Latest Updates
-
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
உலகில் 92 நாடுகளில் நடைமுறையில் உள்ள பெண் பிறப்புறுப்பு சிதைவு சடங்கு... தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
பெண் பிறப்புறுப்பு சிதைவை முடிவுக்கு கொண்டு வரவே ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 06 ஆம் தேதி சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
International Day of Zero Tolerance for Female Genital Mutilation: என்ன தான் நாகரிகமான உலகில் வாழ்ந்து வந்தாலும், உலகின் சில பகுதிகளில் இன்னும் பெண்களின் பிறப்புறுப்பை சிதைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. அதுவும் உலகில் சுமார் 200 மில்லியன் பெண்களின் பிறப்புறுப்பின் வெளிப்புறம் வெட்டப்பட்டோ, மாற்றப்பட்டோ உள்ளது. இந்த பெண் பிறப்புறுப்பு சிதைவை முடிவுக்கு கொண்டு வரவே ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 06 ஆம் தேதி சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

முந்தைய காலத்தில் சிறுமியாக இருக்கும் போதே பெண்களின் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டது. ஆனால் இன்றும் உலகின் சில பகுதிகளில் இந்த கொடிய செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தெரியுமா? ஆம் இந்த கொடிய நடைமுறையானது இன்றும் ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கின் சில பகுதிகளிலும் உள்ளது. இது தவிர ஐரோப்பா, வட மற்றும் தென் அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் இப்பழக்கம் உள்ளது.

பெண் பிறப்புறுப்பு சிதைவு என்றால் என்ன?
பெண் பிறப்புறுப்பு சிதைவு என்னும் சடங்கில் பெண்ணின் பிறப்புறுப்பின் வெளிப்புறம் வெட்டப்படும் அல்லது நீக்கப்படுகிறது. இது ஒரு மனித உரிமை மீறல் என ஐ.நா கூறுகிறது. இந்த கொடிய நடைமுறையை நிறுத்த 2012 டிசம்பரில் ஐ.நா சபை தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த கொடுமையான சடங்கினால் உலகளவில் 200 மில்லியன் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய பழக்கத்தால் சில பெண்கள் மரணத்தை கூட சந்திப்பதுண்டு. பெரும்பாலும் இம்மாதிரியான சடங்கு கட்டாயத்தின் பேரில் பெண்களின் விருப்பத்திற்கு எதிராகவே செய்யப்படுகிறது.

எப்படி செய்யப்படுகிறது?
ஆப்பிரிக்காவில் உள்ள 20 நாடுகளில் இந்த சடங்கானது இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சடங்கானது 5-7 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு நடத்தப்படும். இந்த சடங்கை செய்வதற்கு அந்த குழந்தையின் தாய், அவர்கள் இனத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவரை அழைத்து, அந்த குழந்தையை படுக்க வைத்து, குழந்தையின் பிறப்புறுப்பில் உள்ள கிளிட்டோரிஸ் என்ற உணர்வு முடிச்சை வெட்டி எடுத்துவிட்டு, பின் துருப்பிடித்த பிளேடு கொணடு யோனியின் உள் உதடுகளை கண்டபடி கிழித்துவிடுவார் அந்த மூதாட்டி. பின்னர் கசியும் இரத்தத்தை அழுக்குத் துணியால் துடைத்துவிட்டு, பிறப்புறுப்பின் மேல் உதடுகளில் சிறிய ஓட்டை மட்டும் விட்டு, ஊசியால் தைத்துவிடுவாராம். அந்த சிறிய ஓட்டையின் வழியாகவே சிறுநீர் கழிக்க முடியும். மேலும் அந்த ஓட்டையின் வழியாகத் தான் மாதவிடாய் பிரச்சனையையும் சமாளிக்க வேண்டும். அதுவும் இந்த உறுப்பு சிதைவு செய்த 40 நாட்கள் வெளியே சொல்ல முடியாத துயரங்களை அந்த குழந்தை சந்திக்க நேடும். அதிலும் பருமடைந்துவிட்டால், இந்த பிரச்சனை இன்னும் அதிகரிக்கும்.

எதனால் இப்பழக்கம் வழக்கத்தில் உள்ளது?
இந்த பழக்கம் எப்படி வந்தது என்று சரியாக தெரியவில்லை. ஆனால் இம்மாதிரியான ஒரு கொடிய பழக்கத்திற்கு மதம் சார்ந்த நம்பிக்கைகளும், சில மூடநம்பிக்கைகளும் தான் முக்கிய காரணம். பலர் இந்த வழக்கமானது பெண்களை திருமணத்திற்கு தயார் செய்வதற்காக செய்வதாகவும், ஆண்களின் உடலுறவு சுகத்தை அதிகரிக்கவும் செய்வதாக கூறுகின்றனர். ஒருவேளை பெண்கள் இந்த சடங்கை செய்யாவிட்டால், அப்பெண்கள் அசுத்தமானவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் இது ஒரு பெண்களுக்கு எதிரான வன்முறையாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
பெண் பிறப்புறுப்பு சிதைவானது பெண்களின் இனப்பெருக்க மற்றும் பாலியல் ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவை பின்வருமாறு:
* சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீர் பாதை தொற்று
* பிறப்புறுப்பு தொற்றுகள், அரிப்பு
* வலிமிக்க மாதவிடாய் காலங்கள், மாதவிடாய் காலத்தில் இரத்தம் வெளியேறுவதில் சிரமம்
* உடலுறவின் போது மிகுந்த வலி மற்றும் திருப்தியில்லாமை

முடிவு
பெண் பிறப்புறுப்பு சிதைவு என்பது பெண்களின் மனித உரிமைகளை மீறுவதாகும். சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு தினமானது மருத்துவ காரணங்களுக்காக மட்டுமின்றி, பெண்களுக்கு நடக்கும் கொடுமையை கண்டிக்கும் ஒரு நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும் 2030 ஆம் ஆண்டிற்குள் பெண் பிறப்புறுப்பு சிதைவை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. மற்றும் பிற சமூக இயக்கக் குழுக்கள் தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
