Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
தினம் கொஞ்ச நேரம் இந்த முத்திரையை செஞ்சா என்ன நடக்கும் தெரியுமா? சித்தர்கள் என்ன சொல்றாங்கனு நீங்களே
முத்திரைகள் மற்றும் அதனால் உடலில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
முத்திரைகள் என்பது யோக ஆசனக் கலைகளில் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. அதில் நிறைய முத்திரைகள் இருக்கின்றன. பொதுவாக யோகிகளும் முனிவர்களும் யோக நிலையில் அமர்ந்திருப்பதைப் பார்த்திருப்போம்.

அவர்கள் கைகளை வைத்திருக்கும் முறை கூட முத்திரை நிலைகளில் ஒன்றாகத் தான் இருக்கும். அந்த முத்திரைகள் நம்முடைய உடலில் இயங்குகின்ற பஞ்ச பூதங்களை முறைப்படுத்தி வாதம், பித்தம், கபம் இவற்றை முறையே இயக்குகிறது.

சின் (அ) ஞான முத்திரை
இந்த சின் முத்திரையில் கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் நுனிகள் இரண்டு தொட்டுக் கொண்டு இருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் அனைத்தும் நேராக இருக்கும்படி வைக்க வேண்டும். இப்படி செய்தால் மனம் ஒருநிலைப்படும். மூளை செல்கள் புத்துணர்ச்சி அடையும். தலைவலி, கவலை, தூக்கமின்மை, கோபம் ஆகியவை விலகும்.

வாயு முத்திரை
ஆள்காட்டி விரலை கட்டை விரலினுடைய அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் வாயு தொடர்பான நோய்கள் விலகும். ரத்த ஓட்டமும் சீராகும்.

சூன்ய முத்திரை
நடுவிரலை கட்டை விரலினுடைய அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் நன்கு அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்ற பிரச்சினைகள் சரியகும். எலும்புத் தளர்ச்சி, இதய நோய்கள் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

ப்ருத்வி முத்திரை
பெவிரல் மற்றும் மோதிர விரலினுடைய நுனிப்பகுதியைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளையின் செல்கள் நல்ல ஊக்கம் பெறும்.

சூரிய முத்திரை
மோதிர விரலைக் கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இதன்மூலம் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி அதிகரிக்கும்.

வருண முத்திரை
சுண்டு விரலின் நுனியைக் கட்டை விரலின் நுனி தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருக்க வேண்டும். இதனால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமடையும். தோல் வறட்சி ஏற்படாமலும் முகப்பருக்கள் வராமலும் தடுக்கப்படும்.

பிராண முத்திரை
மோதிர விரல் மற்றும் சுண்டுவிரல் இரண்டையும் மடக்கிக் கட்டை விரலின் நுனியைத் தொட வேண்டும். மற்ற விரல்கள் யாவும் நேராக வைத்திருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி தெளிவு பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அபான முத்திரை
மோதிர விரல் மற்றும் நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியைத் தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூலநோய், வாயுத் தொல்லை ஆகியவை நீங்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் கழிவுகள் வெளியேறும்.

அபான வாயு முத்திரை
மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரலினுடைய நுனியைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இதய நோய்கள் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

லிங்க முத்திரை
இரண்டு கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள அதிகப்படியான சூட்டை சமன்படுத்தும். உடலிலிருந்து கபத்தை வெளியேற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்சினைகள் விலகும். வறட்டு இருமல் நீங்கும். நீர்க்கட்டு பிரச்சினை சரியாகும்.

அஸ்வின் முத்திரை
பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வது தான் அஸ்வினி முத்திரை ஆகும். இதை படுத்துக் கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும் பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.
இந்த முத்திரைகளைத் தொடர்ந்து செய்து வந்தால் நரம்பு மண்டலம் பலப்படும். வாயுத்தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்கும். பெண்களுக்குக் கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு உண்டாகும்.



Click it and Unblock the Notifications