Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
டெங்கு தீவிரமாக இருந்தால் வெளிப்படும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
கடுமையான டெங்குவிற்கு உடனடி சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும். சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், நோயாளி இறக்கக்கூடும்.
கொரோனாவை அடுத்து தற்போது நாட்டின் பல மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வழக்குகள் அதிகமாக காணப்படுகிறது. இந்த டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் உட்பட பெரியவர்களும் இறக்கும் நிலை உள்ளது. டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது பெண் ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்கள் கடிப்பதால் வரக்கூடிய ஒரு கொடிய தொற்று. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்கியவுடன் டெங்கு வழக்குகளும் அதிகரிக்கின்றன.

டெங்குவின் அறிகுறிகள் சில மணிநேரங்களில் தீவிரமடையும் மற்றும் அதன் கடுமையான நிலை சில நேரங்களின் ஆபத்தானதும் கூட. கடுமையான டெங்குவிற்கு உடனடி சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும். சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், நோயாளி இறக்கக்கூடும்.
இம்மாதிரியான சூழ்நிலைகளில் ஒவ்வொருவரும் டெங்குவின் தீவிர அறிகுறிகளை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். அதனால் சரியான நேரத்தில் டெங்கு நோயாளிக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்கி, உயிரைக் காப்பாற்ற முடியும்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்
ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தால், அவருக்கு அதிக காய்ச்சலுடன் பின்வரும் அறிகுறிகளுள் ஏதேனும் 2 அறிகுறிகளும் இருக்கும்.
* கடுமையான தலைவலி
* கண்களுக்கு பின் வலி
* தசை மற்றும் மூட்டு வலி
* வாந்தி
* வீங்கிய சுரப்பிகள்
* அரிப்பு/தடிப்புகள்
இந்த அறிகுறிகள் 2-7 நாட்கள் வரை நீடித்திருக்கும் மற்றும் பெரும்பாலான மக்கள் ஒரு வாரத்திற்கு பின் குணமாகிவிடுவார்கள்.

தீவிர டெங்குவின் அறிகுறிகள்
டெங்கு தொற்று ஏற்பட்ட 3-7 நாட்களில் எவ்வித முன்னேற்றமும் தெரியாவிட்டால், நோயாளி நோயின் அடுத்த கட்டத்திற்கு செல்வார். அதுவும் அந்நோயாளி கடுமையான டெங்குவைக் கொண்டிருந்தால், அவருக்கு 24-48 மணிநேரத்திற்கு பின் காய்ச்சலுடன் பின்வரும் அறிகுறிகள் தெரியும். அந்த அறிகுறிகளாவன:
* கடுமையான வயிற்று வலி
* தொடர் வாந்தி (24 மணிநேரத்தில் குறைந்தது 3 முறை)
* மூக்கில் இரத்தம் அல்லது ஈறுகளில் இரத்தம்
* இரத்த வாந்தி
* மூச்சுத் திணறல்
* மலத்தில் இரத்தம்
* களைப்பு
டெல்லியின் HCMCT மணிபால் மருத்துவமனையின் உள் மருத்துவத் துறை தலைவர் டாக்டர் சாரு கோயலின் கூற்றுப்படி, இந்த அறிகுறிகள் தோன்றினால் நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

டெங்கு குறித்த பிற முக்கிய விஷயங்கள்...
டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் மற்றும் டெங்கு அதிர்ச்சி நோய்க்குறி போன்றவை மிகவும் ஆபத்தானவை. இவற்றில் டெங்கு அதிர்ச்சி நோய்க்குறி அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில் இந்நோய்க்குறியால் உடலின் பல பாகங்கள் அதிர்ச்சியின் காரணமாக செயலிழக்கின்றன.
இது தவிர, டெங்கு நோயாளிகள் நாடித்துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர் கழிப்பதையும் கண்காணிப்பது முக்கியம். ஒருவேளை இரத்தப்போக்கு அல்லது பிளேட்லெட் எண்ணிக்கை 20,000-க்கும் குறைவாக இருக்கும் போது, பிளேட்லெட் மாற்றுதல் தேவைப்படுகிறது.
டெங்கு உள்ள நோயாளிக்கு 20,000-க்கும் அதிகமான பிளேட்லெட் எண்ணிக்கை இருந்தால், கவலைப்பட தேவையில்லை. ஆனால் சந்திக்கும் அறிகுறிகளில் வாந்தி, அடிவயிற்று வலி மற்றும் அசௌகரியத்தை உணர்ந்தால், மருத்துவரை உடனே அணுக வேண்டும். அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் படி, பிறந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு கடுமையான டெங்கு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. மேலும் ஏற்கனவே டெங்கு வந்தவர்களுக்கும், கடுமையான டெங்குவிற்கான அபாயம் உள்ளது.

டெங்குவிற்கான சிகிச்சை
டெங்குவிற்கு சிகிச்சை அளிக்க குறிப்பிட்ட மருந்து ஏதும் இல்லை. இதற்கு காய்ச்சல் மற்றும் வலியைப் போக்கும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மேலும் அதிகளவு நீர் குடிக்கவும், எலக்ட்ரோலைட்டுகளுடன் தண்ணீர் குடிக்கவும் மற்றும் அதிகப்படியான ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தப்படுகின்றன.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, டெங்குவால் ஏற்படும் காய்ச்சல் அல்லது வலிக்கு அசெட்டமினோஃபென் அல்லது பாராசிட்டமால் கொடுக்கலாம். ஆனால் ஆஸ்பிரின் அல்லது இப்யூபுரூஃபன் போன்ற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இந்த அழற்சி எதிர்ப்பு மருந்துகள் இரத்தத்தை மெலிந்து வேலை செய்கின்றன மற்றும் இரத்தத்தை மெலிதாக்குகின்றன. இதனால் இரத்தப்போக்கு ஏற்படுத்தும் நோய்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

குறிப்பு
கடுமையான டெங்குவில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் மருத்துவ பராமரிப்பைப் பொறுத்து உயிர்கள் காப்பாற்றப்படும். எனவே உங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளோருக்கோ காய்ச்சல் இருந்தால், எந்த மருந்தையும் நீங்களாக எடுப்பதற்கு பதிலாக, முதலில் மருத்துவரை அணுகுங்கள். இதனால் நோயை கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து உயிர் பிழைக்க முடியும்.



Click it and Unblock the Notifications
