Latest Updates
-
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும்
மனதைக் கொள்ளை கொள்ளும் வீட்டுத் தோட்டங்கள்

சரியான பருவம்
தோட்டம் போட சரியான பருவம் கோடைகாலமோ, குளிர்காலமோ ஏற்றதல்ல, வசந்த காலத்தில் அதாவது பிப்ரவரி மாதத்தின் மத்தியில் தொடங்கி மார்ச் இறுதிக்குள் தோட்டம் அமைக்க ஏற்ற பருவமாகும்.
மண்ணின் தன்மை
தோட்டம் அமைப்பதற்கு முன்பு, அப்பகுதிக்குள் கால்நடைகளோ, கோழி போன்றவையோ வந்து விடாமல் தடுக்கும் வேலி அமைப்பது மிகவும் முக்கியம். மண்ணின் தன்மையை அறிந்து அதற்கேற்ப செடிகளை தேர்வு செய்து அமைக்கவேண்டும். களிமண் என்றால் தோட்டம் அமைக்க ஏற்றது. செடிகளுக்கு ஊற்றும் தண்ணீர் வேர் வரை ஊடுருவும். செடிகளை நடுவதற்கு முன்பு மக்கிய தொழு உரம் போட்டு மண்ணைக் கொத்திவிட்டு மண்ணை இளகச் செய்து வைத்திருங்கள்.
சூரிய ஒளி அவசியம்
தோட்டம் அமைக்கப்பட வேண்டிய இடம் சூரிய ஒளி படும் இடமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தோட்டத்தில் நேரடியாக சூரிய ஒளி படும் இடமாக பார்த்து, நிழல் எந்த அளவிற்கு விழும் என்பதை அறிந்தும் தாவரங்களை நடவு செய்யவேண்டும். அருகில் உள்ள நர்சரிகளுக்கு சென்று அங்குள்ள தரமான தாவரங்களை கண்டறிந்து அவர்கள் செடிகளை பராமரிக்கும் விதம் பற்றி தெரிந்து கொண்டு வரலாம். இது வீட்டுத் தோட்டம் அமைக்க உதவிகரமாக இருக்கும்.
கொடிகளுக்குப் பந்தல்
கொடி வகைகளை அதற்கான பந்தல் அமைத்து அதன் கீழே நடவு செய்யலாம். அல்லது முள் வேலி இருந்தால் அதன் மீது படரும் வகையில் கொடி வகைகளை நடவு செய்யலாம்.
தோட்டத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று வர போதுமான இடவெளி விட்டு செடிகளை நடுவது மிகவும் முக்கியம்.
செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். தண்ணீர் தேங்காமல் எளிதாக வடிந்து செல்லும் அளவிற்கு வடிகால் வசதியுள்ள தொட்டிகளை தேர்வு செய்யலாம்.
அழகை அதிகரிக்கும்
சீசன் செடிகளை சரியாக பராமரிக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை அதற்கேற்ப கவனித்து உரமிடுவது அவசியம். இறந்துபோன தாவரங்களை அவ்வப்போது அகற்றிவிடவேண்டும்.
செடிகளுக்கு இயற்கையான மட்கிய இலை, தழைகளால் தயாரிக்கப்பட்ட உரங்களை போடலாம். தோட்டத்தின் ஒரு பகுதியிலேயே ஒரு பள்ளத்தைத் தோண்டி அந்த மண்ணைக் கொண்டு பாத்திகள் செய்து கொள்ளவும். பள்ளத்தில் வீட்டின் மக்கும் குப்பைகளைக் கொட்டி மக்கச் செய்து அதையே தோட்டத்திற்குப் பயன்படுத்தவும் வேலை தோட்டத்தின் ஒரு பகுதியிலேயே குப்பையை மக்கச் செய்வது மண்ணை வளப்படுத்தவும் உதவும்.
மரங்கள் அழகூட்டும்
வீட்டின் காம்பவுண்டு சுவருக்கு அருகில் செம்பருத்தி, போகன்வில்லா செடிகளை வளர்ப்பது வீட்டின் அழகை அதிகரிக்கும். தோட்டத்தின் ஓரத்தில் மா மரம், நெல்லிக்காய் மரம் போன்றவை நட்டு வைத்தால் மற்றச் செடிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications