Just In
- 1 hr ago
இந்த ஈஸியான ரொமான்டிக் விஷயங்கள் உங்கள் காதல் வாழ்க்கையை சூப்பராக மாற்றுமாம்... என்ஜாய் பண்ணுங்க...!
- 1 hr ago
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர்
- 3 hrs ago
நீங்க பிறந்த கிழமையை சொல்லுங்க... உங்க குணம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- 4 hrs ago
திரவ டயட் உண்மையில் எடையை குறைக்க உதவுமா? அதை எப்படி செய்யணும் தெரியுமா?
Don't Miss
- News
வேகமாக வந்த ரயில்.. தண்டவாளத்தில் சிக்கிய குழந்தை..மின்னல் வேகத்தில் காப்பாற்றிய ஊழியருக்கு பாராட்டு
- Automobiles
கஷ்டப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசு... நடிகை சமந்தாவுக்கு எவ்வளவு பெரிய மனசு பார்த்தீங்களா?
- Movies
பிறந்தநாள் கொண்டாடல...ரசிகர்களிடம் சோகமாக சொன்ன ஸ்ரீதிவ்யா
- Sports
தோனி 7வது வீரராக களமிறங்க இதுதான் காரணம்.. விரைவில் அதிரடி உள்ளது.. உண்மையை உடைத்த சிஎஸ்கே நிர்வாகம்
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசாங்க வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Finance
தங்கம் விலை குறைந்தது.. நம்ம சென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை நிலவரம் என்ன..?!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வீட்டுத்தோட்டத்தில் புதினா வளர்ப்பு சாத்தியம் . நடவு, வளர்ச்சி, அறுவடை - மிக எளிமையான வழிமுறைகள்
புத்துணர்ச்சியான மற்றும் குளுமையான புதினாவை விதையிலிருந்து வளப்பது என்பது மிகவும் எளிமையானது. மேலும் புதினா மிக விரைவாக வளரும் தன்மையுடையது. வீட்டில் தோட்டம் வைத்து பராமரிப்பவர்கள் பெரும்பாலும் தொட்டிகளில் தான் புதினாவை வளர்த்து வருகிறார்கள். நறுமணமுள்ள தாவரங்கள் தொட்டிகளிலிருந்து எளிதாக வளரும் என்பதால் வீட்டுத் தோட்டம் வைக்க விரும்புவர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.
எல்லோருக்கும் தெரிந்த புதினாக்களில் இரண்டு வகை உள்ளது. ஒன்று ஸ்பியர் வகை புதினா, மற்றொன்று மிளகுக்கீரை இவை புதினா செடியின் தண்டு, நறுமண இலை, புத்துணர்ச்சியூட்டும் சுவை ஆகியவற்றால் வேறுபடுகிறது.
புதினா:
புதினா ஒரு பிரபலமான மூலிகையாகும். புதினா பசுமையாக அல்லது உலர்ந்த நிலையில் ஆகிய இருமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது. புதினா எண்ணெய் நறுமணத்திற்காக பற்பசை, கம், கேண்டி, மற்றும் அழகு சாதனப்பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.

புதினாவின் பயன்கள்
1. ரோஸ்மாரினிக் அமிலம் எனும் அழற்சியை எதிர்க்கும் அமிலத்தைக் கொண்டுள்ளதால் இயற்கையான முறையில் அலர்ஜி சம்மந்தமான தொல்லைகளுக்கு தீர்வு அளிக்கிறது.
2. தாய்மார்கள் பாலூட்டும் போது காம்புகளில் ஏற்படும் விரிசல்கள், வலிகளை மிளகுக் கீரைக் குணப்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
3. தேநீருடன் கலந்துக் குடிக்கும் போது தொண்டை வலியைக் குறைக்கிறது மேலும் சளித் தொல்லைகளிலிருந்து விலக்கு அளிக்கிறது.
4. அதுமட்டுமில்லாமல் அல்சர், வயிறு சம்மந்தமான அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் புதினா விடுதலை அளிக்கிறது.
Most Read: தானியங்கி / கேரேஜ் கதவுகள் அடிக்கடி பழுதாகிறதா? இது தான் காரணம்

3 அடி வளரும்
எளிதில் வற்றாத வகை தாவரமானதால் ஈரப்பதமுள்ள வடிகட்டிய மணலில் நன்கு வளரக்கூடியது. மேலும் புதினா செடிகள் 3 அடி நீளம் வரை வளரும்.
அமெரிக்கா முதலிடம்
உலகில் 70 சதவீதம் புதினா மற்றும் மிளகுக்கீரையை அமெரிக்கா விளைவிக்கிறது. விளைச்சலில் பாதி பகுதியை பபிள் கம்மின் நறுமணத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள்.

