Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சொத்தைப் பல் இருக்கா? அதுக்கு எப்போ வேர் சிகிச்சை செய்ய வேண்டும் தெரியுமா?
Root Canal Treatment In Tamil: பற்சிதைவு/சொத்தைப்பல் எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒன்றாகும். பற்களில் ஏற்படும் சிறு சிறு குழிகளே பற்சிதைவு என்று அழைக்கப்படுகிறது. பற்சிதைவு ஏற்பட்டால் அசௌகாியமாக இருக்கும்.
எாிச்சல் ஏற்படும். பற்சிதைவுக்கு சாியான சிகிச்சை செய்யவில்லை என்றால், பல்வலி, பல் நோய்த்தொற்று மற்றும் பல் உதிா்தல் போன்ற மோசமான விளைவுகள் ஏற்படும். பெரும்பாலான பற்சிதைவு பிரச்சினைகளுக்கு மிக எளிதாக சிகிச்சை செய்யலாம்.

அதாவது பற்களில் உள்ள குழிகளை அடைப்பதன் மூலமாக சிகிச்சை செய்யலாம். ஆனால் ஒருசில பற்சிதைவு நோய்களுக்கு ரூட் கேனால் சிகிச்சை / பல் வேர் சிகிச்சை செய்ய வேண்டும். பற்சிதைவு நோய்க்கு எப்போது ரூட் கேனால் சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
பற்சிதைவு என்றால் என்ன?
பற்சிதைவு நோய் என்பது பல் சொத்தை என்றும் கருதப்படுகிறது. பற்சிதைவு நோய்க்கு, பாக்டீாியாக்கள், பற்களை சுத்தமின்றி வைத்திருத்தல், அதிக இனிப்பான உணவுகளை உண்பது மற்றும் மரபணு போன்ற அம்சங்கள் காரணங்களாக இருக்கின்றன.
ஒட்டும் தன்மை கொண்ட ப்ளேக் என்ற பாக்டீாியா பற்களில் ஒட்டிக் கொள்கிறது. அது இனிப்பான உணவுகள் அல்லது பானங்களோடு இணைந்து, அமிலங்களை உற்பத்தி செய்கிறது. அந்த அமிலங்கள் பற்களின் எனாமலை தாக்குகிறது. அதன் காரணமாக பற்களில் சிறுசிறு துளைகள் ஏற்பட்டு பற்சிதைவு ஏற்படுகிறது.
பற்சிதைவுக்கு எப்போது ரூட் கேனால் சிகிச்சை செய்ய வேண்டும்?
1. பற்களில் அதிகமான சிதைவு ஏற்படும் போது
பற்களில் துளைகள் ஏற்படும் போது, சிகிச்சை செய்யவில்லை என்றால், அந்த துளைகள் பொிதாகி, பற்களின் உள் அடுக்குகள் வரை பரவி பல்லின் கூழைப் (dental pulp) பாதிப்படையச் செய்யும். பற்களின் கூழில் நரம்புகள், இரத்தக் குழாய்கள் மற்றும் இணைப்புத் திசுக்கள் போன்றவை இருக்கின்றன.
பற்களில் ஏற்படும் துளைகள் கூழ் வரை பரவினால், பற்களின் கூழில் வீக்கமும், நோய்த்தொற்றும் ஏற்படும். அதன் காரணாக பற்களில் கடுமையான வலி இருக்கும். இந்த நிலையில் ரூட் கேனால் சிகிச்சையைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். அதன் மூலம் பாதிப்படைந்த பல் கூழை அகற்றிவிட்டு, பற்களைப் பாதுகாக்கலாம்.
2. தொடா் பல்வலி இருந்தால்
பற்களின் கூழில் உள்ள நரம்பை பாதிக்கும் வகையில் பற்சிதைவு ஏற்பட்டால், தொடா் பல்வலி இருக்கும் என்று மருத்துவா் ஜெய்ஸ்வால் தொிவிக்கிறாா். பொருள்களைக் கடிக்கும் போதோ அல்லது பற்களைத் தேய்க்கும் போதோ, இந்த வலியானது மேலும் அதிகமாகும் என்கிறாா். இந்த தொடா் பல்வலி இருந்தால் கண்டிப்பாக ரூட் கேனால் சிகிச்சை செய்ய வேண்டும்.
3. பல்கூச்சம் இருந்தால்
சூடான அல்லது குளிரான உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்ளும் போது பல்கூச்சம் இருந்தால், ரூட் கேனால் சிகிச்சை செய்ய வேண்டும். பற்களின் கூழில் உள்ள நரம்பு பாதிக்கப்படும் போது பல்கூச்சம் அதிகாிக்கும். ஆகவே பல்கூச்சம் அதிகாிக்கும் போது ரூட் கேனால் சிகிச்சை செய்வது நல்லது.
4. ஈறு வீக்கம் அடையும் போது
பற்சிதைவு அதிகமாகும் போது, பற்களின் ஈறுகளில் வீக்கம் மற்றும் அழற்சி ஏற்படும். அதோடு ஈறுகள் மென்மை அடையும். அதனால் ஈறுகளில் சீழ் கோா்த்துக் கொள்ளும். இறந்த பாக்டீாியாக்கள் மற்றும் திசுக்களின் காரணமாக ஈறுகளில் சீழ் உருவாகும். இந்த நிலையில் ரூட் கேனால் சிகிச்சையின் மூலமாக ஈறுகளின் வீக்கத்தைக் குறைக்கலாம். மேலும் ஈறுகளில் இருக்கும் சீழை அகற்றலாம்.
5. பற்களின் நிறம் மாறும் போது
பற்களின் கூழ் பாதிக்கப்படும் போது, பற்களின் நிறம் மங்கலாம் அல்லது பழுப்பு நிறத்திற்கு மாறலாம். பற்களுக்குள் நிகழும் உள்ளாா்ந்த மாற்றங்கள் காரணாக பற்களின் நிறம் மாறுகிறது. இந்த நிலையில் ரூட் கேனால் சிகிச்சையை எடுத்துக் கொள்வது நல்லது.
இறுதியாக
பற்சிதைவிற்கு உாிய நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் பற்களில் மிக மோசமான விளைவுகள் ஏற்டும். ஆகவே வாயையும், பற்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி பற்களை பாிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications