Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்..
ஆஸ்துமா மற்றும் உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க 'இந்த' ஒரு பழத்தை சாப்பிட்டா போதுமாம் தெரியுமா?
இந்த இனிப்பு மற்றும் சிட்ரஸ் பழம் மூளையில் செரோடோனின் அளவை வெளியிடுவதன் மூலம் ஒழுங்கற்ற தூக்கத்தை சரிசெய்ய உதவுகிறது. இது உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்து தூக்கத்தைத் தூண்டுகிறது.
நம் அன்றாட உணவில் பழங்களைச் சேர்ப்பதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளைப் பற்றி நம் சிறிய வயது முதலே நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. நம் ஆரோக்கியத்தில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒழுங்கற்ற தூக்க முறைகள் அல்லது மோசமான உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை நோய்கள் மிகவும் பொதுவானவை. இருப்பினும், தினசரி உணவில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களைச் சேர்ப்பது உண்மையில் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கும் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். குளிர்காலத்தில் பழங்களை பெரும்பாலும் மக்கள் விரும்புவதில்லை.

ஆனால், இந்த அயல்நாட்டு பழத்தை சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் என்பது தெரியுமா? ஆம், இந்த அயல்நாட்டுப் பழத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆய்வு கூறுவது
ஒரு ஆய்வின்படி, 100 கிராம் கிவி பழத்தில் உடலுக்கு 92.7 சதவீத வைட்டமின் சி சத்தை கொடுக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, பருவகால நோய்களுக்கு எதிராக எதிர்ப்பை உருவாக்குகிறது மற்றும் செல் மீளுருவாக்கம் அதிகரிக்கிறது. இந்த பழத்தை உங்கள் தினசரி உணவில் சேர்த்து ஆரோக்கியமாக இருங்கள்.

ஆஸ்துமா
நிபுணர்கள் மற்றும் ஆய்வுகளின்படி, வைட்டமின் சி நிறைந்த பழங்களைச் சேர்ப்பது ஆஸ்துமா, மேல் சுவாசக் குழாயில் உள்ள நெரிசல் போன்ற சுவாச நோய்களை மேம்படுத்த உதவுகிறது மற்றும் நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த உண்மையை நிறுவ இன்னும் நிறைய ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

இரத்த சோகையை சரி செய்யலாம்
கிவியில் உள்ள வைட்டமின் சி மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் இரைப்பைக் குழாயில் உள்ள உணவில் இருந்து இரும்பை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவும். மேலும், இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் இரத்த சோகையை சரிசெய்யவும் உதவுகிறது.

தூக்கத்தை தூண்டும்
இந்த இனிப்பு மற்றும் சிட்ரஸ் பழம் மூளையில் செரோடோனின் அளவை வெளியிடுவதன் மூலம் ஒழுங்கற்ற தூக்கத்தை சரிசெய்ய உதவுகிறது. இது உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்து தூக்கத்தைத் தூண்டுகிறது.

நீரிழிவு நோய்
கிவியில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், ஒரு கிவியில் சுமார் 42 கலோரிகள் மற்றும் 10 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. மேலும், இது குறைந்த கிளைசெமிக் தாக்கத்தை கொண்டுள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.



Click it and Unblock the Notifications
