Latest Updates
-
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா?
உங்கள் சளியின் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன நோய் ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடித்து விடலாம் தெரியும
சளி எப்பொழுதும் போல வெளியேறினால் நீங்கள் அதை பற்றி கவலை பட தேவையில்லை, ஆனால் அதன் நிறத்திலோ அல்லது அமைப்பிலோ ஏதாவது மாற்றம் தெரிந்தால் அது நிச்சயம் பிரச்சனையின் அறிகுறிதான்.
அனைவருக்கும் எளிதில் தாக்கும் ஒரு நோயென்றால் அது சளி பிடிப்பதுதான். சளி பிடிப்பது என்பது கிட்டத்தட்ட மனிதனாய் பிறந்த அனைவருக்கும் ஏற்படும் ஒரு தற்காலிக பாதிப்புதான், இதனால் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை என்று நாம் அதனை மிகவும் அலட்சியமாக நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் சளியானது நமது ஆரோக்கியத்தின் அளவீடாகும்.

சளி பிடிப்பது ஒரு வகையில் நல்லதுதான், ஏனெனில் நம் உடலில் நச்சு பொருட்கள் வெளியேற இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது. சளி எப்பொழுதும் போல வெளியேறினால் நீங்கள் அதை பற்றி கவலை பட தேவையில்லை, ஆனால் அதன் நிறத்திலோ அல்லது அமைப்பிலோ ஏதாவது மாற்றம் தெரிந்தால் அது நிச்சயம் பிரச்சனையின் அறிகுறிதான். இந்த பதிவில் சளியின் நிறம் உங்கள் உடலில் உள்ள எந்த பிரச்சினையை குறிக்கிறது என்று பார்க்கலாம்.

சளி சாம்பல் அல்லது கருப்பு நிறத்தில் இருந்தால்
உங்கள் சளியின் நிறம் அடர் சாம்பலில் இருந்தால் நீங்கள் அதிகம் புகைபிடிக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் புகைபிடிக்கும் போது அதனை உள்ளே இழுப்பதால் அந்த நச்சுப்பொருட்கள் உங்கள் மூச்சுக்குழாயில் சென்று ஒட்டிக்கொள்ளும். இது சளி வழியே வரும்போது அதனுடன் சேர்ந்து வருவதால் அதன் நிறம் மாறுபடும். ஒருவேளை நீங்கள் புகை பிடிக்காதவராக இருந்து உங்கள் சளியின் நிறம் அப்படி இருந்தால் உங்களுக்கு கடுமையான பூஞ்சை தொற்று உள்ளது என்று அர்த்தம்.

சளி மிகவும் கெட்டியாக இருந்தால்
இதன் அர்த்தம் உங்கள் உடலில் நீரின் அளவு மிகவும் குறைந்து விட்டது என்பதாகும். உடலில் நீரின் அளவு குறையும்போது அது சளியை கெட்டியாக்குவதுடன் அதனை தொண்டையில் கட்டிக்கொள்ளவும் செய்யும். இதனால் தொண்டை பகுதி வறட்சியடையும்.

சளி மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருந்தால்
இதற்கு அர்த்தம் நீங்கள் நிமோனியா, சைனஸ் அல்லது தொண்டை பாதிப்புகளால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். இல்லையெனில் உங்கள் சுவாச குழாயில் ஏதாவது பிரச்சினை இருக்கும், இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடைய வைத்திருக்கும். பச்சை நிற சளி இரத்த வெள்ளை அணுக்களில் இருந்து உருவாகிறது.

சளி சிவப்பு நிறத்தில் இருந்தால்
உங்களுக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் அல்லது இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கலாம். நாசியின் திசுக்களானது வறட்சி அடையும்போது அது இரத்தக்கசிவை ஏற்படுத்தும். சளியின் நிறம் பிங்க் நிறத்தில் இருந்தால் அது முன்னால் ஏற்பட்ட கசிவின் அடையாளம், அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்களுக்கு இப்பொழுது இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். அடிக்கடி மூக்கிற்குள் துணியை விடுவது இந்த பிரச்சினையின் முக்கிய காரணமாகும்.

நீர் போல தெளிவாக இருந்தால்
நடுத்தர நிலைமையில் இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் அது உங்கள் தொண்டைக்கும், மூக்கிற்கும் தொடர்ந்து மாறுவது போல இருந்தால் நீங்கள் அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். சுவாச மண்டலத்தை பாதிக்கும் ஏதோ தூசியை சுவாசித்துள்ளீர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

வெள்ளை நிறத்தில் கெட்டியாக இருந்தால்
நீங்கள் நோயில் விழப்போகிறீர்கள் என்று அர்த்தம். இந்த சூழ்நிலையில் நீங்கள் சோர்வாக உணருவீர்கள் அடிக்கடி தும்மல் ஏற்படும். உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் நோய்களுக்கு எதிராக போராட அதிக இரத்த வெள்ளை அணுக்களை சுரக்கும், இதனால் உங்கள் சளியின் நிறம் வெள்ளையாக மாறியிருக்கும். நீங்கள் நோயில் விழுந்திருக்கும் உங்கள் நாசி திசுக்கள் வீக்கம் அடைந்திருக்கும், அதனால் அதிக நெருக்கமாக இருப்பதால் சளி கெட்டியாக மாறிவிடும்.

மூக்கில் சளி ஒழுகி கொண்டே இருந்தால்
உங்களுக்கு அரிதான நோயான முதுகெலும்பு கசிவு திரவ நோயாக இருக்கலாம். இந்த நிலையில் முதுகெலும்பு திரவமானது மண்டை ஓட்டின் வழியாக நாசி திசுக்களின் வழியே வெளியேறும்போது ஏற்படும். இது அதீத திரவ நிலையிலும், உப்பு சுவையுடனும் இருந்தால் அது அலர்ஜி என்று தவறாக புரிந்து கொள்ளாதீர்கள், அது மூளை திரவத்தின் வெளிப்பாடாக கூட இருக்கலாம்.

சளி மோசமான துர்நாற்றத்துடன் இருந்தால்
உங்களுக்கு தொற்றுநொய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். உங்கள் சளியில் துர்நாற்றம் வீசினால் அது பெரும்பாலும் மேல் சுவாசப்பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றுநோயின் காரணமாகத்தான் இருக்கும். இப்படி சளி வெளிப்படும்போது கன்னத்தில் வலி ஏற்பட்டால் அது பல் தொற்று உங்கள் சுவாச மண்டலத்திற்கு பரவி விட்டது என்று அர்த்தம்.



Click it and Unblock the Notifications