Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும்
உங்களின் இந்த அலட்சியமான செயல்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்க இதயத்தில் பாதிப்பை உண்டாக்குமாம்...!
மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அனைத்து உறுப்புகளையும் ஒன்றிணைக்கும் புள்ளியாக இதயம் உள்ளது. உடலின் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அது இதயத்தின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால்தான் மனித இதயம் எளிதில் பல பாதிப்புகளுக்கு ஆளாகிறது.
நாம் மற்ற உறுப்புகளின் மீது காட்டும் அலட்சியம் மறைமுகமாக இதயத்தைப் பாதிக்கிறது. இளைஞர்கள் அதிகம் இதய நோயால் பாதிக்கப்பட இந்த அலட்சியம்தான் காரணம். இதயம் பல காரணிகளால் சேதமடைகிறது, அவற்றில் சில அவை முற்றிலும் வாழ்க்கை முறை சார்ந்தவை.

எந்த எச்சரிக்கை அறிகுறியும் இல்லாமல் படிப்படியாக இதயத்தை பலவீனப்படுத்தும் சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக எடையுடன் இருப்பது
நீங்கள் வழக்கத்தை விட கொஞ்சம் எடை அதிகரிப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் சுமக்கும் அதிக எடை உங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். தொப்பை பகுதியில் அதிக எடையுடன் இருப்பது இதயத்திற்கு ஒரு தீவிர ஆபத்து காரணியாகும். அதிக எடையுடன் இருப்பது, குறிப்பாக வயிற்றைச் சுற்றி இருப்பது, இதயத்தை சிரமப்படுத்துகிறது மற்றும் நீரிழிவு நோய் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், உங்கள் ஆரம்ப எடையில் 5% முதல் 10% வரை குறைப்பது உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
உடற்பயிற்சி இல்லாமை
உடற்பயிற்சிகள் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் மிகவும் முக்கியமானவை. உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, தற்போதைய உலகளாவிய மதிப்பீடுகள் நான்கு பெரியவர்களில் ஒருவர் மற்றும் 81% இளம் பருவத்தினர் போதுமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை. மேலும் மாரடைப்பு, இரத்த அழுத்தம் போன்ற தொற்றாத நோய்களின் எண்ணிக்கை 2020 மற்றும் 2030 க்கு இடையில் எவ்வாறு அதிகரிக்கக்கூடும் என்பதையும் அறிக்கை காட்டுகிறது. உடல் செயல்பாடுகள் இன்றி இருப்பதால் தமனிகளில் கொழுப்பு உருவாகிறது, இது இரத்த ஓட்டத்தை சீர்குலைத்து மாரடைப்புக்கு வழிவகுக்கிறது.
கல்லீரலைப் பாதுக்காமல் இருப்பது
கல்லீரல் இதய ஆரோக்கியத்துடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் ஆய்வின்படி, மதுவால் ஏற்படாத கல்லீரல் பாதிப்பு கல்லீரலில் அசாதாரண கொழுப்பு படிவது இதய செயலிழப்பு அபாயத்தை பெரிதும் அதிகரிக்கக்கூடும். மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் வயதானவர்கள், ஆண்கள் அல்லது நீரிழிவு நோய் அல்லது கரோனரி இதய நோய் உள்ளவர்கள் இதய செயலிழப்புக்கு அதிக ஆபத்தில் உள்ளனர்.
மது மற்றும் புகையிலைப் பொருட்களின் அதிக பயன்பாடு
ஆல்கஹால் மற்றும் புகையிலையின் அதிகப்படியான நுகர்வு ஆரோக்கிய வாழ்க்கை முறையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு நாளைக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிளாஸ் மதுபானம் மற்றும் அதிக சிகரெட் புகைத்தல் இதய ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் இது இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற ஆபத்துகளையும் ஏற்படுத்துகிறது.
அதிக உப்பு உட்கொள்வது
நீங்கள் சமைக்கும் போது குறைந்த உப்பைப் பயன்படுத்தினாலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மூலம் நீங்கள் உட்கொள்ளும் மறைமுகமான உப்பு உட்கொள்ளல் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் 5 கிராமுக்கு மேல் உப்பை உட்கொள்ள வேண்டாம் என்று WHO பரிந்துரைக்கிறது, இது உலகில் சராசரியாக மக்கள் உட்கொள்வதில் பாதியாகும். நாம் உட்கொள்ளும் பெரும்பாலான உப்பு பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து வருகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது, மேலும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உப்பை உட்கொள்வதைக் குறைக்குமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