புதினா- பயிரிடுதல், வளர்ச்சி, அறுவடை
1.எல்லா வகையான புதினாக் விதைகளும் எளிதாக பரப்பபட்டு நன்கு வளரக்கூடியது.
2.புதினா நாற்றுகளை தேவையான தண்ணீர் விடப்பட்ட செழுமையான மண்ணில் நட வேண்டும்
3.கோடைகாலத்தில் அறுவடை செய்யவதாக இருந்தால் உலர்ந்த அல்லது புதிய நாற்றுகளை பயன்படுத்தவும்.
4.பூச்சிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக காலை நேரங்களில் தண்ணீர் விடுங்கள்.
5. ஆப்பிட்ஸ், முட்டைகோஸ் லூப்பர்கள், வண்டுகள், சிலந்திப்பூச்சிகள் புதினா செடிகளில் இருக்கின்றனவா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

சூரிய ஒளி - பகுதி சூரிய ஒளி நிழலில்
அறுவடை காலம் - விதை விதைத்த நாளிலிருந்து 75-90 நாட்கள்
உயரம் - 12 முதல் 24 இன்ச் வரை வளரும்.
உழவு நிலத் தயாரிப்பு
புதினா வளர்வதற்கு நீர் ஆதாரம் அதிகமாகத் தேவைப்படுகிறது. புதினா வளர்வதற்கு மண்ணோ, ஒளியையோ பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் புதினா வளர்வதற்கு நீர் என்பது மிகவும் முக்கியமானது. புதினாவுக்கான நிலத்தை தயார் செய்யும் போது ஏராளாமான கரிம உரங்களை இயற்கை உரங்களை அதிகமாக மண்ணில் செலுத்த வேண்டும். புதினா செடிகளை களை எடுக்கும் போது விலங்கு கழிவுகளால் தயாரிக்கப்பட்ட உரங்கள் சிரமத்தை ஏற்படுத்துவதால் விலங்கு கழிவு உரங்களை தவிர்க்க வேண்டும்.

எப்படி நடவு செய்ய வேண்டும்
வீட்டிற்குள் பயிர் செய்யப்படும் புதினா விதைகளை மண்ணின் மேற்பரப்பிற்கு சில அடியில் பயிரிட வேண்டும்.மாறாகத் தொட்டியில் பயிரிடுகிறோம் என்றால் குறைந்தது 10 இன்ச் தூரமாவது விதைகளை மண்ணில் புதைந்திருக்க வேண்டும். மண்ணிலிருந்து ஒரு பயிருக்கும் மற்றொரு பயிருக்கும் இடையில் எல்லாத் திசைகளிலும் ஒன்று முதல் இரண்டு அடி இடைவெளியை நிர்ணயிக்க வேண்டும். அதே சமயத்தில் பனிக்காலங்களில் புதினவை பயிர் செய்ய விரும்பினால் பனிக்காலம் தொடங்குவதற்கு நான்கில் இருந்து ஆறு வாரங்கள் முன் விதைகளை பயிரிட வேண்டும்.

அறுவடை மற்றும் சேமித்தல்
புதினா இலைகளை தொடர்ச்சியாக அறுவடை செய்யுங்கள். அதே சமயத்தில் புதினாக்களை அதிகாலையில் பனி படர்ந்திருக்கும் போது அறுவடை செய்வதென்பது மிகச் சிறந்த வழியாகும். புதினாவை உலரவைத்து அதன் அடிப்பகுதித் தண்டினை நறுக்க வேண்டும். இருண்ட நன்கு காற்றோட்டமான அறையில் குறைந்த பட்சம் இரண்டு வாரமாவது வைத்திருங்கள்.
Most Read:செரிமானமே ஆக மாட்டேங்குதா.. விரல்களாலே முத்திரைகள் செய்து தீர்வு காணலாம்

பூச்சி, நோய்த் தாக்குதல்:
பொதுவாக எல்லாத் தாவரங்களுக்கும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இருக்கும். அதே போல் புதினா பயிருக்கும் அஃபிட்ஸ், முட்டைக்கோஸ் லூப்பர்கள், வண்டுகள், சிலந்தி போன்ற பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். குறைந்த பட்ச பூச்சிக் கொல்லிகளுடன், இயற்கையான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். அதே மாதிரி பயிர்களும் பூஞ்சைத் தொற்றால் நோய்வாய்ப் படுகின்றன. பூஞ்சையால் பாதிக்கப்பட்ட இலைகளை கையால் கத்தரித்து இயற்கையான் பூஞ்சைக் கொல்லிகளை பயிரில் தெளிக்கவும்.