Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
ஆண்கள் நீண்ட காலத்திற்கு விந்தணுக்களை வெளியேற்றாமல் இருந்தால் என்ன பக்கவிளைவுகள் ஏற்படும் தெரியுமா?
குறிப்பிட்ட காரணங்களுக்காக விந்தணுக்களை வெளியேற்றாமல் இருப்பது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
பொதுவாக குறிப்பிட்ட இடைவெளியில் விந்தணுக்களை வெளியேற்றுவது என்பது சீரான ஆரோக்கியத்திற்கு அவசியமானது. ஆனால் குறிப்பிட்ட காரணங்களுக்காக விந்தணுக்களை வெளியேற்றாமல் இருப்பது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். விந்தணுக்களின் வெளியேற்றம் என்பது அவ்வளவு எளிதானதல்ல.

இந்த செயல்பாட்டின் போது டெஸ்டிகளிலிருந்து விந்தணுக்கள் எபிடிமிஸ் மற்றும் வாஸ் டிஃபெரென்ஸ் வழியாக செல்கின்றன. இங்கிருந்து, இது புரோஸ்டேட்டின் விந்து வெளியேறும் குழாய்கள் வழியாக சிறுநீர்க்குழாயில் நுழைகிறது, இங்கு விந்து திரவத்துடன் கலக்கிறது, இது செமினல் வெசிகல்ஸ் மற்றும் புரோஸ்டேட் சுரப்புகளிலிருந்து வருகிறது. இடுப்பு தசைகளின் சுருக்கம் ஆண்குறியின் நுனியில் இருந்து இப்போது விந்து எனப்படும் இந்த திரவத்தை வெளியேற்றுகிறது. இந்த செயல்பாடு தடைபடும்போது அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

உடலுறவில் சிறப்பாக செயல்படமுடியாது
2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பாலியல்ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாதவர்கள் ஆணுறுப்பு விறைப்புத் தொடர்பான பிரச்சினைகளை அனுபவிப்பார்கள் என்று கண்டறியப்பட்டது. ஏனெனில் நீண்ட நாட்களாக விந்தணுக்கள் வெளியேற்றப்படாமல் இருக்கும்போது அடுத்தமுறை உறவில் ஈடுபடும்போது எரோஜனஸ் மண்டலங்களை சரியாக வழிநடத்துவதும், கையாளுவதும் கடினமாகிவிடும். எனவே உடல் இயக்கங்களை குறிப்பிட்ட இடைவெளியில் நடைபெற அனுமதிக்க வேண்டும். உடலுறவு கொள்ள இயலாவிட்டாலும், சுயஇன்பம் மூலமாவது விந்தணுக்களை வெளியேற்றுங்கள்.

புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்து
அதிகமான சுயஇன்பம் எவ்வளவு ஆபத்தானதோ அதே அளவிற்கு சுயஇன்பம் செய்யாமல் இருப்பதும் ஆபத்துதான். ஆய்வுகளின் படி இது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். வாரத்திற்கு நான்கு முதல் ஆறு முறை விந்தணுக்களை வெளியேற்றுவது புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. எனவே உங்கள் சொந்த ஆரோக்கியத்தை பராமரிக்க அடிக்கடி விந்தணுக்களை வெளியேற்றுங்கள்.

இரத்த அழுத்தம் அதிகரிக்கும்
உடலுறவு இல்லாத காலக்கட்டத்தில் இரத்த அழுத்தம் அதிகரிப்பதை நீங்கள் கவனிக்கலாம். அது தற்செயல் நிகழ்வு அல்ல என்று அறிவியல் கூறுகிறது. உண்மையில், 2006 ஆம் ஆண்டு மருத்துவ இதழில் பயோலாஜிக்கல் சைக்காலஜியில் நடத்தப்பட்ட ஆய்வில், வழக்கமான உடலுறவு கொண்டவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதை விட குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டது. இது பாலியல் மற்றும் மன அழுத்தத்திற்கு இடையிலான உறவோடு தொடர்புடையது. ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் பல மாதிரிகளைக் கட்டுப்படுத்தினர் மற்றும் அடிக்கடி விந்தணுக்களை வெளியேற்றுவது உண்மையில் மன அழுத்தத்திற்கு உங்கள் உடலின் உடலியல் பதிலை மேம்படுத்துகிறது என்று கண்டறிந்தனர். இது ஒருவரின் இரத்த அழுத்தத்தை குறைந்த அடிப்படை மட்டத்தில் வைத்திருக்கிறது.

மனஅழுத்தம் அதிகரிக்கும்
மகிழ்ச்சியான உடலுறவு நிறைந்த இரவு அல்லது சுயஇன்பம் காணும் நேரம் உண்மையில் உங்களை நன்றாக உணர வைக்கும். உங்களை சுற்றியிருக்கும் நெருக்கடிகளில் இருந்து உங்களை விடுவிக்க இது சிறந்த பயிற்சியாகும். இதற்கு அறிவியல் கூறும் என்னவெனில் உச்சக்கட்டத்தின் போது னநிலையை மேம்படுத்த உதவும் எண்டோர்பின்கள் வெளியிடப்படுகின்றன.இது உங்கள் மனநிலையை சீராக்கும். இது நடைபெறாத போது சிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் அதிக கவலைப்படுவீர்கள்.

நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடையும்
ஆண்களின் உச்சக்கட்டம் அவர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். ஆராய்ச்சியாளர்கள் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை உடலுறவு கொள்ளும் நோயாளிகளின் உமிழ்நீர் மாதிரிகளை வழங்குமாறு அவர்கள் ஒரு ஆய்வை நடத்தினர். அந்த மாதிரிகள் சளி பிடிக்கும் ஆன்டிபாடி இம்யூனோகுளோபூலின் ஏ-யின் மிக அதிக செறிவைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது. இது அவர்களை பல தொற்றுகளில் இருந்து பாதுகாக்கக்கூடும். விந்தணுக்களை வெளியேற்றாதவர்கள் இதற்கு நேர்மாறான விளைவுகளை அனுபவிப்பார்கள். அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமானதாக இருக்கும்.

வேலை செயல்திறன் குறையக்கூடும்
விந்தணுக்களை நீண்ட காலம் வெளியேற்றாமல் இருப்பது உங்களை பல வழிகளில் பாதிக்கும். முதலாவதாக நீங்கள் எதிர்பாராத நேரத்தில் கூட பாலியல் உந்துதலை பெறுவீர்கள், நீங்களே அறியாமல் சாதாரண விஷயங்களுக்குக் கூட விறைப்புத்தன்மையை அடைவீர்கள். அதேசமயம் நீங்கள் எதிர்பார்க்கும் சமயத்தில் உந்துதலை பெறாமல் போகவும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையை உள்ளடக்கிய ஆரோக்கியமான உறவை பராமரிப்பது, அனைவரும் மகிழ்ச்சியாக தங்கள் வேலையில் ஈடுபடவும் உதவும், இது ஊழியர்களுக்கும் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கும் பயனளிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. விந்தணுக்களை வெளியேற்றாமல் இருக்கும்போது உங்கள் நினைவுகள் பாலியலை சுற்றியே இருப்பதால் மற்ற வேலைகளில் நீங்கள் கவனத்தை இழக்கக்கூடும்.



Click it and Unblock the Notifications