Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
குழந்தைகளுக்கு ஏற்றவாறு வீட்டை அலங்கரிக்க சில டிப்ஸ்...
நமது ஓவ்வொருவரின் கனவு நமக்கென்று ஒரு வீடு இருக்கவேண்டும் என்பதுதான். ஒரு சிலர்க்கு அது வெறும் கனவாகவே இருந்து வருகின்றது. ஆனால், இன்று பலபேர் அவர்கள் தகுதிக்கு ஏற்ப இல்லத்தை வாங்க முற்படுகின்றார்கள். அப்படி அரும்பாடு பட்டு வாங்கும் இல்லத்தை எவ்வாறு அலங்கரிக்கலாம் என்பதற்கு இன்று பல நிறுவனங்களே செயல்பட்டு வருகின்றது. அதுவும் புது இல்லத்தில் மரவேலைப்பாடுகள், பெய்ண்டிங், மற்றும் உட்புற அழகமைப்பு செய்வதற்கு இன்று பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். இவ்வாறு செதுக்கிக் கட்டும் இல்லமானது நமக்கு பெரும் சந்தோஷத்தையும் மனநிறைவையும் அளிக்கும்.
வீட்டை அலங்கரித்தல் அளவுகடந்த ஒன்றாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அந்த வீடு உங்களுடையது என்றால், வீட்டை அலங்கரிப்பது மிகவும் சந்தோஷம் தரக்கூடிய ஒன்றாகும். உங்கள் முழு திறமையையும் அதில் செலுத்தலாம். மேலும், உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், அந்த வீடு நட்பு கலந்த இடமாக மாறி உங்கள் குடும்பம் முழுவதும் சந்தோஷம் அடையக்கூடும்.
குழந்தைகளின் அறையை அலங்கரித்தல் என்பது கடின உழைப்பின்றி. வெறும் ஆக்கப்படைப்பையும் செயல் வடிவமைப்பையும் கொண்டு எளிதாக செய்யலாம். இருப்பினும், ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் தனது இல்லத்தை குழந்தைகளுக்கு ஏதுவாக இருக்கும்படி அலங்கரித்தல் என்பது கடினமான ஒன்றாகும்.
இப்பொழுதெல்லாம், பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஏதுவான சூழல் கொண்ட இல்லத்தை உருவாக்குவதற்கு பல விதமான செயல்முறைகளைச் செய்தும், தனித்திறனை உபயோகிக்கவும் ஆசைப்படுகிறார்கள்.
குழந்தைகளுக்கு ஏற்ப இல்லத்தை அலங்கரிக்கும் போது, பின்வரும் விஷயங்களில் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டும். இப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை அமைத்து தரும் வகையில், வீட்டை எப்படி அலங்கரிப்பது என்று பார்ப்போம்.

சுவர்கள்
குழந்தைகள் இருந்தால், அவர்களை ஈர்க்கும் வண்ணம் சுவர்கள் இருக்க வேண்டும். ஆகவே குழந்தைகளுக்கு ஏற்ப அறையை அலங்கரிக்க, சரியான வகைப் பெயிண்ட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். குழந்தைகளின் அறை எப்பொழுதுமே பளிச்சிடும் வண்ணத்தில் இருக்க வேண்டும். ஏனெனில், அவை குழந்தைகளை ஆற்றலுடனும், புத்துணர்ச்சியுடன் இருக்க பெரிதும் உதவும். மேலும், எளிதில் துடைக்கும் லேடெக்ஸ் பெயிண்ட்களை உபயோகித்தால், அழுக்கு கைகளை சுவற்றில் குழந்தைகள் தடவும் போது, எளிதில் அதனை துணி கொண்டு துடைத்துவிடலாம்.

நீடித்து உழைக்கக்கூடிய பர்னிச்சர்கள்
நல்ல திடமான பர்னிச்சர்களையே தேர்ந்தெடுங்கள். குறிப்பாக சாட்டின் துணியிலான விதானத்தை தேர்வு செய்யாதீர்கள். பாலிஸ்டர் வகைகளை உபயோகிப்பதால், அவற்றில் கரை படிந்தால் எளிதில் சோப்பு போட்டு துவைக்கலாம். உயரமான பர்னிச்சர் வாங்காதீர்கள். மேலும், குழந்தைகளுக்கு ஏதுவான பொருட்களையே வாங்குங்கள். மெத்தை வகையான பீன் பேக் மற்றும் பௌப்ஸ் போன்றவற்றை வாங்குங்கள்.

தகுந்த மெத்தை
குழந்தைகளின் படுக்கை அறையை அலங்கரிப்பதில் வசதியான மெத்தைகள் மிகப் பிரபலமான ஒன்றாகும். தேர்ந்து வடிவமைக்கப்பட்ட அடுக்குப்படுக்கை மற்றும் பரண்படுக்கை போன்றவை குழந்தைகளை மகிழ்விப்பது மட்டுமல்லாது, நிறைய இடத்தையும் சேமிக்கும். பரண்படுக்கையானது இடத்தை சேமிப்பது மட்டுமல்லாது, குழந்தைகளின் விளையாட்டு இடமாகவும், அவர்கள் விளையாடும் பொருட்களை வைக்கும் இடமாகவும், மீதம் இருக்கும் மெத்தைகளை வைப்பதற்கும் உதவும்.

தலையணைகள் மற்றும் போர்வைகள்
சிறு குழந்தைகள் இருந்தால் வீடானது பெரிதும் கறைப்படும். ஆகவே லேசான மற்றும் குழந்தைகளுக்கு ஏதுவான தலையணை மற்றும் போர்வைகளையே தேர்வு செய்யுங்கள். மணிகள் அல்லது பாசிகள் கூடிய வேலைபாடுகள் உள்ள போர்வைகள் மற்றும் தலையணைகளை வாங்க வேண்டாம். ஏனெனில், குழந்தைகள் எதை கையில் எடுத்தாலும், வாயில் போட்டுக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள்.

தரை
எளிதில் துடைக்கக்கூடிய சிறந்த தரையையே தேர்ந்தெடுங்கள். டைல்ஸ், மரம், லாமினேட் மற்றும் லினோலியம் போன்றவை சிறந்த தேர்வு. லாமினேட் வகை தரைகளில் தண்ணீர் அல்லது சாறு சிந்தினால், அவைகளை எளிதில் நீக்கலாம்.

கேபினெட் மற்றும் டிராக்கள்
அறை முழுவதும் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், பாடப்புத்தகங்கள், துணிமணிகள் வைப்பதற்கென்றே ஒதுக்குங்கள். அதற்கு தேவையான கேபினெட்களும், டிராக்களும் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்.

சித்திரங்களும், வரைபடங்களும்
குழந்தைகளை ஈர்க்க இந்த ஐடியாவை உபயோகியுங்கள். கார்ட்டூன் சித்திரங்களை சுவற்றில் மாட்டலாம் அல்லது குழந்தைகள் தீட்டிய வரைபடங்களை தொகுத்து எளிதில் மாற்றக்கூடிய ஆர்ட் கேலரியாக செய்து சுவற்றில் தொங்கவிடலாம்.
மேற்கூறிய ஐடியாக்களை பின்பற்றினால், இல்லமே குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த இல்லமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications