For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்?

|

ஒரு செடி என்பது இனிமையான சூழலை வழங்குகிறது. மேலும் ஒரு செடியைப் பார்ப்பதால் மனதிற்கு ஒரு அமைதி மற்றும் நிதானம் கிடைக்கிறது என்பதால் வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு சிறப்பு நிலை அதற்கு உள்ளது. மனித வாழ்க்கையில் செடிகளுக்கும் மரங்களுக்கும் இருக்கும் முக்கியத்துவத்தை விளக்கும் பல சாஸ்திரங்கள் நம்மிடையே உள்ளன.

ஒரு ஆரோக்கியமான செடி உடலளவிலும் மனதளவிலும் நமக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. நம் வீட்டின் தோட்டத்தை வடிவமைக்கும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை சிக்கல் இன்றி எளிமையாகவும் வளமுடனும் இருக்க சில வாஸ்து குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மரங்கள் இருக்க வேண்டிய இடங்கள்

மரங்கள் இருக்க வேண்டிய இடங்கள்

மரங்கள் மற்றும் தாவரங்களின் தோற்றம் மற்றும் குணங்களுக்கு ஏற்ற வகையில் அதன் இருப்பிடம் அமைய வேண்டும். மரம் மற்றும் தாவரங்களின் இருப்பிடம் பற்றி இப்போது அறிந்து கொள்ளலாம்.

வீட்டின் முன்புறம் இடம் இருந்தால் அந்த இடத்தில் ஒரு சிறு தோட்டம் வைக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். இல்லையேல் வீட்டின் பின்புறம் தோட்டம் வைக்க எண்ணுவார்கள். வீட்டில் இருக்க வேண்டிய புனிதமான மரங்கள் மற்றும் தாவரங்கள் பற்றியும், வீட்டின் வடிவமைப்பை பற்றியு பல வழிகாட்டுதல்கள் வாஸ்துவில் உள்ளன.

வாஸ்து என்பது ஒரு அறிவியல் என்பதால் ஒவ்வொரு வழிகாட்டுதலுக்கும் ஒரு அறிவியல் விளக்கமும் இருக்கும். ஒரு வாஸ்து நிபுணர் என, நான் இந்த வழிகாட்டுதல்களை பகுத்தறிவு மற்றும் விஞ்ஞானரீதியில் விளக்க முயற்சிக்கிறேன் , எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்ய வேண்டாம் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும்.

என்ன மரங்களை வளர்க்கலாம்?

என்ன மரங்களை வளர்க்கலாம்?

வாஸ்துவின் படி வீட்டில் இருக்க வேண்டிய சிறப்பான மரங்கள் பற்றியும் , அவற்றை வீட்டில் வளர்ப்பதால் வீட்டில் இருப்பவர்களுக்கு உண்டாகும் நன்மைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றியும் இப்போது நாம் அறிந்து கொள்ளலாம்.

அரச மரம்

அரச மரம்

இதனை அஸ்வத மரம் என்றும் அழைப்பார்கள். இந்த மரத்தின் இலைகளால் அதிக அளவில் ஆக்ஸிஜன் தயாரிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் கிளைகள் அடர்த்தியாக பசுமையாக இருப்பதால், கிளைகளின் கீழ் அதிக செறிவுள்ள ஆக்சிஜன் காணப்படுகின்றது, ஆகவே காலையில் இந்த அரச மரத்தைச் சுற்றி வருவது உடலுக்கு மிகவும் நன்மையைத் தருகிறது. இந்த மரத்தை வெட்டுவது தவறு. ஆனால் இந்த மரத்தின் வேர்கள் பறந்து விரிந்து கிடக்கும் என்பதால் கட்டிடடத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். ஆகவே வீட்டின் அருகில் இதனை வைக்க வேண்டாம்.

