Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த 5 யோகாசனங்கள் குளிர்காலத்தில் ஏற்படும் உடல் வலியைத் தடுக்குமாம்.. ட்ரை பண்ணி பாருங்க..
குளிர்காலத்தில் ஏற்படும் உடல் வலி மற்றும் விறைப்பை தடுக்க உதவும் சில யோகாசனங்களைக் காண்போம். இந்த யோகாசனங்களை தினமும் காலையில் செய்து வந்தால், குளிர்காலத்திலும் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.
குளிர்காலம் வந்தாலே உடல் எப்போதும் ஒருவித வலியுடன் இருக்கும். குளிர்காலத்தில் உடலில் வலிகள் மற்றும் விறைப்புகள் ஏற்படுவது மிகவும் பொதுவானவை. ஏனெனில் குளிர்காலம் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதோடு, சூரிய ஒளி குறைவாக இருப்பதால், தசைகள் சுருங்கி விறைப்பாக இருக்கும். காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் போது உடலுக்குள் வெப்பத்தை உற்பத்தி செய்வதற்காக தசைகள் சுருங்க ஆரம்பிக்கும். அப்படி உடலானது வெப்பத்தை உற்பத்தி செய்ய முயற்சிப்பதை வெளிக்காட்டும் ஓர் அறிகுறி தான் உடல் நடுக்கும்.

குளிர்காலத்தில் ஏற்படும் உடல் வலி, தசை விறைப்பைக் குறைத்து, உடலை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்துக் கொள்ள யோகாசனங்கள் பெரிதும் உதவி புரியும். எப்படியென்றால் யோகா செய்யும் போது உடல் முழுவதுமாக பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக குளிர்காலத்தில் சந்திக்கும் உடல் வலி மற்றும் மூட்டு அசௌகரியங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. இப்போது குளிர்காலத்தில் ஏற்படும் உடல் வலி மற்றும் விறைப்பை தடுக்க உதவும் சில யோகாசனங்களைக் காண்போம். இந்த யோகாசனங்களை தினமும் காலையில் செய்து வந்தால், குளிர்காலத்திலும் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

1. உத்தனாசனம் (Uttanasana)
* முதலில் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு நேராக நிற்க வேண்டும்.
* பின் மெதுவாக முன்னோக்கி குனிய வேண்டும்.
* அப்படி குனியும் போது உள்ளங்கைகளை தரையில் வைப்பதை குறிக்கோளாக கொளள வேண்டும்.
* உங்களால் உடலை போதுமான அளவு வளைக்க முடியாவிட்டால், கால் பெருவிரல்களைத் தொடுவது போதுமானதாக இருக்கும். ஆனால் முடிந்த வரை தரையைத் தொட முயற்சிப்பது பயனுள்ளதாக இருக்கும்.
* இந்த நேரத்தில் முகமானது கால்களை எதிர்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அதாவது தலைக்கு மேல் தரை இருக்க வேண்டும்.
* இப்படி சில முறை சிறு சிறு இடைவெளியில் செய்ய வேண்டும்.

2. பச்சிமோத்தனாசனம் (Paschimottanasana)
* முதலில் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு கால்களை நீட்டி நேராக உட்கார வேண்டும்.
* பின் இந்நிலையில் மெதுவாக உங்கள் உடலை முன்னோக்கி கால்களுக்கு அருகே முடிந்தவரை கொண்டு வர வேண்டும். அப்போது உங்கள் கால்களை கைகளால் பிடித்துக் கொண்டால், சற்று எளிதாக இருக்கும்.
* இந்த நிலையில் உங்கள் வயிறு மற்றும் மார்பு தொடைகளைத் தொட வேண்டும்.
* முகமானது கால்களை நோக்கியோ அல்லது உங்களுக்கு எது வசதியோ அந்நிலையில் வைத்துக் கொள்ளலாம்.
* இந்த நிலையில் 10-20 நொடிகள் இருந்து, பின் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
* இந்த மாதிரி உங்களால் எத்தனை முறை செய்ய முடியுமோ அவ்வளவு முறை செய்யலாம்.

3. அதோ முக மர்ஜாரியாசனம் (Adho mukha Marjariasana)
* முதலில் படத்தில் காட்டப்பட்டவாறு கைகள் மற்றும் கால்களை தரையில் ஊன்றி, குழந்தைகள் தவழும் நிலையில் இருக்க வேண்டும்.
* பின் முதுகை மேலே உயர்த்தி, மலை போன்ற நிலையில் இருக்க வேண்டும்.
* அப்படி செய்யும் போது, முகத்தை உள்நோக்கி தாடைப்பகுதி மார்பு பகுதியை தொடுமாறு இருக்க வேண்டும்.
* பின்பு முதுகை கீழேநோக்கி தள்ளி, 'U' வடிவில் இருக்க வேண்டும்.
* அப்படி செய்யும் போது, முகம் மேல் நோக்கி இருக்க வேண்டும்.
* இப்படி தொடர்ந்து உங்களால் முடிந்த வரை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.

4. அதோ முக ஸ்வனாசனா (Adho mukha Svanasana)
* முதலில் தரையில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் படத்தில் காட்டப்பட்டவாறு, உடற்பகுதியை மெதுவாக மேலே உயர்த்து, மலை போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.
* கைகள் தோள்பட்டைக்கு அருகே இல்லாமல் படத்தில் காட்டப்பட்டவாறு சற்று தொலைவில் இருக்க வேண்டும்.
* இந்நிலையில் தரையில் உள்ளங்கைகள் மற்றும் பாதங்கள் மட்டுமே இருக்க வேண்டும். முகம் உள்நோக்கி இருக்க வேண்டும்.
* இந்த ஆசனத்தில் உடல் முக்கோண வடிவில் இருக்க வேண்டும். இந்த நிலையில் சில வினாடிகள் இருந்து, பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த ஆசனத்தை குறைந்தது 10 முறை செய்ய வேண்டும்.

5. புஜங்காசனம் (Bhujangasana)
* முதலில் படத்தில் காட்டப்பட்டவாறு தரையில் குப்புற படுக்க வேண்டும்.
* பின் உள்ளங்கைகளை பக்கவாட்டில் தோள்பட்டைக்கு அருகே வைத்து, உடலை மேலே மெதுவாக உயர்த்த வேண்டும்.
* இந்த நிலையில், தரையைத் தொடும் ஒரே உடல் உறுப்புக்கள் என்றால் உள்ளங்கைகள் மற்றும் கீழே உடலாக மட்டுமே இருக்க வேண்டும்.
* இந்த நிலையில் 30 நொடிகள் இருந்து, பின் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
* இப்படி இந்த ஆசனத்தை 3-4 முறை செய்ய வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களையும் குளிர்காலத்தில் செய்து வந்தால், உடல் வலியின்றி நன்கு ஆரோக்கியமாக இருக்கும். நீங்களும் தினமும் இந்த ஆசனங்களை செய்து பயன் பெறுங்கள்.



Click it and Unblock the Notifications