கொரோனாவுடன் பரவி வரும் பன்றிக்காய்ச்சலிருந்து உங்களை எப்படி பாதுகாத்துக்கணும்னு தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, மக்களை அச்சுறுத்தி வரும் வேலையில், பன்றிக்காய்ச்சலும் தற்போது பரவி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, மக்களை அச்சுறுத்தி வரும் வேலையில், பன்றிக்காய்ச்சலும் தற்போது பரவி வருகிறது. உலகெங்கிலும் உள்ள பன்றிகளில் காணப்படும் பொதுவான தொற்றுநோயான எச் 1 என் 1 ஸ்வைன் இன்ஃப்ளூயன்ஸாவுக்கு வழங்கப்பட்ட பெயர் பன்றிக் காய்ச்சல். இது பன்றிகளிலிருந்து மனிதர்களுக்கும், பின்னர் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் பரவுகிறது. இது சுவாசக்குழாய் தொற்று, காய்ச்சல், சளி, தொண்டை புண், பசியின்மை குறைதல், வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளை உருவாக்கும் ஒரு வைரஸ் நோயாகும். 2009 ஆம் ஆண்டில், எச் 1 என் 1 வைரஸ் காரணமாக ஏற்பட்ட காய்ச்சல் உலகளவில் மனிதர்களைப் பாதித்துள்ளது. அதனால்தான் உலக சுகாதார நிறுவனம் இதை ஒரு தொற்றுநோயாக அறிவித்தது.

Healthy Tips On How To Prevent Swine Flu

பன்றி இறைச்சி உற்பத்தியாளர்கள் அல்லது கால்நடை மருத்துவர்கள் போன்ற பன்றிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் மனிதர்களுக்கு பன்றி காய்ச்சல் தொற்று ஏற்படுகிறது. பன்றிக்காய்ச்சல் வைரஸின் மரபணு மாறுபாடு காரணமாக வைரஸின் பரவல் தொற்றுநோயாக மாறுகிறது. வைரஸின் இந்த புதிய மாற்றம் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இது மனிதர்களிடமிருந்து மனிதனுக்கு பரவுவதன் மூலமும் மற்றவர்களை அதிகம் பாதிக்கின்றன. பன்றிக்காய்ச்சலில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான ஆரோக்கிய உதவிக்குறிப்புகளை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பன்றிக் காய்ச்சலைத் தடுப்பது எப்படி

பன்றிக் காய்ச்சலைத் தடுப்பது எப்படி

எந்தவொரு வகை ஆன்டிஜெனையும் அனுபவித்தவுடன் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யத் தொடங்கும் வகையில் நமது நோயெதிர்ப்பு அமைப்பு வலுப்பெறுகிறது. எனவே, பன்றிக்காய்ச்சலைத் தடுப்பதற்கான சிறந்த வழி, ஒரு நல்ல நோயெதிர்ப்பு சக்தியைப் பராமரிப்பதன் மூலம், அது நம் உடலில் நுழையும் அனைத்து ஆன்டிஜென்களுக்கும் எதிராக திறமையாக போராட முடியும். பன்றிக்காய்ச்சலைத் தடுக்க உதவும் சில உதவிக்குறிப்புகளை இங்கே பாருங்கள்.

ஏராளமான தண்ணீர் குடிக்கவும்

ஏராளமான தண்ணீர் குடிக்கவும்

உடலிலிருந்து நீரை இழப்பது நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் இழப்பு போன்ற கடுமையான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும். இது சிறுநீரக நோய்கள், தலைவலி, சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஏராளமான தண்ணீரைக் குடிப்பது தொடர்ச்சியான வழிமுறைகளை திறமையாக முடிக்க நம் உடலுக்கு உதவுகிறது மற்றும் முக்கிய உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தூய்மை மற்றும் சுகாதாரத்தை பராமரிக்கவும்

தூய்மை மற்றும் சுகாதாரத்தை பராமரிக்கவும்

பருவகால அல்லது தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க, உங்கள் வாழ்க்கைச் சூழலைச் சுற்றி தூய்மையைப் பேணுவதும், நல்ல சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதும் சிறந்த வழியாகும். பன்றிக் காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் போன்ற தொற்றுநோய்களில் பெரும்பாலானவை பாதிக்கப்பட்ட காற்று நீர்த்துளிகளால் பரவுகின்றன. எனவே, எங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும், ஆல்கஹால் அடிப்படையிலான ஹேண்ட்வாஷ் மூலம் கைகளை கழுவுவதன் மூலமும் பன்றிக்காய்ச்சல் அபாயத்தை பெரிய அளவில் குறைக்க முடியும்.

