Latest Updates
-
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
அதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்!
எடை இழப்பு என்றாலே அங்கே மெட்டாபாலிசம் என்ற சொல் அடிபட ஆரம்பித்து விடுகிறது. ஆனால் உண்மையில் எடை இழப்புக்கும் மெட்டாபாலிசத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா சொல்லுங்க...
எடை இழப்பு என்றாலே மக்கள் கண்ணை மூடிக் கொண்டு எதை வேண்டுமானாலும் நம்பத் தயாராகி விடுகிறார்கள். ஏனெனில் தற்போதைய வாழ்க்கை முறையில் மக்கள் தங்கள் எடையைக் குறைக்க ஏகப்பட்ட விஷயங்களை நாடுகின்றனர். அது சரியானதா தவறானதா என்று கூட அவர்கள் அலசி ஆராய நேரமில்லை.

அதிலும் எடை இழப்பு என்றாலே அங்கே மெட்டாபாலிசம் என்ற சொல் அடிபட ஆரம்பித்து விடுகிறது. ஆனால் உண்மையில் எடை இழப்புக்கும் மெட்டாபாலிசத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா சொல்லுங்க. மெட்டாபாலிசம் என்பது நம் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம். இது நாம் சுவாசிக்க, உணவை சீரணிக்க, செல்களை ரிப்பேர் செய்ய மட்டுமே பயன்படுகிறது. மேலும் இந்த வளர்சிதை மாற்றத்தின் மூலம் தான் நாம் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை பெற முடியும்.
ஆனால் இந்த மெட்டாபாலிசத்தையும் உடல் எடையையும் வைத்து நிறைய கட்டுக்கதைகள் கூறப்படுகிறது.

கட்டுக்கதை 1: நீங்கள் ஒல்லியாக இருந்தால் உங்கள் மெட்டபாலிக் விகிதம் அதிகமாக இருக்கும்
மெட்டபாலிக் விகிதம் என்பது உங்கள் உடலின் அளவிற்கு எதிர்மறையானது. நீங்கள் ஒல்லியாக இருந்தால் மெட்டபாலிக் விகிதம் அதிகமாக இருக்கும். இது உங்கள் உடலில் உள்ள புரத அளவை பொருத்தது. அதிகமான தசைகள் இருப்பது உங்கள் மெட்டபாலிக் விகிதத்தை அதிகமாக காட்டுகிறது. நீங்கள் ஓய்வான நிலையில் இருக்கும் போது கூட எவ்வளவு கலோரிகளை எரிக்க வேண்டும் என்பதை தசைகளின் நிறை தான் முடிவு செய்கிறது.
எனவே ஒல்லியாக இருப்பவர்கள் நிறைந்த மெட்டபாலிக் விகிதத்தை பெற்றிருப்பார்கள் என்பது சுத்தமான கட்டுக்கதை. நீங்கள் எவ்வளவு வேகமாக எடையை தூக்குகிறீர்களோ அதை பொருத்து உங்கள் கலோரியை அதிகரிக்கவும் மெட்டபாலிக் விகிதமும் அதிகரிக்கிறது. உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க கார்டியோ உடற்பயிற்சி மட்டும் காரணமாக இருக்க முடியாது. தசைகளின் நிறை வலிமையும் முக்கிய பங்கு இங்கு வகிக்கிறது.

கட்டுக்கதை 2: உங்கள் வளர்சிதை மாற்றத்தால் எதுவும் செய்ய இயலாது
மெட்டபாலிச செயல் என்பது உடலில் உள்ள தசைகளின் அடர்த்தியைப் பற்றியது. உடற்பயிற்சி உங்கள் தசைகளில் ஒரு முக்கிய விளைவுகளை ஏற்படுத்துகிறது. நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் கார்டியோ ரீதியான உடற்பயிற்சிகள் சிறந்தது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சியை பொருத்து உங்கள் மெட்டபாலிச விகிதம் மாறுபடும். அதே நேரத்தில் ஜீன்கள் உங்கள் மெட்டபாலிக் விகிதத்தை ஒழுங்குபடுத்துகிறது. இருப்பினும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி உங்களுக்கு நேர்மறையான எடை இழப்பை தருகிறது. சில மரபணு ரீதியான நோய்கள் மெட்டபாலிக் விகிதத்தை குறைக்கிறது.

கட்டுக்கதை 3: விரைவான மெட்டபாலிசம் என்பது அதிகமாக சாப்பிடுவது, ஒழுங்கற்ற கலோரிகள்
சிலர் நினைக்கின்றனர் ஒழுங்கான மெட்டபாலிசம் என்பது எதை வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடுவது உள்ளே தள்ளுவது என்று தவறாக நம்புகின்றனர். ஆனால் உண்மையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது சமநிலையில் ஆரோக்கியமான உணவுகளை எடுப்பதும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பராமரிப்பதே ஆகும். நீங்கள் என்ன சாப்பிட்டாலும் அது உடல் செயல்பாட்டுக்கு தேவையான கொழுப்பாகவும், ஆற்றலாகவும் மாற்றப்படுகிறது. நீங்கள் அதிகமான ஜங்க் உணவுகளை எடுத்துக் கொண்டால் அதிகமான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மெட்டா பாலிசம் என்பது உடல் எடையை மட்டும் குறித்ததல்ல அது ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் குறிக்கிறது.

கட்டுக்கதை 4: கொஞ்சம் கொஞ்சமாக உணவை அதிக தடவை எடுத்துக் கொள்வது மெட்டபாலிசத்திற்கு நல்லது
ஒரே நேரத்தில் அதிகமான உணவை எடுத்துக் கொள்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய இடைவெளிகளில் எடுத்துக் கொள்வது சிறந்தது. இது உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். இருப்பினும், எடை இழப்பு நீங்கள் உண்ணும் உணவின் எண்ணிக்கையால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் இதன் மூலம் நாம் என்ன, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இதற்காகத் தான் பல ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒரு நோக்கத்துடன் சாப்பிடுவதை விட கவனத்துடன் சாப்பிடும் கலையை வலியுறுத்துகின்றனர்.
பல உணவுகளை சாப்பிடும் போது கலோரிகளை கணக்கிடுவதில் தவறுகளைச் செய்யலாம். எடை இழப்பு கலோரி உட்கொள்ளலுக்கு அப்பாற்பட்டது. உதாரணமாக ஒரு டோனட்டை எடுத்தோம் என்றால் பட்டியலில் உள்ள அளவை விட புரதத்தின் அளவு அதில் அதிகமாக இருக்கலாம். இதில் நமது ஆரோக்கியத்திற்கும் இதயத்திற்கும் என்ன தேவை என்பதை உணர்ந்து புரிந்து கொண்டு சாப்பிட முயல வேண்டும். அதே கலோரி எண்ணிக்கையை வேறு வடிவத்தில் சாப்பிடுவதன் மூலம் தந்திரமாக மனதைத் மாற்றலாம்.

முடிவு
எனவே மெட்டபாலிசம் என்பது உடல் எடையை பற்றியது மட்டுமல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பற்றியதும் கூட என்பதைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
