Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
தூங்கச் செல்லும்முன் செய்யும் இந்த எளிய செயல்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும் சரி, குறைவதும் சரி இரண்டுமே ஆபத்துதான். இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க மிகச்சிறந்த மற்றும் எளிமையான வழி தூக்கம்தான்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும் சரி, குறைவதும் சரி இரண்டுமே ஆபத்துதான். இன்று உலக அளவில் கோடிக்கணக்காணோர் சந்திக்கும் பிரச்சினை இதுதான். ஏனெனில் இந்த இரண்டு நிலைகளும் நம்முடைய செயல்பாடுகளை முடக்கக்கூடும். இரத்த சர்க்கரையை குறைக்க பல வழிகள் உள்ளது.

இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க மிகச்சிறந்த மற்றும் எளிமையான வழி தூக்கம்தான். உண்மைதான் தூங்குவதற்கு முன்னர் நீங்கள் செய்யும் சில செயல்கள் உங்களின் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். இந்த பதிவில் எப்படி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கலாம் என்று பார்க்கலாம்.

தாமதமாக உறங்க செல்லக்கூடாது
தினமும் தாமதமாக தூங்கச் செல்வதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள், குறிப்பாக விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட தாமதமாக தூங்கச் செல்வது சகஜமாகிவிட்டது. விடுமுறையை கொண்டாடும் முறையாக இதனை நினைப்பது தவறாகும். ஏனெனில் தாமதமாக தூங்கச் செல்வது உங்கள் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். நீங்கள் நீண்ட நேரம் தூங்க விரும்பினால் படுக்கைக்கு விரைவாக செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

படுக்கையில் தூங்கும் வேலையை மட்டும் செய்யுங்கள்
நீண்ட நேர வேலைக்குப் பிறகு திரும்பும் உங்களுக்கு உங்களின் படுக்கை இளைப்பாறும் இடமாக இருக்க வேண்டும். எனவே அங்கு லேப்டாப், செல்போன், அலுவலக வேலைகள் என மனஅழுத்தத்தை அதிகரிக்கும் செயல்களை செய்யாதீர்கள். இது உங்களின் தூக்கத்தை பாதிக்கும். இதனால் உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

உங்கள் பிரச்சினைகளை பேப்பரில் எழுதுங்கள்
இரவில் தூங்கும்போது உங்கள் மனதில் எந்த கவலைகளும் இருக்கக்கூடாது. அப்படி கவலைகள் இருப்பின் தூங்கச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் ஒரு பேப்பரில் உங்கள் கவலைகளை எழுதுங்கள். அதனை போக்குவதற்கான வழிகள் என்னென்ன என்று சிந்தித்து அதனையும் அந்த பேப்பரில் எழுதுங்கள். அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளுக்கான பட்டியலையும், அதனை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான திட்டத்தையும் தயார்படுத்திக் கொள்ளுங்கள். தெளிவான மனதுடன் படுக்கைக்கு செல்லுங்கள்.

படுக்கையை விட்டு எழுந்து விடுங்கள்
படுக்கைக்கு சென்று 30 நிமிடங்களுக்கு மேலும் தூக்கம் வரவில்லை என்றால் படுக்கையை விட்டு எழுந்து விடுங்கள். வேறு ஒரு தனிமையான அறைக்குச் சென்று மனதை அமைதிப்படுத்தும் ஏதாவது ஒன்றை செய்யுங்கள். அது படிப்பதாகவும் இருக்கலாம் அல்லது பாடல் கேட்பதாகவும் இருக்கலாம். இவ்வாறு செய்துவிட்டு 20 நிமிடம் கழித்து படுக்கையில் விழுந்தால் தூக்கம் விரைவில் வரும்.

வெளிச்சத்தை குறையுங்கள்
வெளிச்சம் அதிகமாக இருக்கும் அரை உங்களின் தூக்கத்தை கெடுக்கக்கூடும். படுகைக்குச் செல்லும் அரை மணி நேரத்திற்கு முன்பே அறையின் வெளிச்சத்தை குறைத்து விடுவது உங்கள் மனநிலையை அமைதியாக்கும். வெளிச்சம் குறைவாக உள்ள அறை உங்கள் மூளைக்கு இது தூங்க வேண்டிய நேரம் என்று சிக்னல் அனுப்பும். இதனால் விரைவில் உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

தண்ணீர் குடியுங்கள்
உங்கள் உடல் தொடர்ந்து நீரேற்றத்துடன் இருப்பது இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் எளிய வழியாகும். எனவே தூங்க செல்வதற்கு முன் உங்கள் உடலுக்கு தேவையான அளவு நீரை குடித்துவிட்டு செல்லுங்கள். மேலும் உடலை தொடர்ந்து நீரேற்றத்துடன் வைத்திருப்பது உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும். தொடர்ந்து தண்ணீர் குடிப்பது உங்கள் இரத்தத்தை மீண்டும் ஹைட்ரேட் செய்கிறது. இதனால் சர்க்கரை அளவு குறைவதுடன் சர்க்கரை நோய் ஏற்படும் ஆபத்தும் குறைகிறது.



Click it and Unblock the Notifications