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு

நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க சிறந்த வழிகளில் ஒன்று சீரான உணவு உண்பது. இது வைரஸிலிருந்து சிறந்த பாதுகாப்பிற்கு பங்களிக்கிறது. வைட்டமின் டி, சி, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்த உணவுகளை நம் அன்றாட உணவில் சேர்ப்பது நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அனைத்து நோய்க்கிருமிகளையும் தடுக்க உதவுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடல் நலம்

உடல் நலம்

வழக்கமான உடற்பயிற்சிகள் அல்லது எந்தவிதமான உடல் செயல்பாடுகளை செய்வது நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. உடல் பயிற்சிகள் நமது நோயெதிர்ப்பு உயிரணுக்களை செயல்படுத்துகின்றன. அவை நம் உடலில் நுழையும் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. தினசரி 30 நிமிட உடற்பயிற்சி செய்வது, நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

தூக்கமின்மை அல்லது மோசமான தூக்க பழக்கம் மனிதர்களை பல தொற்றுநோய்களுக்கு ஆளாக்கக்கூடும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. சரியான தூக்கம் நம் உடலில் உள்ள பல அத்தியாவசிய ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த உதவுவதால் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கிறது. தூக்க முறை தடைபடும்போது, பயனுள்ள ஹார்மோன்களின் முறையான சுழற்சி மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தி மோசமடைந்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு வழிவகுக்கிறது.

ஆல்கஹாலை தவிர்க்கவும்

ஆல்கஹாலை தவிர்க்கவும்

ஆல்கஹாலை அதிகமாக குடிப்பது வெள்ளை இரத்த அணுக்களின் அதிர்வெண் குறைதல் மற்றும் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களின் ஆபத்து (பாக்டீரியா மற்றும் வைரஸ் இரண்டும்) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆல்கஹால் தவிர்ப்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது. இது பல்வேறு தொற்றுநோய்க்களுக்கு எதிராக நம் உடலைப் பாதுகாக்க உதவுகிறது.

வைட்டமின் சி

வைட்டமின் சி

வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது நம் உடலின் நோயெதிர்ப்பு அல்லது பாதுகாப்பு அமைப்பை அதிகரிக்க உதவுகிறது. மேலும் பல செல்லுலார் செயல்பாடுகளையும் ஆதரிக்கிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகள் நோய்க்கிருமிகளுக்கு ஒரு தடையாக செயல்படுகின்றன என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியில் ஈடுபடும் பி மற்றும் டி சத்துக்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் இது உதவுகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்கவும்

மன அழுத்தத்தைக் குறைக்கவும்

கடுமையான மன அழுத்தம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இது பல்வேறு வைரஸ் மற்றும் நுண்ணுயிர் தொற்றுநோய்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மன அழுத்தம் இல்லாமல் இருக்கும்போது நோயெதிர்ப்புத் தடுப்பு நம் உடலில் செயல்படுகிறது. வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் சரியான ஹார்மோன் பதில்களை வலுவான நோயெதிர்ப்பு அமைப்புக்கு வழிவகுக்கும் என்றும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

நோயின் போது சரியான ஓய்வு

நோயின் போது சரியான ஓய்வு

நோயெதிர்ப்பு உயிரணுக்களால் சைட்டோகைன்கள் எனப்படும் புரதத்தை வெளியிட உதவுவதால் நோயின் போது ஓய்வு மிகவும் அவசியம். சைட்டோகைன்கள் நோயெதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும், நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கும் அடுத்த நாளுக்கு ஒரு நபரைத் தயார்படுத்துவதற்கும் போதுமான ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன.

வேலைக்குப் பிறகு ஆடைகளை மாற்றவும்

வேலைக்குப் பிறகு ஆடைகளை மாற்றவும்

வேலைக்குப் பிறகு துணிகளை மாற்றுவது எவ்வாறு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது என்பதற்கு அதிக ஆதாரங்கள் இல்லை. ஆனால், இதை உங்கள் அன்றாட வாழ்க்கையில் சேர்ப்பது துல்லியமாக ஒரு நல்ல பழக்கமாகும். வேலை மற்றும் பயணத்தின் போது நம்மேல் படிந்த அழுக்கு, தொற்று, நோய்க்கிருமிகள் அனைத்தையும் அகற்ற இது உதவுகிறது.

வழக்கமான பரிசோதனை

வழக்கமான பரிசோதனை

ஒரு வழக்கமான பரிசோதனை ஒவ்வொரு மனித வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இவை உங்கள் பொது ஆரோக்கியத்தைப் பற்றிய குறிப்பை வைத்திருக்கவும், எதிர்காலத்தில் எந்த பெரிய சிக்கல்களையும் தடுக்கவும் உதவும். ஒரு மருத்துவ நிபுணரை ஒரு மாதத்திற்கு இரண்டு முறையாவது சந்திப்பது உங்கள் நல்வாழ்வை மதிப்பீடு செய்ய உதவுகிறது. எந்தவொரு நாட்பட்ட நோய்களின் அபாயத்தையும் மதிப்பீடு செய்ய இது உதவுகிறது. நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஆரம்ப கட்டத்தில் எந்தவொரு சுகாதார பிரச்சினைகளையும் கண்டறிய உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, March 20, 2020, 12:37 [IST]
Desktop Bottom Promotion