For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த மாதிரியான கிச்சனை வீட்டுல வெக்க போறீங்க...

By Maha
|

பெண்களுக்கு வீட்டிலேயே மிகவும் பிடித்த இடம் என்றால் அது கிச்சன் தான். ஏனெனில் அவர்கள் தான் அங்கு நீண்ட நேரம் இருந்து, சாப்பிட உணவுகளை தயார் செய்கிறார்கள். ஆகவே வீட்டில் உள்ள எந்த அறை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு கிச்சன் மட்டும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் சமையலுக்குத் தேவையான பொருட்களை எந்த இடத்தில் வைத்தால், சுலபமாக இருக்கும் என்பதைப் பற்றியும் நிறைய ப்ளான் போடுவார்கள். அதிலும் அபார்ட்மெண்ட் செல்பவர்கள் போடும் ப்ளானிற்கு அளவே இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விண்டேஜ் சமையலறை

விண்டேஜ் சமையலறை

தோற்றம் மட்டுமே பழங்கால அமைப்பு கொண்டது ஆனால் இது ஒரு நவீன சமையலறை ஆகும். இது ஒரு பெரிய மாளிகை அல்லது வில்லா போன்ற வீடுகளுக்கு பொருத்தமாக இருக்கும். அலமாரிகள் டார்க் நிறத்தில் இருப்பதோடு, அதற்கு பயன்படுத்தபட்ட மரம் நல்ல தரமானதாகவும் இருக்கும். இந்த சமையலறையின் வடிவமைப்பு உயர் சீலிங் மற்றும் உயர் அலமாரிகள் கொண்டது. மேலும் இந்த சமயலறைக்கு கருப்பு நிற மைக்ரோ ஓவன் மிகுந்த அழகை சேர்க்கும்.

வருங்காலத்தில் சமையலறை

வருங்காலத்தில் சமையலறை

இந்த சமையலறையின் வடிவமைப்பு கிட்டத்தட்ட ஒரு ரோபோ சமையலறை போன்று காணப்படும். அடுத்து வரும் 10 ஆண்டுகளில் நவீன சமையலறையின் வடிவமைப்பு, இது போன்று தான் இருக்கும். இதன் சிறப்பான அம்சம் என்னவென்றால், எந்த ஒரு குறிப்பிட்ட நிறம் இல்லாமல், திரும்பி பார்க்கும் இடம் அனைத்தும் உலோகத்தால் பளிச்சிட அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சமையலறை அதன் தனிப்பட்ட ஒரு வித்தியாசமான டிசைனால் அனைவரையும் கவர்ந்துவிடும் தன்மையை கொண்டுள்ளது.

சிறிய குடும்பத்திற்கு ஏற்ற சமையலறை

சிறிய குடும்பத்திற்கு ஏற்ற சமையலறை

இந்த சமையலறையும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு நவீன சமையலறை வடிவமைப்புடையது. இந்த சமையலறையின் சிறப்பு என்னவென்றால் இது ஒரு சிறிய குடும்பத்திற்கு ஏற்றது. மேலும் இந்த சமையலறையில் பூ ஜாடிகள் மற்றும் அழகான மரத்திலான டைனிங் டேபிள் என்று அலங்கரிக்கப்பட்டு, குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒரு சிறந்த சமையலறையாக இருக்கும்.

சிவப்பு நிறத்தாலான சமயலறை

சிவப்பு நிறத்தாலான சமயலறை

வண்ணங்களில் சிறந்ததாக கருதப்படுவது சிவப்பு தான். இந்த சிவப்பு நிறத்தை அதிக நேரம் பார்க்க பசியும் அதிகமாகும். அதனால் தான் பல புகழ்பெற்ற ஹோட்டல்கள், தங்கள் லோகோ மற்றும் அலங்காரத்திற்கு சிவப்பு நிறத்தை பயன்படுத்துகின்றனர். மேலும் ஒரு சிறிய அறையில் அனைத்து அலமாரிகளும் பளபளப்பான சிவப்பு நிறத்தால் பெயிண்ட் செய்து, சரியான இடத்தில் பொருத்தப்பட்டு, மைக்ரோ ஓவனை சரியான இடத்தில் வைத்திருப்பது மிகவும் சுவாரசியமான விஷயம்.

கிளாசிக் மரத்தாலான சமையலறை

கிளாசிக் மரத்தாலான சமையலறை

இந்த சமையலறை அழகான உறுதியான கிளாசிக் மரத்தால் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அறையில் நவீன குளிர் சாதன பெட்டி, மைக்ரோவேவ், புகைபோக்கியுடன் எரிவாயு அடுப்பு போன்ற அனைத்து பொருட்களையும் உள்ளடக்கிய நவீன சமையல் அறையை போன்று முழு அளவில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த டிசைன் சமையலறையில் பளிங்கு பலகைகள் மற்றும் பளிங்கு டைனிங் டேபிள் சரியாக ரசனையுடன் பொருத்தப்பட்டிருப்பது சிறப்பம்சமாக உள்ளது. அதிலும் இது மிகவும் ஆடம்பரமாக இல்லாமல் ஒரு வசதியான நவீன சமையலறை வடிவமைப்பு கொண்டுள்ளது.

ஆகவே புது வீட்டிற்கு செல்லும் போது எந்த விதமான கிச்சன் வேண்டும் என்று, இங்கு குறிப்பிட்டுள்ள கிச்சனை படித்து தெரிந்து கொண்டு, அவ்வாறு உங்கள் புது வீட்டையும் அழகாக உங்களுக்கு பிடித்தாவாறு அமைத்து, சந்தோஷத்துடன் சமைத்து உண்ணுங்கள். இப்போது அந்த விதவிதமான கிச்சன் டிசைனை பார்த்து, உங்கள் கிச்சனை நீங்களே அலங்கரியுங்களேன்...

விண்டேஜ் சமையலறை

தோற்றம் மட்டுமே பழங்கால அமைப்பு கொண்டது ஆனால் இது ஒரு நவீன சமையலறை ஆகும். இது ஒரு பெரிய மாளிகை அல்லது வில்லா போன்ற வீடுகளுக்கு பொருத்தமாக இருக்கும். அலமாரிகள் டார்க் நிறத்தில் இருப்பதோடு, அதற்கு பயன்படுத்தபட்ட மரம் நல்ல தரமானதாகவும் இருக்கும். இந்த சமையலறையின் வடிவமைப்பு உயர் சீலிங் மற்றும் உயர் அலமாரிகள் கொண்டது. மேலும் இந்த சமயலறைக்கு கருப்பு நிற மைக்ரோ ஓவன் மிகுந்த அழகை சேர்க்கும்.

வருங்காலத்தில் சமையலறை

இந்த சமையலறையின் வடிவமைப்பு கிட்டத்தட்ட ஒரு ரோபோ சமையலறை போன்று காணப்படும். அடுத்து வரும் 10 ஆண்டுகளில் நவீன சமையலறையின் வடிவமைப்பு, இது போன்று தான் இருக்கும். இதன் சிறப்பான அம்சம் என்னவென்றால், எந்த ஒரு குறிப்பிட்ட நிறம் இல்லாமல், திரும்பி பார்க்கும் இடம் அனைத்தும் உலோகத்தால் பளிச்சிட அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சமையலறை அதன் தனிப்பட்ட ஒரு வித்தியாசமான டிசைனால் அனைவரையும் கவர்ந்துவிடும் தன்மையை கொண்டுள்ளது.

சிறிய குடும்பத்திற்கு ஏற்ற சமையலறை

இந்த சமையலறையும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு நவீன சமையலறை வடிவமைப்புடையது. இந்த சமையலறையின் சிறப்பு என்னவென்றால் இது ஒரு சிறிய குடும்பத்திற்கு ஏற்றது. மேலும் இந்த சமையலறையில் பூ ஜாடிகள் மற்றும் அழகான மரத்திலான டைனிங் டேபிள் என்று அலங்கரிக்கப்பட்டு, குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒரு சிறந்த சமையலறையாக இருக்கும்.

சிவப்பு நிறத்தாலான சமயலறை

வண்ணங்களில் சிறந்ததாக கருதப்படுவது சிவப்பு தான். இந்த சிவப்பு நிறத்தை அதிக நேரம் பார்க்க பசியும் அதிகமாகும். அதனால் தான் பல புகழ்பெற்ற ஹோட்டல்கள், தங்கள் லோகோ மற்றும் அலங்காரத்திற்கு சிவப்பு நிறத்தை பயன்படுத்துகின்றனர். மேலும் ஒரு சிறிய அறையில் அனைத்து அலமாரிகளும் பளபளப்பான சிவப்பு நிறத்தால் பெயிண்ட் செய்து, சரியான இடத்தில் பொருத்தப்பட்டு, மைக்ரோ ஓவனை சரியான இடத்தில் வைத்திருப்பது மிகவும் சுவாரசியமான விஷயம்.

கிளாசிக் மரத்தாலான சமையலறை

இந்த சமையலறை அழகான உறுதியான கிளாசிக் மரத்தால் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அறையில் நவீன குளிர் சாதன பெட்டி, மைக்ரோவேவ், புகைபோக்கியுடன் எரிவாயு அடுப்பு போன்ற அனைத்து பொருட்களையும் உள்ளடக்கிய நவீன சமையல் அறையை போன்று முழு அளவில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த டிசைன் சமையலறையில் பளிங்கு பலகைகள் மற்றும் பளிங்கு டைனிங் டேபிள் சரியாக ரசனையுடன் பொருத்தப்பட்டிருப்பது சிறப்பம்சமாக உள்ளது. அதிலும் இது மிகவும் ஆடம்பரமாக இல்லாமல் ஒரு வசதியான நவீன சமையலறை வடிவமைப்பு கொண்டுள்ளது.

ஆகவே மேற்கூறிய ஏதேனும் ஒரு சமையலறை டிசைனை உங்கள் வீடுகளில் அமைத்து, மகிழ்ச்சியாக சமைத்து சாப்பிடுங்கள். என்ன நண்பர்களே! உங்களுக்கு எந்த டிசைன் பிடிச்சிருக்கு?

English summary

Modern Kitchen Designs You Will Love | எந்த மாதிரியான கிச்சனை வீட்டுல வெக்க போறீங்க...

How you design your kitchen will make all the difference in house interiors. Kitchen is like the most scared place in the house because that is where you prepare your food. Our modern life requires certain changes in the concept of kitchen designs. you need things to be handy because there is hardly any time to waste. You also need it to be compact as we mostly live in apartments.
Desktop Bottom Promotion