வேப்ப மரம்

வேப்ப மரம்

வேப்ப மரம் பல்வேறு மருத்துவ தன்மைகள் கொண்டது. இதன் சாறு சிறந்த பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. இதன் குச்சிகள் பல் துலக்கும் பிரஷ் போல் பயன்படுகிறது. வேப்பெண்ணெய் பிசியோதெரபி சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. வேப்ப இலை கசப்பு தன்மை உடையது. இந்த வேப்ப இலை, பிஞ்சு மாங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து ஒரு கலவை தயார் செய்து உகாதி பண்டிகை அல்லது வருட பிறப்பு அன்று தென்னிந்தியாவில் உட்கொள்கின்றனர். அதாவது ஒருவர் வாழ்வில், இனிப்பு, கசப்பு மற்றும் புளிப்பு போன்ற தன்மைகள் கொண்ட அனுபவங்கள் மாறி மாறி வரும் என்பதன் குறியீடாக இது பின்பற்றப்பட்டு வருகிறது.

வேம்பு என்று அழைக்கப்படும் இந்த ஆசாதிராட்சா இன்டிகா, இந்தியன் லிலாக், நிம்ட்ரீ என்றும் அழைக்கப்படுகிறது. இது மகோகனி குடும்பத்தை சேர்ந்ததாகும். திராட்சா மரபில் உருவாகும் இரண்டு இனங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் தாய்நாடு இந்திய துணைக்கண்டம் ஆகும். இந்தியா, நேபால், பாகிஸ்தான், பங்களதேஷ், ஸ்ரீலங்கா, மாலதீவுகள் போன்ற இடங்களில் இந்த மரம் பரவலாக காணப்படுகிறது.

மாமரம்

மாமரம்

மாமரத்தின் பெரும்பாலான பகுதிகள் மருத்துவ நன்மைகளைக் கொண்டவை ஆகும். இதன் இலைகள் பூச்சிக்கொல்லியாக பயன்படுகின்றன. இதன் குச்சிகள் பல் துலக்க பயன்படுகின்றன. இதன் இலைகளை பூஜைக்கும் பயன்படுத்தலாம். மாமரத்தின் கட்டைகளைப் பயன்படுத்தி இறந்தவரை தகனம் செய்வது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. அதன் பிறகு, மாம்பழம், "பழங்களின் ராஜா" என்று இதனைக் கூறுவது மிகையல்ல.

இதன் சுவை மிகுந்த சிறப்பு பெற்றது. மாங்காய், சமையலுக்கும் ஊறுகாய் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது. மாமரத்திகு நீடித்த ஆயுள் உள்ளது. 400-500 ஆண்டுகளுக்கு மேல் ஆயுட்காலம் கொண்ட ஒரு மரம் இந்த மாமரம். அதனால் இந்த மரம் நிச்சயம் உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கலாம்.

பலா மரம்

பலா மரம்

மாமரத்தைப் போலவே, பலா மரமும், சுவையான பழத்தைத் தரக் கூடிய ஒரு மரமாகும். ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் பலா மரங்களில் பலாப் பழம் மிக அதிக அளவில் காய்க்கும். பலாப்பழத்தில் உட்புறம் காணப்படும் பழுத்த பலாச் சுளைகள் பல்வேறு இனிப்புகள் மற்றும் ஹல்வா போன்றவற்றை தயாரிப்பதற்கு பயன்படும். பழுக்காமல் காயாக இருக்கும் பலாச் சுளைகளை நறுக்கி, சிப்ஸ் தயாரிக்கலாம். இது கேரளாவில் மிகவும் பிரபலம் வாய்ந்த ஒரு உணவுப்பொருள் ஆகும்.

பலாப்பழத்தின் கொட்டைகள் கூட பல ஊட்டச்சத்துகள் கொண்டவை. தென்னிந்தியாவில் இந்த கொட்டைகளை சமையலில் சேர்த்து பயன்படுத்துவார்கள். இந்த மரத்திலிருந்து அறுக்கப்படும் அழகான மஞ்சள் நிற கட்டைகள், தளபாடங்கள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகள் இகவும் புனிதமாக கருத்தப்பட்டு பூஜை பயன்படுத்தப்படுகின்றன. அதனால் இந்த பலா மரத்தையும் உங்கள் வீட்டு தோட்டத்தில் வளர்க்கலாம்.

வாழை மரம்

வாழை மரம்

இளம் வாழைக் கன்றுகளை வீட்டின் கதவு மற்றும் பந்தல்களில் விழாக்களின்போதும் பண்டிகைகளின் போதும் அலங்காரப் பொருளாக பயன்படுத்தலாம். இது செல்வம் மற்றும் வளத்தைக் குறிக்கும் ஒரு சின்னமாக போற்றப்படுகிறது. வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பொருளாதார ரீதியாவும், மருத்துவ ரீதியாவும் எதோ ஒரு விதத்தில் பயன்படுகிறது. மனித உடலின் உடனடி ஆற்றலுக்கு வாழைப்பழம் மிகவும் பலன் தருகிறது. இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.

வாழைக்காயை தென்னிந்திய சமையில் விரும்பி சேர்த்துக் கொள்வார்கள். இதனை வைத்து சூடான பஜ்ஜி என்னும் சிற்றுண்டியும் தயார் செய்யப்படும். வாழைப்பழத் தோல், சாயமிடலுக்கு பயன்படுகிறது. வாழை மரத்தின் வேர், தண்டு, பூ, மற்றும் இலைகள் கொண்டு தயாரிக்கப்படும் சாறு, பல்வேறு உடல் உபாதைகளுக்கு தீர்வாக உள்ளது. ஆகவே இந்த மரத்தை உங்கள் தோட்டத்தில் நிச்சயம் வளர்க்க வேண்டும்.

தென்னை மரம்

தென்னை மரம்

தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மிகவும் பயனுள்ளது. தென்னை மரத்தின் இளநீர், மிகவும் ஆரோக்கியமான குளிர்ச்சி அளிக்கும் குறைந்த கொழுப்பு பானமாகும். தேங்காயின் சதை பகுதியை தென்னிந்திய சமையலில் பயன்படுத்தி பல்வேறு வித்தியாசமான உணவுகளைத் தயாரிப்பார்கள். தேங்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சமையலுக்கு தலைமுடிக்கும் பயன்படுகிறது. தேங்காயின் நார், பாய், கார்பெட் போன்றவற்றின் தயாரிப்பில் பெருமளவில் பயன்படுகிறது.

தென்னை மரத்தின் இலைகளை நெய்து, ஏழை மக்கள் தங்கள் வீடுகளுக்கு கூரையாகவும் பயன்படுத்துகின்றனர். இதன் காய்ந்த இலைகள் எரியூட்டவும் பயன்படுகின்றன. இதன் பயன்பாடு காரணமாக இதனை ஒரு புனிதமான மரமாக கருதுகின்றனர். அதனால் இந்த மரத்தை உங்கள் வீட்டு தோட்டத்தில் கட்டாயம் வளர்க்கலாம்.

சந்தன மரம்

சந்தன மரம்

சந்தனமரத்தை பயன்படுத்தி விலையுயர்ந்த கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு விலையுர்ந்த மரமாக கருதப்படுகிறது. இதன் எண்ணெய் மிகவும் நறுமணம் கொண்டது. சந்தனத்தை நெற்றியில் இட்டுக் கொள்வதால், தலை குளிர்ச்சியடைகிறது. ஊதுபத்தி தயாரிப்புகளில் சந்தனம் பயன்படுகிறது.

சந்தன மரங்களைக் காண்பது மிகவும் அரிது. ஆகவே வீடுகளில் இந்த மரம் காணப்பட்டால், திருடர்கள் வந்து மதில் சுவர் ஏறிக் குதித்து இரவு நேரத்தில் மரத்தை வெட்டிக் கொண்டும் செல்லலாம். இந்த நறுமணத்தை நீங்கள் விரும்பினால் ஒரு சிறிய மரத்தை வளர்க்கலாம். அனால் அதனை கவனத்துடன் பாதுகாக்க வேண்டும்.

எந்த இடத்தில் தாவரங்களை வளர்க்க வேண்டும்?

எந்த இடத்தில் தாவரங்களை வளர்க்க வேண்டும்?

சிறிய புதர்கள் கிழக்கு அல்லது வடக்கு பக்கங்களில் நடப்படலாம், ஆனால் வடகிழக்கு மூலையில் எந்த மரங்களும் வளர்க்கக் கூடாது, அவை காலையில் பயனுள்ள சூரிய கதிர்களைத் தடுக்கின்றன.

உயர்ந்த மரங்களான தென்னை மரம் போன்றவற்றை தென்மேற்கு, மேற்கு போன்ற திசைகளில் வளர்க்கலாம். ஆனால் கட்டிடத்தின் மிக அருகாமையில் இவற்றை வளர்ப்பதால் சூரிய ஒளி தடுக்கப்படும். வீட்டின் மேல் மரத்தின் நிழல் படாதவாறு மரத்தை நட வேண்டும். குறைந்தபட்சம் காலை 9 மணிமுதல் மாலை 3 மணி வரை சூரிய ஒளி வீட்டில் பட வேண்டும்.

மரங்கள்

மரங்கள்

பெரிய மரங்களான அரச மரம், ஆல மரம் போன்றவற்றை வீட்டின் மிக அருகில் வளர்க்கக் கூடாது. அதன் வேர்கள் கட்டிடம் மற்றும் மதில் சுவர்களின் அடியில் பரவி கட்டிடத்திற்கு சேதத்தை உண்டாக்கலாம். மேலும், பெரிய மரங்கள் சூரிய ஒளியை உறிஞ்சிக் கொள்வதால் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் நேர்மறை ஆற்றல் கட்டிடத்தில் படாமல் போகலாம்.

தென்னை, வேம்பு, வெற்றிலை, சந்தனம், எலுமிச்சை, அன்னாசி, வில்வம், பாதாம், பலா, மாதுளை, மா, மநெல்லிக்காய், போன்ற மரங்கள் வீட்டின் தோட்டத்தில் வளர்க்க உகந்த மரங்களாகும்.

பூ பூக்கும் மரங்களை தோட்டத்தில் வைக்க வேண்டாம். இதற்குக் காரணம், அவை வெயில் கால்களில் இலைகளை உதிர்க்கும்.

பூச்சிகள், புழுக்கள், தேனீ, ஆந்தை, பாம்பு, போன்றவை கொண்ட மரங்களை தவிர்ப்பது நல்லது. எதாவது ஒரு காரணத்திற்காக ஒரு மரம் அமங்கலமானது என்று உணர்ந்து நீங்கள் அதனை அகற்ற நினைத்தால், அந்த மரத்தை வெட்டுவதற்கு ஒரு நாள் முன்னர், அந்த மரத்திடம் வருத்தம் தெரிவித்து பின்பு அதனை வேரோடு வெட்ட வேண்டூம். அடுத்த மூன்று மாதத்திற்குள் அந்த இடத்தில் புதிய மரத்தை நட வேண்டும். இதனால் இயற்கை பாதுகாக்கப்படும்.

துளசி

துளசி

துளசி, புனித துளசி என்று அழைக்கப்படும் ஒரு நறுமணம் வற்றாத தாவரமாகும். லமியாசியா என்னும் குடும்பத்தை சேர்த்தது துளசி செடி. வீட்டின் வளங்கள் கொழிக்க புனித துளைசியை வளர்ப்பது நல்லது. வீட்டின் வடக்கு, வடகிழக்கு, அல்லது கிழக்கு பகுதியில் துளசியை வளர்க்கலாம். அல்லது வீட்டின் முன்புறம் வளர்க்கலாம்.

ஆயுர்வேத மருந்துகளில் துளசி அதிக அளவில் பயன்படுகிறது. இரத்தத்தை சுத்தம் செய்கிறது. செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது. பல்வேறு நோய்களின் சிகிச்சைக்கும் குணப்படுத்துதலுக்கும் இதனை பயன்படுத்துகின்றனர். இந்த காரணங்களினால் துளசி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது . தினமும் இதனை வழிபடுவது நல்லது.

முள் செடிகள்

முள் செடிகள்

வீட்டின் அருகில் முள் கொண்ட செடிகளை வளர்க்கக் கூடாது. சப்பாத்திக் கள்ளி செடியை வளர்க்கக் கூடாது. ரோஜாவைத் தவிர மற்ற முட்செடிகள் எதிர்மறை ஆற்றலைக் கொண்டவை. எல்லா முட்செடிகளும் அழிக்கப்பட வேண்டியவை ஆகும். இந்த செடிகளுக்கு அருகில் செல்லும்போது இவற்றால் தீங்கு உண்டாகும் வாய்ப்பு அதிகம் உண்டு.

படரும் கொடிகள்

படரும் கொடிகள்

பலவீனமான தண்டுகள் கொண்ட செடிகளை நாம் கொடிகள் என்று கூறுவோம். இவை படர்ந்து வளர்வதற்கு குச்சி அல்லது கொம்பு போன்ற ஆதாரங்கள் தேவைப்படும். இந்த கொடிகள் வீட்டின் மதில் சுவர் அல்லது கட்டிடத்தின் மீது படர்வதால், சில காலங்களில் கட்டிடத்தின் சுவர்களில் சிறு விரிசல் உண்டாகலாம். அவை வளர வளர இந்த சேதங்கள் அதிகரித்து தண்ணீர் கசியும் வாய்ப்புகள் உண்டாகலாம்.

கொடிகள் தோட்டத்தில் மட்டுமே தகுந்த தனிப்பட்ட ஆதாரங்களுடன் வளர்க்கப்பட வேண்டும். மணி பிளான்ட் என்னும் செடியை வீட்டிற்குள் வளர்க்கலாம். ஆனால் மரத்தின் துணையுடன் அதனை வீட்டின் வெளியில் வளர்க்கக் கூடாது.

பூந்தொட்டிகள்

பூந்தொட்டிகள்

பூந்தொட்டிகளை மதில் சுவற்றின் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் வைக்கக் கூடாது. அப்படி வைப்பதால், காலையில் வரும் சூரிய ஒளி தடைபடும். ஆனால் தரையில் இந்த திசையில் இந்த பூந்தொட்டிகளை வளர்க்கலாம். ஆனால் அதன் உயரம் மூன்று அடிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.

புல்வெளி

புல்வெளி

கிழக்கு அல்லது வடக்கு திசையில் புல்வெளிகள் அமைக்கலாம். மூன்று அல்லது நான்கு அடி கொண்ட நீர் வீழ்ச்சிகள் அல்லது நீர் நிலைகள் கிழக்கு அல்லது வடக்கு திசையில் கட்டப்படலாம். வட கிழக்கு மூலையைத் தவிர்த்து மேலே கூறிய திசைகளில் இவற்றை நிர்மாணிக்கலாம்.

உங்கள் வீட்டு தோட்டத்தில் நீச்சல் குளம் அல்லது பெரிய தண்ணீர் தொட்டி ஏதும் இருந்தால், அதனை வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்கலாம். இதனால் இதனை பயன்படுத்தும் நபர்களுக்கு சூரிய கதிர்களின் நன்மைகளும் கிடைக்கும். நீச்சல் குளத்தில் உள்ள நீர் சூரிய ஒளி மற்றும் புற ஊதா கதிர்களால் தூய்மை அடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

vastu tips for plants and trees

Vastu have some suggestions you can implement in your life to make it easy and prosperous.
Story first published: Tuesday, August 14, 2018, 13:40 [IST]
Desktop Bottom Promotion