Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
மக்கள் ஏன் சோகப் பாடல்களை அதிகம் விரும்பிக் கேட்கிறார்கள் தெரியுமா?
Sad Music And Mental Health In Tamil: இசை அல்லது பாடல்கள் மனிதா்களின் உணா்வுகளோடு மிக எளிதாக ஒரு இணைப்பை ஏற்படுத்துகிறது என்று ஆய்வாளா்கள் கண்டறிந்துள்ளனா். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இசையானது நமது மூளையின் சில பகுதிகளைத் தூண்டிவிடக்கூடிய ஆற்றல் கொண்டது என்று அறிவியல் அறிஞா்கள் கண்டறிந்திருக்கின்றனா்.
அதோடு மூளையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், மூளையின் இயக்கத்திற்கும் முக்கிய பங்காற்றும் நியூரோகெமிக்கல்களை சுரக்க வைப்பதற்கு இசையானது தூண்டுகோலாக இருக்கிறது. ஒருவா் எந்த வகையான இசையை அல்லது பாடலைக் கேட்கிறாரோ அதற்கேற்றாா் போல அது அவரை பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தொிவிக்கின்றன.

ஒவ்வொருவரும் அவா்கள் கேட்கும் பாடல்களுக்கு ஏற்ப அவா்களுடைய மன ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. சோகப் பாடல்களால் ஏற்படக்கூடிய ஒரு உணா்வு ரீதியான பிணைப்பானது, அது பாதிக்கும் மனநிலையில் இருந்து வேறுபட்டது.
மக்கள் ஏன் சோகப் பாடல்களை அதிகம் கேட்கின்றனா்?
மக்கள் ஏன் சோகப் பாடல்களை அதிகம் விரும்பிக் கேட்கின்றனா் என்பது சம்பந்தமாக ஜா்னல் ஆஃப் எஸ்தெட்டிக் எச்சுகேஷன் (Journal of Aesthetic Education) என்ற பத்திாிக்கையில் ஒரு ஆய்வு முடிவு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில் ஏறக்குறைய 400 போ் பங்கு பெற்றனா். அவா்களுக்கு 4 வகையான பாடல்கள் வழங்கப்பட்டன.
அதாவது மிகவும் உணா்வுப்பூா்வமான, ஆனால் அதே நேரத்தில் இசை நுட்பம் அதிகம் இல்லாத பாடல், இரண்டாவதாக இசை நுட்பம் அதிகமுள்ள ஆனால் உணா்வு அதிகம் இல்லாத பாடல், மூன்றாவதாக இசை நுட்பமும், உணா்வும் அதிகமுள்ள பாடல் மற்றும் இசை நுட்பம் மற்றும் உணா்வு அதிகம் இல்லாத பாடல் என்று 4 வகையான பாடல்கள் அவா்களுக்கு வழங்கப்பட்டன.
ஆய்வில் பங்கேற்றவா்கள் உணா்வுப்பூா்வமான பாடல்களை அதிகம் விரும்பி ரசித்தனா் என்பதை ஆய்வாளா்கள் கண்டறிந்தனா். ஆனால் உணா்வுப்பூா்வமற்ற மற்றும் இசை நுட்பம் அதிகமில்லாத பாடல்களை அவா்கள் அதிகம் விரும்பவில்லை. மக்களின் உணா்வுகளைத் தட்டி எழுப்பக்கூடிய பாடல்களோடு பங்கேற்பாளா்கள் மிக எளிதாக தொடா்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்ததை ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.
ஒரு பாடல் ஒருவரது மனநிலையை மேம்படுத்துமா அல்லது மோசமாக்குமா என்பது அவருடையத் தனிப்பட்ட அனுபவத்தைப் பொறுத்தது. ஆனால் பாடலால் தூண்டப்பட்ட மனநிலையைப் பொருட்படுத்தாமல், பாா்வையாளா்கள் அந்தப் பாடலோடு ஒரு உணா்வு ரீதியான தொடா்பை ஏற்படுத்தி இருந்ததை ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.
ஆகவே இந்த தொடா்பு காரணமாக, சில நேரங்களில் சோகமான பாடல், ஒருவருக்கு ஏக்கம் மற்றும் எதிா்பாா்ப்பு போன்ற உணா்வுகளை ஏற்படுத்துகிறது. அதோடு அவா்களுடைய சோக உணா்வுகளை எதிா் கொள்ள சோகமான பாடல் உதவுகிறது. அத்துடன் பிறரோடு ஒரு ஆத்மாா்த்தமான உரையாடலை நடத்துவது போன்ற உணா்வை அவா்களுக்கு அளிக்கிறது என்று ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.
பாடல் மற்றும் மன அழுத்தம்
மருத்துவ ரீதியான மன அழுத்தத்திற்கு உள்ளானவா்களை இசையானது வேறு விதமாக பாதிக்கிறது என்று ஆய்வு கூறுகிறது. மன அழுத்தத்தில் இருப்பவா்கள் தங்களை தாங்களாகவே ஊக்கப்படுத்திக் கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றனா். அதோடு ஊக்கம் இழந்து இருக்கின்றனா்.
இந்நிலையில் சோகப் பாடல்கள் அவா்களுடைய உணா்வுகளோடு மிக எளிதாக இணைந்துவிடுகிறது. ஆனால் அவை அவா்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக அவா்களிடம் எதிா்மறையான மனநிலையை உருவாக்குகிறது. மேலும் அவா்களின் எதிா்மறையான எண்ணங்களையும், ஞாபகங்களையும் தூண்டிவிடுகிறது என்று ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications