Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க சில சூப்பர் டிப்ஸ்...
கிறிஸ்துமஸ் பண்டிகையன்று அனைத்து கிறித்துவர்களின் வீட்டிலும் இருக்கும் ஒரு ஸ்பெஷலான ஒன்று என்று சொன்னால், அது கிறிஸ்துமஸ் மரம் தான். மேலும் கிறிஸ்துமஸ் வரப்போகிறது என்று சொன்னாலே, அனைத்து கிறித்துவர்களும் தங்கள் வீடுகளை அலங்கரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதில் முக்கியமாக கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பார்கள். இது இந்த பண்டிகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆகவே இத்தகைய கிறிஸ்துமஸ் மரத்தை இயற்கையாக வளர்த்தோ அல்லது கடைகளில் வாங்கியோ அலங்கரிக்கலாம். ஆனால் தற்போது செயற்கை மரத்தை வீட்டின் உள்ளே வைத்து அலங்கரிப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். அதிலும் அந்த அலங்காரம் இப்படி தான் என்று குறிப்பிடும் வகையில் எதுவும் இல்லை. அந்த மரத்தை நமக்கு பிடித்தவாறு, எந்த பொருட்களை வைத்து வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம்.
இப்போது அந்த கிறிஸ்துமஸ் மரத்தை எப்படியெல்லாம், எந்த பொருட்களையெல்லாம் வைத்து அலங்கரித்தால் அழகாக இருக்கும் என்று பார்ப்போமா!!!

முத்து நூல்கள்
கிறிஸ்துமஸ் மரத்தைச் சுற்றி தங்க நிறத்தில் இருக்கும் முத்து போன்ற நூல்களால் அலங்கரிக்கலாம். இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

பரிசுகள்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷலே பரிசுகள் தான். அந்த பரிசுகளை வைத்தும் மரத்தை அலங்கரிக்கலாம். அதிலும் சின்ன சின்ன பரிசுகளை சிவப்பு நிற பேப்பரால் சுற்றி, மரத்தை சுற்றி ஆங்காங்கு கட்டினால் சூப்பராக இருக்கும்.

கிறிஸ்துமஸ் மணிகள்
மரத்தை அலங்கரிக்கும் போது கிறிஸ்மஸ் மணிகளை வைத்து அலங்கரிப்பது என்பது சூப்பரான ஐடியா. இதற்கு அந்த மணிகளை கடைகளிலிருந்து வாங்கி, செயற்கை இலைகளை மணிகளில் மேல் வைத்து, சிவப்பு நிற ரிப்பனால் கட்டி மரத்தில் தொங்கவிட்டால், அருமையாக இருக்கும்.

திரைச்சீலைகள்
இந்த வருடம் சற்று வித்தியாசமாக, சிவப்பு நிறத் துணியை எடுத்துக் கொண்டு, அதை இதயம், நட்சத்திரம் மற்றும் பந்து போன்று வெட்டி, அதில் சிறிது காட்டனை நுழைத்து, ஊசியால் தைத்து, அவற்றை மரத்தில் தொங்கவிட்டால், வித்தியாசமாக இருக்கும்.

தங்க நிற நட்சத்திரங்கள் மற்றும் பந்துகள்
நட்சத்திரங்கள் ஒரு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே வித்தியாசமான அளவுகளில் கோல்டன் நட்சத்திரங்களை, கோல்டன் பந்துகளுடன் சேர்த்து, மரத்தில் உள்ள கிளைகளில் முனையில் தொங்கவிடலாம்.

வண்ணமயமான பந்துகள்
எப்போதும் கோல்டன் நிறத்தை மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமா என்ன? இல்லை அல்லவா. ஆகவே சற்று மார்டனான மரமாக இருப்பதற்கு, பல வண்ணங்களில் இருக்கும் பந்துகளை வாங்கி, அலங்கரிக்கலாம்.

மலர்வளையம்
மலர்வளையம் கூட கிறிஸ்துமஸ் அன்று மிகவும் சிறப்பானது. எனவே பச்சை நிற இலைகளைக் கொண்டு, ஒரு மலர்வளையம் செய்து, அதில் சிவப்பு நிற ரிப்பனை கட்டி, வீட்டில் உள்ள கதவு, சுவர் மற்றும் மரத்தின் உச்சியில் வைக்கலாம்.

லைட்கள்
மரமானது நன்கு அழகாக ஜொலிப்பதற்கு, சின்ன சின்ன நீலம், சிவப்பு, தங்கம் மற்றும் இதர நிறங்களில் இருக்கும் கயிறு பல்புகளை வைத்து அலங்கரிப்பதால், கிறிஸ்துமஸ் மரம் மிகவும் அருமையாக காணப்படும்.
வேறு எவற்றையெல்லாம் வைத்து அலங்கரிக்கலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
