Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
பிளாஸ்டிக் பாட்டிலைக் கொண்டு வீட்டை அலங்கரிக்க சில டிப்ஸ்...
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால் உடலுக்கு கேடு விளையும் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அனைத்து வீடுகளிலும் பிளாஸ்டிக் பாட்டிலை உபயோகித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதை எப்போது புரிந்து கொண்டு அதன் உபயோகத்தை நிறுத்தப் போகிறோம் என்பது தெரியவில்லை. ஒருவேளை உங்கள் வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பாட்டிலை தூக்கி எறிய மனம் இல்லாவிட்டால், அந்த பிளாஸ்டிக் பாட்டிலைக் கொண்டு அருமையாக வீட்டை அலங்கரிக்கலாம்.
அது எப்படி என்று கேட்கிறீர்களா? இங்கு அந்த பிளாஸ்டிக் பாட்டிலைக் கொண்டு எப்படியெல்லாம் வீட்டை அலங்கரிக்கலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து பாருங்கள்.

பூ ஜாடி
வீட்டில் உள்ள டைனிங் டேபிள் வித்தியாசமாகவும், அதே சமயம் அழகாகவும் இருக்க, கடைகளில் பணம் செலவழித்து பூ ஜாடி வாங்கி வருவதற்கு பதிலாக, வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பாட்டிலைக் கொண்டு அருமையான பூ ஜாடி தயாரிக்கலாம். அதற்கு பிளாஸ்டிக் பாட்டிலை பாதியாக வெட்டி, பாட்டிலில் பிடித்த பெயிண்ட் அடித்தோ அல்லது பலவண்ண பேப்பர்களை ஒட்டியோ, பின் பாட்டிலினுள் தண்ணீர் ஊற்றி, அதனுள் பூக்களை வைத்தால், அழகான பூ ஜாடி ரெடி.

பேனா/பென்சில் ஸ்டாண்ட்
பிளாஸ்டிக் பாட்டிலைக் கொண்டு பேனா/பென்சில் ஸ்டாண்ட் செய்யலாம். அப்படி செய்து வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வைத்தால், பேனாவை ஒவ்வொரு முறையும் தேட தேவையில்லை. அதற்கு பிளாஸ்டிக் பாட்டிலின் மேல் பகுதியை வெட்டிவிட்டு, பின் அதனைச் சுற்றி பெயிண்டிங் செய்யப்பட்ட பேப்பர்/சார்ட் ஒட்டினால், பேனா/பென்சில் ஸ்டாண்ட் தயாராகிவிட்டது.

அணிகலன்களை வைக்கும் ஸ்டாண்ட்
பிளாஸ்டிக் பாட்டிலைக் கொண்டு அணிகலன்கள் வைக்கும் ஸ்டாண்ட் தயாரிக்கவும் செய்யலாம். அதற்கு 3 பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக் கொண்டு, அதன் அடிப்பகுதியை வெட்டி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பிடித்த நிறமுள்ள பெயிண்ட் அடித்து, முனைகளில் வெல்வெட் துணியை பெவிகால் கொண்டு ஒட்டினால், அணிகலன்கள் வைக்கும் ஸ்டாண்ட் ரெடி.

பூந்தொட்டி
வீட்டில் நிறைய பிளாஸ்டிக் பாட்டில் இருந்தால், அதனை பூந்தொட்டியாக பயன்படுத்தலாம். அதற்கு அந்த பிளாஸ்டிக் பாட்டிலை படுக்க வைத்து, அதன் நடுவே வட்டமாக வெட்டி, அதனுள் மண்ணை நிரப்பி, சிறு செடியை வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று 4-5 பாட்டிலை செய்து கொள்ள வேண்டும். பின் படத்தில் காட்டியவாறு, அதனை கயிற்றினால் கட்டி, வீட்டுச் சுவற்றில் தொங்க விட்டால், சூப்பராக இருக்கும்.

பிளாஸ்டிக் பாட்டில் திரைச்சீலைகள்
பிளாஸ்டிக் பாட்டிலைக் கொண்டு திரைச்சீலைகள் செய்து தொங்கவிட்டு கூட, வீட்டின் அழகை அதிகரிக்கலாம். அதற்கு பிளாஸ்டிக் பாட்டில்களை பிடித்த வடிவத்தில் வெட்டியோ அல்லது நிறைய பாட்டில்களின் அடிப்பகுதியை வெட்டியோ, பின் அதனை படித்தில் காட்டியவாறு அல்லது பிடித்த டிசைனில் கயிற்றினால் கோர்த்து, அதில் பிடித்த பெயிண்ட் அடித்து நன்கு உலர வைத்து, திரைச்சீலைகளாக தொங்க விடலாம். இது இன்னும் அருமையான தோற்றத்தைக் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications
