Latest Updates
-
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்! -
நாகர்கோயில் வாழைக்காய் துவட்டல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
September 2026 Career Horoscope: செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இந்தியாவில் பின்னோக்கி பாயும் ஒரேயொரு நதி எது தெரியுமா? இது பின்னோக்கி பாய காரணம் என்ன தெரியுமா? -
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்..
குளியலறை அழகா இருந்தா புத்துணர்ச்சி கிடைக்கும்!

காலாவதியான பொருட்கள்
குளியலறையில் காலவதியான ஷாம்பு பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள் இருந்தால் அதை தூக்கி குப்பையில் போடுங்கள். தேவையற்ற அல்லது உபயோகப்படுத்தாத பொருட்களை குளியலறையில் இருந்து அகற்றி விடுங்கள். இதனால் குளியலறை சுத்தமாகும். காலாவதியான அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களையும் அங்கிருந்து நீக்கிவிடுங்கள்.
குழந்தைகள் பத்திரம்
குளியலறையில் பயன்படுத்தப்படும் சிறு சிறு பொருட்களை கண்ணாடிக் டப்பாக்கள் அல்லது செரமிக் கிண்ணத்தில் வையுங்கள். கூடுதல் அழகு கிடைக்கும். சிறியவர்கள் உள்ள வீடு எனில் மூடப்பட்ட பிளாஸ்டிக் டப்பாக்களில் சோப்பு, ஷாம்பு இருக்கட்டும். அப்பொழுதுதான் அவை கீழே விழுந்தாலும் உடைந்து வீணாகாது. குளிக்கும் தண்ணீர் பட்டு சோப்பு, ஷாம்பு எதுவும் கரைந்து விடாமல் பத்திரமாக வைக்கவேண்டும்.
பாத்ரூம் சுத்தம் செய்யப்பயன்படுத்தும் ஆசிட், பினைல், சோப்புகளை தனியாக ரேக் அமைத்து அதில் வைக்கவும். இதனால் உடலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும், கிளீனிங் பொருட்களுக்கும் குழப்பம் ஏற்படாது.
குளியலறைக்கு வர்ணம்
குளியலறை சுவர்கள் பழையதாக இருந்தால் வர்ணம் பூசுங்கள். கூடுமானவரை, மிதமான நீலம், மிதமான பச்சை வர்ணம் பூசினால் கூடுதல் அழகும், குளியலறைக்குள் நுழையும்போதே ஒரு புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
குளியலறையில் துணிகளை தொங்கவிடும் ரேக்கினை வாங்கி அதில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பயன்படுத்திப் பொருத்துங்கள். குளியலறை டைல்ஸ் பதித்ததாக இருந்தால் நிறுத்தி வைக்கக்கூடிய ரேக்கினை வாங்கிப் பயன்படுத்துங்கள் சுவரில் பாதிப்பு ஏற்படாது.



Click it and Unblock the Notifications