Latest Updates
-
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா?
பக்கவாதம் ஏற்பட்ட பிறகு ஏன் பார்வை பிரச்சனை ஏற்படுகிறது தெரியுமா?
Vision Problem After Stroke In Tamil: பக்கவாதம் என்பது மூளையின் பல்வேறு பகுதிகளை பாதிக்கும் ஒரு நோயாகும். இந்த பக்கவாதத்தால் உடல் செயலற்று போதல், பார்வை மாற்றங்கள் உட்பட பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. பக்கவாதத்தால் ஒரு நபருக்கு பார்வை பிரச்சினை கூட ஏற்படுகிறது. மூளையின் ஒரு பகுதிக்கு இரத்த விநியோகம் தடைபடுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.
இப்படி இரத்த விநியோகம் குறைவதால் மூளை திசுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பெறுவது தடுக்கப்படுகிறது. இந்த அடைப்பால் மூளையின் பகுதி பாதிக்கப்படுகிறது. சரி வாங்க பக்கவாதம் ஏற்பட்ட பிறகு உங்கள் கண்கள் எந்த விதத்தில் பாதிப்படைகிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

பக்கவாதத்தால் ஏற்படும் முக்கிய அறிகுறிகள்:
* ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை பிரச்சினைகள் ஏற்படுதல்
* தலைவலி உண்டாதல்
* குழப்பம் ஏற்படுதல்
* பேசுவதில் சிரமம் உண்டாதல்
* பக்க வாதத்தால் உடலின் ஒரு பக்கத்தில் முகம், கை மற்றும் கால் பகுதி நகர்த்த இயலாமல் போதல்.
பக்கவாதத்திற்கு பிறகு பார்வை பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
பக்கவாதத்திற்கு பிறகு ஏன் பார்வை பிரச்சினை ஏற்படுகிறது?
மூளையில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட பாதிப்பு காரணமாக பக்கவாதத்திற்கு பிறகு பார்வைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால் மூளை செல்கள் விரைவில் ஆக்ஸிஜன் இல்லாமல் இறக்கின்றன. மூளைக்கு இரத்தம் செல்வது தடைபட்டு இத்தகைய பாதிப்பு உண்டாகிறது.
பக்கவாதம் கண்பார்வை காட்சியை உண்டாக்கும் ஆஸ்பிடல் லோபை சேதப்படுத்துகிறது. இதனால் பார்வை சமநிலை பிரச்சினை, பொருட்களை பார்ப்பதில் பிரச்சினை, கண் அசைவுகளை கையாளுவதில் பிரச்சினை, மூளைத்தண்டு பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
அதே மாதிரி பக்கவாதத்திற்கு முன்பு ஒரு நபருக்கு பார்வைக் குறைபாடு இருந்தால் அந்த பார்வைக் குறைபாடு பிறகு மோசமடையலாம். இது உங்கள் பார்வைக் குறைபாட்டை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 2019ஆம் ஆண்டு ஆராய்ச்சி படி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 60% பேருக்கு பார்வைக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பக்கவாதத்திற்கு பிறகு ஏற்படும் பார்வைக் குறைபாடு பிரச்சினைகள்:
காட்சி புல இழப்பு
காட்சி புலம் என்பது ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் தன் கண்களைச் செலுத்துவதன் மூலம் அனைத்து பொருட்களையும் பார்க்க முடியும். இதன் மூலம் நேராகவும், சுற்றியுள்ள எல்லாப் பொருட்களையும் நாம் பார்க்க முடியும். ஆனால் பக்கவாதத்தால் ஒவ்வொரு கண்ணிலும் ஒரு பக்கத்தில் காட்சிப் புல இழப்பு ஏற்படலாம்.
ஒரு நபர் இடது அல்லது வலது பக்கத்தில் மட்டுமே பார்க்க முடியும். சில சமயங்களில் பார்வை புல இழப்பு குருட்டுப் புள்ளி அல்லது ஸ்கோடோமாவை ஒன்று அல்லது இரண்டு கண்களையும் பாதிக்கிறது. இந்த பாதிப்பு காட்சி புலத்தின் மையத்திலும் ஏற்படுகிறது. சிலருக்கு இந்த பார்வை புல இழப்பானது கண்களின் மேல் அல்லது கீழ் பகுதியில் ஏற்படலாம். இது அவரின் புறப் பார்வையை பாதிக்க வாய்ப்புள்ளது.
காட்சி புறக்கணிப்பு
பக்கவாதத்தால் நம் கண்களில் காட்சி செயலாக்கம் தடைபடுகிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் காட்சி புறக்கணிப்பை சந்திக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விஷயங்களை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அதே மாதிரி அவர்கள் பதிலளிக்கவும் மாட்டார்கள். காட்சி புறக்கணிப்பு உங்கள் சிகிச்சையை கடினமாக்க வாய்ப்பு உள்ளது.
அக்னோசியா
அக்னோசியா என்பது பக்கவாதம் காரணமாக ஏற்படும் அரிதான நரம்பியல் கோளாறு ஆகும். இந்த நரம்பியல் கோளாறு மூளையின் சேதமடைந்த பகுதியில் இருந்து காட்சி நினைவுகளை மீட்டெடுக்க முடியாமல் செல்கிறது. இதனால் இந்த நபர்கள் தினசரி மற்றும் பழக்கமான காட்சிகளை நிர்வகிப்பதில் சிக்கல்களை சந்திக்கின்றனர்.
கண் இயக்க பிரச்சினைகள்
பக்கவாதம் ஒரு நபர் உடல் கண் அசைவுகளில் சிக்கல்களை உண்டாக்குகிறது. பக்கவாதம் கண் தசைகளை பாதித்தால் கண் இயக்கத்தையோ அல்லது காட்சிப் புலத்தையோ கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் கண்கள் ஒரு அச்சில் அல்லது ஒரு வட்டத்தில் முன்னும் பின்னுமாக நகரலாம். சில நபர்களுக்கு குறிப்பிட்ட திசையில் கண்களை நகர்த்துவதில் சிரமம் இருக்கலாம்.
மங்கலான பார்வை உண்டாதல்
பக்கவாதம் நரம்புக் கட்டுப்பாட்டை பாதித்து மங்கலான பார்வை அல்லது இரட்டைப் பார்வை (டிப்ளோபியாவை) உண்டாக்குகிறது.
மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?
பக்கவாதத்திற்கு பிறகு உங்கள் கண் பார்வையில் பெரிய மாற்றங்கள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். கண் மற்றும் மூளை பிரச்சினைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களில் நியூரோ-ஆப்டோமெட்ரிஸ்டுகள் மற்றும் நரம்பியல் கண் மருத்துவர்களை உடனே சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











