Latest Updates
-
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
உலகம் முழுக்க பெண்களை அதிகம் தாக்கும் டாப் 5 புற்றுநோய்கள் இதுதான்... கவனமாக இருங்க...!
புற்றுநோய் என்பது அனைத்து பாலினத்தவர்களையும் பாதிக்கும் ஒரு தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தான உடல்நலப் பிரச்சினையாகும்.
புற்றுநோய் என்பது அனைத்து பாலினத்தவர்களையும் பாதிக்கும் ஒரு தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தான உடல்நலப் பிரச்சினையாகும். இருப்பினும், பெண்களுக்கு மார்பகம், கருப்பை, கருப்பை வாய் மற்றும் எண்டோமெட்ரியல் புற்றுநோய்கள் உட்பட சில வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளன. இந்த புற்றுநோய்கள் ஒரு பெண்ணின் உடல் மற்றும் மனஆரோக்கியத்திலும், அவர்களது வாழ்க்கைத் தரத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

புற்றுநோய் நிபுணர்களின் கூற்றுப்படி, குறிப்பாக மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட சில வகையான புற்றுநோய்களுக்கு பெண்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளது. இந்த பதிவில் பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

நுரையீரல் புற்றுநோய்
பெண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதால் நுரையீரல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது. சிகரெட் பிடிப்பதால், ஆண்களை விட பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து அதிகம் என்று தெரிகிறது. புகைபிடிக்காதவர்களிலும், ஆண்களை விட பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மார்பக புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களிடம் அதிகமாக கண்டறியப்படும் புற்றுநோயாகும். ஒரு பெண் உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாமல் இருப்பது மார்பக புற்றுநோயை உருவாக்கும் ஆபத்தை அதிகரிக்கிறது. பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்த புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. ஆரோக்கியமான எடையுடன் இருக்கும் வயதான பெண்களுடன் ஒப்பிடுகையில், அதிக எடை அல்லது பருமனானவர்களுக்கு மார்பக புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து அதிகம்.

பெருங்குடல் புற்றுநோய்
பெருங்குடல் புற்றுநோய் பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் முக்கிய இடத்தில் உள்ளது. இது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம், ஆரம்பகால கண்டறிதல், வழக்கமான பரிசோதனைகள், முறையான சிகிச்சை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, பெண்கள் இந்த நோய்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்கலாம் .

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பெண்களிடையே மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகும். இது கருப்பை வாயின் உயிரணுக்களில், புணர்புழையிலிருந்து கருப்பையின் நுழைவாயிலில் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் 35 முதல் 44 வயதுக்குட்பட்ட அரை மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்டுகின்றனர், மேலும் இதில் கிட்டத்தட்ட 300000 பெண்கள் மரணமடைகின்றனர். பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் HPV ஐப் பெறுவார்கள், ஆனால் இது பொதுவாக கண்டறியப்படாது, ஏனெனில் அவர்களின் உடல் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன. இருப்பினும், உங்கள் உடல் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவில்லை என்றால், அது உங்கள் கருப்பை வாயின் செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றும். வழக்கமான மகளிர் மருத்துவ பரிசோதனைகள், HPV தடுப்பூசி, பாப் சோதனைகள் மற்றும் பாதுகாப்பான உடலுறவு ஆகியவை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான முக்கியமான வழிகளாகும்.

கருப்பை புற்றுநோய்
கருப்பை புற்றுநோயானது பெண்களிடையே புற்றுநோய் இறப்புகளுக்கு ஐந்தாவது பொதுவான காரணமாக உள்ளது மற்றும் இது பெரும்பாலும் அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அதன் அறிகுறிகள் பெரும்பாலும் தெளிவற்ற வையாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications