Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வருதா? அப்ப இந்த பிரச்சினைகளில் ஒன்னு உங்களுக்கு இருக்கலாமாம்... ஜாக்கிரதை!
கொட்டாவி என்பது சோர்வு அல்லது சலிப்பின் பொதுவான அறிகுறியாகும். கொட்டாவி சில ஹார்மோன்களுடன் தொடர்புடையது, அவை இதயத் துடிப்பு மற்றும் விழிப்புணர்வை உடனடியாக அதிகரிக்கின்றன.
எனவே சோர்வாக அல்லது சலிப்படையும்போது கொட்டாவி விடுவது என்பது உங்களை விழிப்புடன் வைத்திருக்க உங்கள் உடலின் முயற்சியாகும், ஆனால் இது சில நொடிகள் மட்டுமே. பெரும்பாலான நேரங்களில், கொட்டாவி விடுவது சாதாரணமானது.

இந்த எளிய உடல் எதிர்வினை சில உடல்நலப் பிரச்சினைகளைக் குறிக்கலாம். நீங்கள் அடிக்கடி கொட்டாவி விடுகிறீர்கள் மற்றும் வழக்கத்தை விட வித்தியாசமாக உணர்ந்தால் அதில் கவனம் செலுத்துங்கள். அதிகப்படியான கொட்டாவிக்கு பின்னால் உள்ள முக்கிய பிரச்சினைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல் அல்லது தூக்கமின்மை
அதிகப்படியான கொட்டாவிக்கு பின்னால் உள்ள பொதுவான காரணிகளில் தூக்கமின்மையும் ஒன்றாகும். இருப்பினும், தூக்கத்தில் மூச்சுத்திணறல் அல்லது தூக்கமின்மை போன்ற எந்தவொரு அடிப்படை பிரச்சினைக் காரணமாகவும் இந்த பற்றாக்குறை ஏற்படலாம்.
தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்பது ஒரு தீவிரமான தூக்கக் கோளாறு ஆகும், இதில் சுவாசம் மீண்டும் மீண்டும் நின்று தொடங்குகிறது. நீங்கள் சத்தமாக குறட்டைவிட்டு, ஒரு முழு இரவு தூக்கத்திற்குப் பிறகும் சோர்வாக உணர்ந்தால், உங்களுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது.
தூக்கமின்மையால், நீங்கள் தூங்குவது அல்லது நல்ல தரமான தூக்கம் பெறுவது போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். நீங்கள் நன்றாக தூங்குவதற்கு நேரமும் சரியான சூழலும் இருந்தால் கூட இது நடக்கும்.
சில மருந்துகள்
நீங்கள் எடுத்துக்கொள்ளும் குறிப்பிட்ட மருந்துகளால் அதிகப்படியான கொட்டாவி ஏற்படலாம். சில ஆன்டிசைகோடிக்ஸ் அல்லது ஆண்டிடிரஸன்ட்கள் பக்கவிளைவாக அதிகப்படியான கொட்டாவியை ஏற்படுத்தலாம்.
மருந்துச் சீட்டு இல்லாமல் அத்தகைய மருந்துகளை நீங்கள் உட்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் மற்றும் உங்களுக்கு அதிக கொட்டாவி ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.
மூளைக்கோளாறு
அதிகமாக கொட்டாவி விடுவது மூளைக் கோளாறைக் குறிக்கலாம். பார்கின்சன் நோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ் மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற நிலைகள் அதிகப்படியான கொட்டாவியை ஏற்படுத்தும்.
பதட்டம் அல்லது மனஅழுத்தம்
அதிக கொட்டாவி வருவது கவலை அல்லது மன அழுத்தத்தின் காரணமாக இருக்கலாம், அப்படியானால் கொட்டாவி விடுவது பதற்றத்தை சமாளிக்கும் ஒரு வழியாக இருக்கலாம் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மாரடைப்பு
மாரடைப்பு ஏற்படும் போது, உடலைச் சுற்றியுள்ள ஆக்ஸிஜன் விநியோகம் பாதிக்கப்பட்டால், அதிகப்படியான கொட்டாவி ஏற்படலாம். இருப்பினும், இது மாரடைப்புக்கான முக்கிய அறிகுறி அல்ல, எனவே நீங்கள் பதட்டமடைய வேண்டாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
