Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
Year-Ender 2024: இந்த ஆண்டில் பேரழிவை ஏற்படுத்தி தலைப்புச் செய்தியில் இடம் பெற்ற டாப் 5 கொடிய நோய்கள்!
Most Dangerous Diseases Of 2024: 2024 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் உள்ளோம். இன்னும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவிருக்கிறோம். இந்த நேரத்தில் புத்தாண்டைப் பற்றி மட்டும் யோசிக்காமல், இந்த ஆண்டில் நடந்த சம்பவங்கள் மற்றும் சுகாதார பிரச்சனைகளை பற்றியும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
கொரோனா பரவலுக்கு பின் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு குறிப்பிட்ட நோய்களின் தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. அதுவும் 2024 ஆம் ஆண்டில் உலகம் ஒருசில கொடிய நோய்களின் தாக்குதலால் மில்லியன் கணக்கான மக்களை இழந்தது. இது உலகளாவிய சுகாதார அமைப்புகளின் மீது அதிக அழுத்தத்தையும் ஏற்படுத்தியது. இப்போது 2024 ஆம் ஆண்டில் பேரழிவை ஏற்படுத்திய டாப் 5 கொடிய நோய்களைப் பற்றி காண்போம்.

1. நிபா வைரஸ்
2024 ஆம் ஆண்டில் கேரளாவில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. பழந்திண்ணி வௌவால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ், கொரோனாப் போன்றே ஒரு தொற்றுநோயாகும். இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவும்.
அறிகுறிகள்
நிபா வைரஸால் பாதிக்கப்பட்டால் காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டை வலி மற்றும் 3 முதல் 14 நாட்களுக்கு சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். தீவிரமான நிலையில் மூளை வீக்கம் அல்லது மூளை அழற்சி ஏற்படலாம்.
தடுப்பது எப்படி?
நிபா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வௌவால்கள் சுற்றுப்புறங்களில் இருந்தால், அப்பகுதியில் இருப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
2. டெங்கு
ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்க தான் செய்கிறது. ஆனால் 2024 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டுகளை விட அதிகளவிலான பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா பகுதிகளில் நிறைய பேர் டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டனர். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2024-ல் டெங்கு காய்ச்சலால் மட்டும் சுமார் 3000 பேர் உயிரிழந்துள்ளனர்.
அறிகுறிகள்:
அதிக காய்ச்சல், கடுமையான முன் தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி, மூக்கு மற்றும் ஈறுகளில் இரத்தக்கசிவு, சரும வெடிப்பு, தூக்கம் போன்றவை.
தடுப்பது எப்படி?
டெங்குவை தடுக்க வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தூங்கும் போது கொசு வலைகளை கட்டி தூங்க வேண்டும். கொசுக்கள் கடிக்காமல் தடுக்கும் மருந்துகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும்.
3. குரங்கு அம்மை நோய்
2024 ஆம் ஆண்டில் பரவிய மற்றொரு கொடிய நோய் தான் குரங்கு அம்மை நோய். இது ஆப்பிரிக்காவில் தொடங்கி, காங்கோ, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பரவி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2024 ஜூன் மாத நிலவரப்படி, உலகம் முழுவதும் 97,281 குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டனர் மற்றும் சுமார் 208 பேர் உயிரிழந்துள்ளனர். குரங்கு அம்மை நோய் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது.
அறிகுறிகள்
குரங்கு அம்மை நோயின் பொதுவான அறிகுறிகள் என்றால் 2-4 வாரங்கள் வரை கடுமையான அரிப்புக்களை சந்திக்க நேரிடும். அதோடு காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, பலவீனம், நிணநீர் கணுக்களில் வீக்கம் போன்ற அறிகுறிகளும் தெரியக்கூடும்.
4. ஜிகா வைரஸ்
2024 ஆம் ஆண்டில் ஜிகா வைரஸ் தொற்றானது இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்டது. இந்த ஜிகா வைரஸும் ஏடிஸ் வகை கொசுக்கள் கடிப்பதால் பரவக்கூடியது. இந்த ஜிகா வைரஸ் தொற்றாலும் நிறைய பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அறிகுறிகள்
ஜிகா வைரஸின் அறிகுறிகள் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைப் போன்றே இருக்கும். அதில் காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, சிவந்த கண்கள், கடுமையான சரும அரிப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
தடுப்படி எப்படி?
ஜிகா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவக்கூடியது என்பதால், கொசுக்கள் கடிக்காமல் முழு கை மற்றும் கால் ஆடைகளை அணிந்து, கொசு விரட்டி மருந்துகளை வீட்டில் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக வீட்டை சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
5. கோவிட்-19 XBB மாறுபாடு
என்ன தான் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டாலும், அந்த வைரஸ் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் உருமாற்றமடைந்து மக்களிடையே பரவி தான் வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் கோவிட்-19-ன் XBB மாறுபாடு உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த மாறுபாடு ஆரம்பத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளின் செயல்திறனை குறைத்தது மட்டுமின்றி, பலரது உயிரையும் பறித்தது. முக்கியமாக இந்த மாறுபாடு குழந்தைகளிடையேயும், வயதானவர்களையும் அதிகமாக பாதித்தது.
அறிகுறிகள்:
கோவிட்-19 XBB மாறுபாட்டின் அறிகுறிகளாவன இருமல், வயிற்றுப்போக்கு, சோர்வு, தலைவலி, காய்ச்சல் மற்றும் குளிர், சுவை மற்றும் வாசனை இழப்பு , தசைவலி ஆகியவையாகும்.
தடுப்பது எப்படி?
கோவிட்-19-ன் எந்த வகையான மாறுபாடாக இருந்தாலும், முகமூடி அணிந்து, கைகளை சுத்தமாக வைத்துக் கொண்டு, கூட்டமான பகுதிகளுக்கு செல்லாமல், சமூக இடைவெளியை மேற்கொண்டு வந்தாலே, அதன் பரவலைத் தடுக்கலாம்.
முடிவு
2024 ஆம் ஆண்டில் சந்தித்த சுகாதார பிரச்சனைகளைப் பார்க்கும் போது, ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், முதலில் நாம் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பகுதி சுத்தமாக இருக்க வேண்டும், சுகாதார பழக்கங்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதாகும். எனவே இனிவரும் காலத்திலும் அவற்றை பின்பற்றி நம்மை நாம் காத்துக் கொள்வோம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications