Latest Updates
-
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்..
உண்மையிலேயே கேப்டன் விஜயகாந்த்துக்கு என்ன ஆச்சு? இப்ப எந்த நிலைமையில இருக்காரு-ன்னு தெரியுமா?
What Happened To Vijayakanth: தமிழ் திரையுலகில் 1980-களில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் தான் விஜயகாந்த். இவர் ஒரு நடிகர் மட்டுமின்றி, அரசியல்வாதியும் கூட. இவர் மிகவும் கஷ்டப்பட்டு திரையுலகில் நுழைந்து, தனக்கென ஒரு பெயரை சம்பாதித்தவர். இவரை கேப்டன் என்றும் செல்லமாக அழைப்பார்கள்.
1991 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த 100 ஆவது படமான கேப்டன் பிரபாகரன் என்னும் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதன் பின் இவர் கேப்டன் என்ற செல்லப்பெயரைப் பெற்றார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மக்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்கும் வகையில் இருக்கும்.

இப்படி அநீதியை தட்டிக் கேட்டும் எண்ணம் கொண்டதாலோ என்னவோ, மக்களுக்கு சேவை செய்ய 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார்.
அதன் பின் தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை இருந்தார். ஆனால் இவருக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்ததால், ஒரு கட்டத்தில் இவர் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கத் தொடங்கினார். சர்க்கரை நோய் இவரது ஆரோக்கியத்தை மோசமாக்கியது.
உடல்நலக் குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அதிகம் வெளியே வராமல் இருந்தார். இந்நிலையில் நவம்பர் 18 ஆம் தேதி விஜயகாந்த் அவர்கள் காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். அவருக்கு நுரையீரலில் பிரச்சனை இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேலும் இரு தினங்களுக்கு முன் மியாட் மருத்துவமனை விஜயகாந்த்தின் ஆரோக்கியம் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில் 'விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்த போதிலும் அவரது உடல் நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை வெளிவந்ததும் விஜயகாந்த்தின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள், இவர் விரைவில் குணமாக வேண்டுமென்று பிராத்தனை செய்து வருகிறார்கள். மேலும் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாகவும், டிரக்கியாஸ்டமி சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
ஆனால் இதுக்குறித்து மருத்துவமனை எதையும் கூறவில்லை. எனவே பலருக்கும் விஜயகாந்த் அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து வேளச்சேரியில் கிளினிக் வைத்துள்ள நுரையீரல் நிபுணரான டாக்டர் சபரிநாத் ரவிசந்திரன் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, பொதுவாக ஒரு வைரஸ் உடலினுள் மூக்கு அல்லது வாய் வழியாக நுழைந்து தொண்டையை அடையும். அப்படி தொண்டையை வைரஸ் அடைந்துவிட்டால், தொண்டை கரகரப்பு ஏற்படும். இந்நிலையில் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுப்பது, சுடுநீரைக் குடிப்பது, உப்பு நீரால் வாயைக் கொப்பளிப்பது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வந்தால், 3-4 நாட்களில் குணமாகிவிடும்.
ஆனால் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு தொண்டையை அடையும் வைரஸ் அப்படியே இறங்கி மூச்சுக்குழாயை அடைந்துவிடும். அங்கு அந்த வைரஸ் பெருக்கமடைந்து வளரத் தொடங்கி, சளியை அதிகரித்து, நிமோனியாவாக மாறும். அப்படி மாறும் போது தான் சுவாசிப்பதில் பிரச்சனையை சந்திக்க நேரிகிறது. இந்த நிமோனியா பெரும்பாலும் குழந்தைகள், வயதானவர்கள், மதுப் பழக்கம், புகைப்பழக்கம், சர்க்கரை நோய், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியை கொண்டவர்களைத் தாக்கும்.
இதில் விஜயகாந்த் அவர்களை எடுத்துக் கொண்டால், காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அவருக்கு போதவில்லை. அவரது நுரையீரலில் சளி அதிகம் இருப்பதால், இன்னும் அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று மூக்கில் டியூப் போன்று வைப்பது, அடுத்து ஆக்ஸிஜன் மாஸ்க்/பேக்குடன் கூடிய மாஸ்க் அணிவது, மூன்றாவது டிரக்கியாஸ்டமி.
பொதுவாக நோயாளியின் ஆக்ஸிஜன் தேவைக்கேற்ப சிகிச்சைகள் வழங்கப்படும். இதில் விஜயகாந்த் அவர்களுக்கு மியாட் மருத்துவமனை கூறியுள்ள அழுத்தப்பட்ட ஆக்ஸிஜன் என்பது மூன்றாவது நிலையாகும். அதாவது டிரக்கியாஸ்டமி சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
டிரக்கியாஸ்டமி என்பது தொண்டையில் உள்ள நுரையீரலுடன் தொடர்புடைய குழாயில் துளையிட்டு இயந்திரத்தை இணைப்பது. இம்மாதிரியான சிகிச்சையை மேற்கொள்ளும் நோயாளிகள் பலர் மீட்டு வந்துள்ளனர். ஆனால், நீண்ட நாள் எடுக்கும் என்று டாக்டர் சபரிநாத் கூறியுள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













