Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
பெண்களின் குறைந்த பாலியல் ஆசையை உடனடியாக அதிகரிக்க இந்த 5 உணவுகளில் ஒன்று போதுமாம்...!
பாலியல் பிரச்சினைகள் தற்போது இளைஞர்களிடையே அதிகரித்து வரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்த பாலியல் பிரச்சினைகளுக்கு ஆண்-பெண் விதிவிலக்கல்ல.
பாலியல் பிரச்சினைகள் தற்போது இளைஞர்களிடையே அதிகரித்து வரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்த பாலியல் பிரச்சினைகளுக்கு ஆண்-பெண் விதிவிலக்கல்ல. இருபாலினத்தாருமே இந்த பிரச்சினைகளால் சமமான அளவில் பாதிக்கப்படுகின்றனர். கடந்த சில வாரங்களாக, நீங்கள் உடலுறவில் ஈடுபட விரும்பவில்லை என்றால், உங்கள் செக்ஸ் டிரைவ் குறைந்திருப்பதைக் குறிக்கலாம்.

உங்கள் உணர்ச்சிகள், உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவை உங்கள் பாலியல் ஆசையை பாதிக்கும் சில முக்கியக் காரணங்களலாகும். ஆனால் அதிர்ஷ்டவசமாக சில உணவுகளை உண்பதன் மூலம் அடிமட்டத்திற்கு சென்ற உங்களின் பாலியல் ஆசைகளை மீண்டும் அதிகரிக்கலாம். இந்த பதிவில் பெண்களின் பாலியல் ஆசைகளை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ப்ரோக்கோலி
உங்கள் லிபிடோவை அதிகரிக்க, வைட்டமின் சி நிறைந்த ப்ரோக்கோலியை உங்கள் சாலட்டில் அல்லது உங்கள் வழக்கமான உணவுகளில் பச்சையாகவோ அல்லது சமைத்ததாகவோ சேர்த்துக் கொள்ளுங்கள். மிக முக்கியமாக, ப்ரோக்கோலி பெண்களில் (ஆண்களுக்கும் கூட) லிபிடோவை அதிகரிப்பதற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வைட்டமின் சி மூலம் உதவுகிறது, இது பெண்களுக்கு லிபிடோவை அதிகரிப்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கிராம்பு
இந்த செக்ஸ் சூப்பர்ஃபுட் பல்வேறு வழிகளில் எடுத்துக்கொள்ளப்படலாம். முக்கியமாக உங்கள் துணையுடன் அதனை எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கிராம்பு இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக ஆண்களின் பாலியல் செயலிழப்பைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது, மேலும் பெண்களுக்கும் அதே பலன்களை அளிக்கிறது. கூடுதலாக, கிராம்பு துர்நாற்றத்திற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. பாலுணர்வை அதிகரிக்க, உங்கள் உணவில் சிறிது கிராம்பு பொடியை தெளிக்கவும்.

அத்திப்பழம்
அத்திப்பழங்கள் உங்கள் பாலியல் ஆசையை எளிதில் அதிகரிக்கும் ஒரு உணவாகும். அவை சிறந்த பெரோமோன் சுரப்பு மேம்பாட்டாளர்கள் மற்றும் கருவுறுதல் ஊக்கிகளாகக் கருதப்படுகின்றன. லிபிடோவை அதிகரிக்கும் அதிக அளவு அமினோ அமிலங்கள் அத்திப்பழத்தில் காணப்படுகின்றன. அவை ஆண்களின் பாலியல் சகிப்புத்தன்மையையும் அதிகரிக்கும்.

குங்குமப்பூ
பெண்களின் லிபிடோவைத் தூண்டும் உணவுகளை நீங்கள் தேடினால் குங்குமப்பூ உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். குங்குமப்பூ உங்கள் உணர்ச்சி உறுப்புகளுக்கு மட்டுமல்ல, உங்கள் வயிறு மற்றும் பாலியல் வாழ்க்கைக்கும் சிறந்ததாக இருக்கும். இது விலை அதிகமானதாக இருந்தாலும் நிறைவான மகிழ்ச்சியை அளிக்கிறது. குவெல்ப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குங்குமப்பூ பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தும் என்று கண்டுபிடித்துள்ளனர். 15 நிமிடங்கள் கொதிக்க வைத்த பால் அல்லது தண்ணீரில் அவற்றை ஊறவைத்து, உடலுறவுக்கு 15 நிமிடங்களுக்கு முன் குடிக்கவும்.

முட்டை
வைட்டமின்கள் பி5 மற்றும் பி6 முட்டையில் ஏராளமாக உள்ளன. அவை ஆரோக்கியமான லிபிடோவிற்கு அவசியமான ஹார்மோன் சமநிலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. முட்டைகள் மறுபிறப்பு மற்றும் கருவுறுதலைக் குறிக்கின்றன. உடலுறவுக்கு முன் கோழி முட்டைகளை பச்சையாக சாப்பிடுவது ஆண்மை மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. முட்டையில் கலோரிகள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் வலிமைக்கு ஆதாரமாக உள்ளது. அவை எல்-அர்ஜினைனின் நல்ல மூலமாகும், இது ஒரு அமினோ அமிலமாகும், இது பல்வேறு இதய நிலைகள் மற்றும் விறைப்புத்தன்மைக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications