Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
குளிர்காலத்துல கீல்வாதத்தை ஏற்படுத்தும் இந்த உணவுகளை நீங்க தொடவே கூடாதாம் தெரியுமா?
ஆல்கஹால் பியூரின்களின் உன்னதமான மூலமாகும். மேலும் நீங்கள் அடிக்கடி மது அருந்தினால், யூரிக் அமிலம் அதிகரிப்பது உறுதி. மேலும், அதனுடன் கூடிய அறிகுறிகளும் அதிகரிக்கும்.
யூரிக் அமிலம் என்பது கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றால் ஆன ஒரு கரிமச் சேர்மமாகும். பொதுவாக நாம் உண்ணப்படும் பொருளில் இருந்து யூரிக் அமிலத்தை பெறுகிறோம். நாம் உண்ணும் உணவுகள் நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. யூரிக் அமிலம் பொதுவாக நமது உடல் பியூரின் என்ற பொருளை வளர்சிதை மாற்றத்தில் உற்பத்தி செய்கிறது. பியூரின் என்பது நம் உடலில் இயற்கையாக நிகழும் ஒரு பொருளாகும். ஆனால் பல்வேறு உணவுகளிலும் காணப்படுகிறது. பொதுவாக, யூரிக் அமிலம் உடலில் இருந்து சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது, ஆனால் நமது சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வெளியேற்ற முடியாதபோது, அது கீல்வாதம் எனப்படும் ஒரு மோசமான சுகாதார நிலைக்கு வழிவகுக்கிறது.

குளிர்காலத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பதையும், யூரிக் அமிலத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பதையும், யூரிக் அமிலம் கீல்வாதத்திற்கு எவ்வாறு வழிவகுக்கிறது என்பதைப் பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

யூரிக் அமிலத்திற்கும் கீல்வாதத்திற்கும் உள்ள தொடர்பு
கீல்வாதம் என்பது ஒரு மூட்டைச் சுற்றி அதிக அளவு யூரிக் அமிலம் சேரும்போது ஏற்படும் ஒரு நிலை. இது பெரும்பாலும் மூட்டுவலியின் வலிமிகுந்த வடிவம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த அதிகளவு யூரிக் அமிலம் பெரும்பாலும் படிகங்களை உருவாக்குகிறது. இது மூட்டுகளைச் சுற்றி நிறைய விறைப்பு மற்றும் அசைவற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது. இதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற பிற உறுப்புகளுக்கும் இது மேலும் ஆபத்தாக முடியும்.

குளிர்காலத்தில் பாதிப்பு அதிகரிக்கும்
அதிக அளவு யூரிக் அமிலம் உள்ள பெரும்பாலான நபர்கள் வலி, விறைப்பு போன்ற அறிகுறிகளை குறிப்பாக குளிர்காலத்தில் மோசமாக்குகிறது. பருவத்தைப் பொருட்படுத்தாமல், பிரச்சனையை மோசமாக்கும் சில உணவுகள் உள்ளன. அவற்றை நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், அவை உங்கள் நிலைமையை மேலும் மோசமாக மாற்றும். உங்கள் உணவில் இருந்து சில உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் இந்த அறிகுறிகளைப் போக்கவும், இந்த நேரத்தில் சிறிது நிவாரணம் அளிக்கவும் உதவும்.

இனிப்பு பானங்கள்
இனிப்பு பானங்கள் மூலம் பிரக்டோஸை அதிகமாக உட்கொள்வது. குறிப்பாக, அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் மூலம் கீல்வாதத்திற்கான ஆபத்து காரணியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து சர்க்கரை பானங்களிலிருந்தும் விலகி இருங்கள். பெரும்பாலான பழங்களிலும் போதுமான அளவு பிரக்டோஸ் உள்ளது, இருப்பினும் அவற்றை மிதமாக எடுத்துக்கொள்வது நல்லது. பழங்களில் இருந்து நுண்ணூட்டச் சத்துக்களைப் பெறுவதை உறுதி செய்வதோடு ஒட்டுமொத்த பிரக்டோஸ் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துகிறது.

ஆல்கஹால்
ஆல்கஹால் பியூரின்களின் உன்னதமான மூலமாகும். மேலும் நீங்கள் அடிக்கடி மது அருந்தினால், யூரிக் அமிலம் அதிகரிப்பது உறுதி. மேலும், அதனுடன் கூடிய அறிகுறிகளும் அதிகரிக்கும். எனவே, முடிந்தவரை மதுவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

இறைச்சி மற்றும் கடல் உணவு
பெரும்பாலான சிவப்பு இறைச்சி, உறுப்பு இறைச்சி, மத்தி, நெத்திலி, கானாங்கெளுத்தி போன்ற கடல் உணவுகளில் பியூரின்கள் அதிகம் இருப்பதால், வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே அவற்றை எடுத்துக்கொள்வது சிறந்தது. அதேபோல அஸ்பாரகஸ், கீரை, காலிஃபிளவர், காளான்கள், பச்சை பட்டாணி போன்ற காய்கறிகளையும் தவிர்த்து விடுங்கள். இந்த காய்கறிகளில் இறைச்சியைப் போல அதிக பியூரின் உள்ளடக்கம் இல்லை என்றாலும், உங்கள் கீல்வாத வலியைத் தூண்டும் அளவுக்கு பியூரின் உள்ளடக்கம் உள்ளது.

மனதில் கொள்ள வேண்டியவை
சில சமயங்களில், உங்கள் மனதை கட்டுப்படுத்த முடியாமால் சில உணவுகளைத் தவிர்ப்பது சாத்தியமற்றதாகிவிடும். மேலும் நீங்கள் போதுமான அளவு நீரேற்றமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். உங்கள் வழக்கமான உட்கொள்ளலை விட கூடுதலாக 50 சதவிகிதம் திரவத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக, இது குளிர்காலத்தில் அறிகுறிகளைத் தடுக்க உதவும்.



Click it and Unblock the Notifications