Latest Updates
-
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும் -
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி 2026-ன் இரண்டாம் பாதியில் இந்த நாடு பெரிய ஆபத்தில் சிக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
கடும் வெயில்ல வீடு ஜில்லுனு இருக்கணுமா? இந்த 5 வாஸ்து மாற்றங்களை செஞ்சா போதும், மின்சார கட்டணமும் குறையும்! -
நாவூறும் உருளைக்கிழங்கு பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியே தோத்துரும் -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தேங்காய் சட்னி அரைக்கும் போது ஒருவாட்டி மாங்காய் சேத்து இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நாலாபக்கமும் ஆபத்து சூழ்ந்திருக்குமாம் -
புதன் நட்சத்திர மாற்றத்தால் இன்னும் 2 நாட்களில் சிம்மம் உள்ளிட்ட 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
இந்த 4 தேதிகளில் பிறந்த பெண்கள் முதலாளியாக இருக்க பிறந்தவர்களாம் - இவங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்
கிறிஸ்துமஸ் பண்டிகையும்... படிக்கட்டு அலங்காரங்களும்...
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நீங்கள் அனைவரும் அதை கொண்டாடுவதற்காக தயாராக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்கள் குடும்பத்துடனும் மற்ற நண்பர்களுடனும் கொண்டாடும் தருணம் இது. ஆனால் நீங்கள் உங்கள் வீட்டை எப்படி அலங்காரம் செய்ய வேண்டும் என்று குழம்பிக் கொண்டு இருக்கின்றீர்களா?
பண்டிகைகளை வரவேற்பதில் அலங்காரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. வீட்டில் அலங்காரம் செய்யும் போது அது நமக்கு புத்துணர்வும் மகிழ்ச்சியும் கொடுக்கின்றது. வீட்டில் செய்யப்படும் அலங்காரங்கள் உங்களது தனித்துவத்தை காட்டும். அலங்காரங்களை எப்படி எல்லாம் செய்யலாம் என்று நீங்கள் ஒரு கணிப்பு வைத்திருப்பீர்கள். ஆனால் அதை வீட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தவும் உங்கள் படிக்கட்டுகளை அலங்கரிக்கவும் மிகவும் குழப்பமாக தான் இருக்கும்.
படிக்கட்டுகளை கிறிஸ்துமஸ் காலத்தில் அலங்கரிப்பது மிகவும் சுவாரஸ்யம் நிறைந்த செயலாக அமைகின்றது. இதை நாம் பல அழகிய வழிகளில் செய்ய முடியும். உங்கள் வீட்டு வெளிப்புற அலங்காரம், மர அலங்காரம் மற்றும் பிற இடங்களில் முடித்ததும் உங்கள் படிக்கட்டுகளில் அலங்காரம் செய்ய துவங்குங்கள். நீங்கள் செய்த எல்லா அலங்காரத்தையும் மிகைப்படுத்தி காட்டக்கூடிய வகையில் படிக்கட்டில் உள்ள அலங்காரம் அமையும். இவை உங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் புத்துணர்வை வெளிக் கொணரச் செய்யும். ஆகையால் இதை மிகவும் அழகாக அமைப்பது அவசியமானதாகும். உங்களது வேலையை சுலபமாக்க நாங்கள் உங்களுக்கு சில யோசனைகளை இங்கு கொடுத்துள்ளோம். இதை படித்து உங்கள் வீட்டில் செய்து மகிழுங்கள்.

1. சரியான தேர்வு
மரக்கட்டையாலான படியாக இருந்தாலும் சரி, இன்றைய காலத்திற்கேற்ப உருவாக்கப்பட்ட மென்மையான பிணைப்புகளை கொண்ட படிக்கட்டுகளாக இருந்தாலும் சரி கிறிஸ்துமஸ் வளையம் அல்லது கிறிஸ்துமஸ் மாலைகள் (Christmas Garlands) இல்லாமல் கிறிஸ்துமஸ் உணர்வைப் புகுத்த முடியாது. ஆகையால் இவற்றை நிச்சயம் பொருத்த வேண்டும். இவை அலங்காரத்திற்கு அழகூட்டுபவையாக இருக்கும். உங்கள் வீட்டு படிக்கட்டுகளின் அமைப்பைக் கொண்டு இதையெல்லாம் நாம் தேர்ந்தெடுத்து செய்ய முடியும். ஆனால் கண்டிப்பாக கிறிஸ்துமஸ் வளையத்தை தவறாமல் பயன்படுத்த வேண்டும். இது ஒரு சிறந்த அலங்கார பொருளாகும்.
2. ஒளி
கிறிஸ்துமஸ் வளையம் பொருத்திய பின் வண்ண ஒளி விளக்குகள் அதிசயங்களை உண்டாக்கும். கிறிஸ்துமஸ் காலத்தில் சிறிய வண்ண விளக்குகளை படிக்கட்டுகளின் கைப்பிடிகளில் பொருத்துங்கள். இவை உங்கள் படிக்கட்டுகளை அழகூட்டும். கிறிஸ்துமஸ் வளையத்திறகுள் பிணைக்கப்படும் விளக்குகள் கண்களுக்கு விருந்து படைப்பவையாக விளங்கும். இதை கண்டிப்பாக செய்து பாருங்கள்.
3. மேலும் அழகூட்ட
ஒரு வேளை நீங்கள் தனியாக இருக்கும் ஜோடியாக இருந்தால் காதலை தூண்டும் விளக்குகளை கிறிஸ்துமஸ் அலங்காரத்திற்கு பயன்படுத்துங்கள். உங்கள் உணர்வுகளை வெளிக்கொணரும் வண்ணங்களை இதற்காக பயன்படுத்தலாம். இவை செய்யப்பட்ட அலங்காரத்தை மிகைப்படுத்தி காட்டும். இன்றைய வாழ்க்கை முறையில் இவ்வாறு வித்தியாசமாக செய்வது தான் மென்மையான மற்றும் அழகான கண்ணோட்டத்தை உண்டாக்குகின்றன. பளபளப்பான ரிப்பன்களும், வெள்ளை நிற ஒளியும், பச்சை தோரணங்களும் உங்கள் படிக்கட்டுகளை அதிரடியாகவும் காதல் வயப்படுத்துபவையாகவும் மாற்றியமைக்கின்றன.
4. புதுமையாக செய்தல்
எப்போதும் பழைய முறைகளை கையாளும் நபராக நீங்கள் இருந்தால் தற்போது புதுமையான அலங்காரங்களை செய்யும் நேரம் வந்து விட்டது. இவை உங்களுக்கு சிறப்பாக அமையும். பொதுவாக மக்கள் இயற்கையான பூக்களை வாங்கி தங்கள் படிக்கட்டு கைப்பிடியில் பொருத்துவார்கள். இதை செய்யாமல் செயற்கையாக விற்கப்படும் பூக்களை வாங்கி பயன்படுத்துங்கள். பச்சை வளையங்களை பொதுவாக பழமையான நபர்களே பயன்படுத்துவார்கள். தற்போது இவை மெட்டாலிக், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு போன்ற வண்ணங்களில் கிடைக்கின்றன. இவை மிகவும் வித்தியாசமாகவும் இந்த காலத்திற்கேற்ப அலங்காரம் செய்ய விரும்பவர்களுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருக்கும். இவை உங்கள் படிக்கட்டுகளில் அற்புதம் செய்யும். இவையுடன் விட்டு விட்டு எரியும் சர விளக்குகளை பொருத்தினால் மிகவும் பிரம்மிப்பாக இருக்கும்.
3. ஆபரணங்கள் பயன்படுத்தலாம்
கிறிஸ்துமஸ் மரத்தை அலங்காரம் செய்த பின் மீதமுள்ள ஆபரணங்களை படிக்கட்டுகளில் பயன்படுத்தலாம். இவை மிகவும் வித்தியாசமாக இருக்கும். கிறிஸ்துமஸ் வளையம் அல்லது மாலையில் இந்த சிறிய ஆபரணங்களை தொங்க விடுங்கள். அவை பளபளப்பாக இருந்தால் நன்றாக இருக்கும். ஒரு வளையத்தில் 20 லிருந்து 30 ஆபரணங்கள் வரை தொங்க விடுங்கள். இப்பொழுது பாருங்கள் உங்களுடைய படிக்கட்டு எவ்வளவு அழகாய் இருக்கிறது என்று. கிறிஸ்துமஸ் வளையம் அதில் ஆபரணங்கள் மற்றும் விட்டு எரியும் சர விளக்குகளை படியில் போட்டு பாருங்கள் சூப்பராக இருக்கும். இவை உங்கள் மணதில் மேலும் மிகைப்படுத்தும் திட்டங்களை தூண்டியிருக்கும் என்று நினைக்கின்றேன். உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications