகரிக்கும் என்பது உண்மை.

ஆனால் உருளைக்கிழங்கை வாங்கியவுடன் உட்கொள்வதால் மட்டுமே இதன் சுவை அதிகமாக இருக்கும். ஆனால் உண்மையில் மற்ற காய்கறிகளைப் போல் இதனையும் நீண்ட நாட்கள் வைத்திருந்து பயன்படுத்த முடியும்.

உருளைக்கிழங்கு
நல்ல தரமான உருளைக் கிழங்கு பல வாரங்கள் கெடாமல் இருக்கும். கடையில் அல்லது சந்தையில் இருந்து உருளைக்கிழங்கை வாங்கும்போது, நிறமாற்றம் இல்லாத, உறுதியான, சுருக்கம் எதுவும் இல்லாத உருளைக் கிழங்கை பார்த்து வாங்க வேண்டும். எந்த ஒரு வெட்டும் சேதமும் இல்லாத காயாக இருக்க வேண்டும். வீட்டில் வளர்க்கப்பட்ட உருளைக் கிழங்கையும் நல்ல முறையில் பாதுகாத்து வைக்க வேண்டும். அழுகிய உருளைக்கிழங்கு துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு மற்ற கிழங்கையும் அழுகச் செய்யும்.
உருளைக் கிழங்கை கெடாமல் பாதுகாக்க இங்கே சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உலர்ந்த இடம்
குளிர்ச்சியான, உலர்ந்த இடங்களில் உருளைக் கிழங்கை வைத்துக் கொள்ளுங்கள். காற்றோட்டம் மிகுந்த குளிர்ச்சியான இடத்தில் உருளைக்கிழங்கை வைப்பது முதல் படியாகும். அதிக வெளிச்சம் படும் இடங்களில் இதனை வைக்கக் கூடாது. அதிக வெளிச்சம் உள்ள இடங்களில் உருளைக் கிழங்கை வைப்பதால் அதன் தோல் பகுதியில் பச்சை நிறம் உண்டாகிறது. இதற்குக் காரணம் உருளைக்கிழங்கில் உள்ள சொலனின் என்னும் ரசாயனம் ஆகும். இது கசப்பு தன்மையை உண்டாக்குகிறது . இப்படி பச்சை நிறம் உண்டான கிழங்கை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல உடல் பாதிப்புகள் உண்டாகிறது.

மற்ற பொருள்கள்
சமையலறை உபகரணங்கள் சுற்றி உருளைக்கிழங்கு வைப்பதை தவிர்க்கவும். அதாவது சமையலறை சின்க் அல்லது சமையலறை உபகரணங்களை சுற்றி இருக்கும் இடங்களில் உருளைக்கிழங்கை வைப்பதால் அவை அழுகும் நிலை உண்டாகலாம். இந்த இடங்கில் அதிக வெப்பம் இருப்பதால் உருளைக்கிழங்கு அழுகலாம். அதே நேரம், உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைப்பதால் அதன் சுவை மாறி விடும். குளிர்சாதன பெட்டியின் அதிக பட்ச குளிர்ச்சி, உருளைக்கிழங்கின் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றம் செய்து விடுகிறது.

கழுவக்கூடாது
உருளைக்கிழங்கை சேமித்து வைப்பதற்கு முன் கழுவ வேண்டாம்:
உருளைக்கிழங்கை வாங்கியவுடன் கழுவி வைப்பதால் அவை அழுகும் நிலை உண்டாகலாம். அவற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக விரைந்து கெட்டு விடும்/ உருளைக்கிழங்கில் ஈரப்பதம் அதிகரிப்பதால் அதன் இருப்பு நாள் குறைகிறது. சமைக்கும் முன்பு உருளைக்கிழங்கை எடுத்துக் கழுவிக் கொள்ளலாம்.

அழுகிய கிழங்கு
அழுகிய உருளைக்கிழங்கை உடனடியாக வீசி விடுங்கள். முளை விடுதல், பச்சை நிறம் உண்டாதல், அழுகுதல் போன்றவை உருளைக்கிழங்கில் பொதுவாக ஏற்படக் கூடியவை ஆகும். அவை அழுகும் நிலையில் உள்ளனவா என்பதை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். ஏதேனும் ஒரு உருளைக் கிழங்கு அழுகி விட்டால் உடனடியாக அதனை குப்பையில் வீசி விடுங்கள். இல்லையேல் மற்றவையும் கெட்டு விடும்.

திறந்தவெளியில்
நறுக்கிய உருளைக்கிழங்கை திறந்தவெளியில் வைக்க வேண்டாம்: நறுக்கிய உருளைக்கிழங்கை திறந்த படி நீண்ட நேரம் வெளியில் வைக்க வேண்டாம். காற்றின் வெளிப்பாட்டால் அவை நிறம் மாறி பழுப்பு நிறமாக மாறக் கூடும். தோல் நீக்கிய அல்லது பாதி நறுக்கிய உருளைக்கிழங்கை பாதுகாப்பாக வைத்திட அவற்றை நீரில் போட்டு வைக்கவும். சமைக்கும் நேரத்தில் மட்டும் வெளியில் எடுக்கவும்.

உருளைக் கிழங்கை பயன்படுத்தி சில அற்புத உணவு வகைகள் ஹனி சில்லி பொடேடோ
இது ஒரு அற்புதமான ஸ்டார்டர் உணவாகும். விருந்துகளில் இந்த உணவை வைக்கலாம். பொரித்த உருளைக்கிழங்குடன் தேன் மற்றும் சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படும் ஒரு சிற்றுண்டி வகை. மிகவும் முறுகலாக வண்ணமயமாக இருக்கும் ஒரு சுவையான உணவு வகை இது.

ட்ரையாங்கில் பஃப்
உருளைக்கிழங்கு இல்லாத சமோசாவா? ஆம், இந்த ட்ரையாங்கில் பஃப் உங்கள் சமையலறையை மேலும் சிறப்பானதாக மாற்றும்.

ஸ்பைசி ஆலூ டிக்கி
ஆலூ டிக்கி ஒரு பிரபலமான வட இந்திய சிற்றுண்டி வகையாகும். பொதுவாக புளி மற்றும் கொத்துமல்லி சட்னியுடன் பரிமாறப்படும். தெருவோர சாட் கடைகளில் இதனைக் காணலாம். இந்த ரெசிபியை தயாரித்து இந்தன் சுவையை நீங்கள் உணரலாம்.

வீட்டில் தயாரிக்கப்பட்ட உருளை சிப்ஸ்
எல்லா விருந்திலும் எல்லோருக்கும் பிடித்தமான சிற்றுண்டியான உருளை சிப்ஸ் வெறும் நான்கு மூலப் பொருட்களால் தயாரிக்கலாம். மயோனிஸ் டிப் அல்லது சாஸ் சேர்த்து இதனை உங்கள் விருந்தினருக்கு பரிமாறலாம்.
உருளைக்கிழங்கை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கும் குறிப்புகளை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? இதனை பின்பற்றி சுவையான உருளைக்கிழங்கு உணவு வகைகளை தயாரித்து உண்டு மகிழுங்கள்.



Click it and Unblock the Notifications











